“இரவிகுளம் தேசிய பூங்கா” சுற்றுலா

வாழ்க்கையில் சுமைகள், சோகங்கள், வலிகள், துரோகங்கள் போன்ற பல அனுபவங்களை நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து மனிதர்களின் மனதில் மனஅழுத்தத்தை உருவாக்குகின்றன.

இந்த மனஅழுத்தம் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களுக்கு மனிதர்களை ஆளாக்குகிறது. அதனால் இந்த நிலைமையிலிருந்து தப்பிக்கவோ அல்லது சிறிது நேரம் விலகி இருக்கவோ பலர் விரும்புகின்றனர்.

இத்தகைய சூழலில் மனிதர்கள் தங்களை மறந்து சில நாட்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் மனிதர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அந்த மனஅழுத்தத்தை குறைக்க உதவும் சிறந்த வழிகளில் ஒன்று சுற்றுலா.

சுற்றுலா பயணம் மேற்கொள்ளும்போது மனிதனின் மனம் சற்றே இலகுவாகி, மனஅழுத்தம் குறைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப அவர்களின் சுற்றுலா விருப்பங்களும் மாறுபடும்.

சிலர் இயற்கையை ரசிக்க விரும்புவார்கள், சிலர் பழமையான வரலாறு மற்றும் கலாச்சாரங்களை அறிய ஆர்வம் காட்டுவார்கள், மற்ற சிலர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அனுபவிக்க விரும்புவார்கள்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் மனிதர்கள் தங்களின் மனகவலைகளை மறக்க சுற்றுலா செல்லத் தேர்வு செய்கிறார்கள்.

நானும் அதுபோல மனதில் இருந்த சுமைகளை குறைக்க சுற்றுலா என்னும் அருமையான வழியைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், எப்படி அந்த இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும், எவ்வளவு செலவாகும் என்ற பல கேள்விகள் மனதில் தோன்றின.

நீண்ட நாட்களாக Kerala மாநில மக்களின் கலாச்சாரம், உணவு, வாழ்க்கை முறை மற்றும் அங்குள்ள சுற்றுலா இடங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் நான் சுற்றுலா செல்ல தேர்வு செய்த இடம் கேரளா.

கேரளா என்றாலே அழகான கடற்கரைகள், பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள், நறுமண பொருட்கள் மற்றும் வளமான இயற்கை சூழல் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

கேரளத்தின் இயற்கை அழகு மற்றும் மணம் நிறைந்த சூழல் அந்த மாநிலத்திற்கு ஒரு தனித்தன்மையை வழங்குகிறது.

அதுமட்டுமல்லாமல், கேரளாவில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் தனித்துவமான சிறப்பும் வரலாறும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது

இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா
இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

மூணாறு தென்னிந்தியாவின் “காஷ்மீர்”

கேரளாவில் குறைந்த செலவில் நிறைந்த சுற்றுலாவை மேற்கொள்ள நான் தேர்வு செய்த இடம் Munnar. மூணாறு தென்னிந்தியாவின் “காஷ்மீர்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அழகான மலைப்பகுதியாகும். மேலும் பசுமையாக பரந்த தேயிலை தோட்டங்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். 🌿

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் மூணாறு ஒரு சிறிய நகரமாக இருந்தாலும், வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது.

மூணாறு கேரளாவில் இருந்தாலும், இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதனால் அங்கு சென்றபோது எனக்கும் தமிழ்நாட்டில் சுற்றுலா சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

மூணாறில் பல பிரபலமான சுற்றுலா தளங்கள் இருந்தாலும், நான் சுற்றிப்பார்க்க விரும்பிய முக்கியமான இடம் Eravikulam National Park.

“இரவிகுளம்” என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது தேசிய பூங்கா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் மற்றும் வரையாடு (Nilgiri Tahr) போன்றவை தான். இந்த இடம் இயற்கை அழகும், விலங்கின பன்முகத்தன்மையும் நிறைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

வழித்தடம்

முதலில் நாம் Kerala மாநிலத்தை அடைந்து, அங்கிருந்து Munnar நகரத்திற்கு வர வேண்டும். மூணாறு – Udumalpet அல்லது உடுமலை – மூணாறு செல்லும் வழியிலேயே இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது.

இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு செல்ல, முதலில் மூணாறிலிருந்து Rajamalai என்ற இடத்திற்கு வர வேண்டும். மூணாறிலிருந்து ராஜமலை வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

ராஜமலையில் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்காவை அடைய பொதுவாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.

செயல்படும் நேரம்

இரவிகுளம் தேசிய பூங்கா பொதுவாக:

  • காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு திறந்திருக்கும்.

மேலும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சமயங்களில் பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும். அந்த காலத்தில் விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா
இரவிகுளம் தேசிய பூங்கா சுற்றுலா

இரவிகுளம் தேசிய பூங்கா – நுழைவு கட்டணம்

Eravikulam National Park பூங்காவை பார்வையிட Rajamalai அடிவாரத்தில் ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

அடிவாரத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டுகளை (Ticket) பெற்றுக்கொள்ளும் இடம் உள்ளது. அதன் மேல் தளத்தில் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்க ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு பிடித்த தேநீர், காபி போன்ற பானங்கள் மற்றும் பல வகையான நொறுக்கு தீனிகள் வாங்கி சாப்பிடலாம். நீண்ட பயணத்திற்குப் பிறகு இந்த இடம் சிறிது நேரம் ஓய்வு எடுக்க உதவுகிறது. ☕

அதற்குப் பிறகு அடுத்த தளத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையாக நின்று பேருந்தில் ஏறிச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூங்காவின் உள்ளே தனிப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்பதால், அனைவரும் இங்கு இருந்து அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளில் சென்று பார்வையிட வேண்டும்.

இந்த அலுவலகத்தில் டிக்கெட் பெறுவதற்கு இரண்டு கவுண்டர்கள் உள்ளன:

  • ஆன்லைன் பதிவு கவுண்டர்

  • நேரடி (ஆஃப்லைன்) பதிவு கவுண்டர்

ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரும்புவோர் ஒரு நாள் முன்பே டிக்கெட் பதிவு செய்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

நேரடியாக (ஆஃப்லைன்) பதிவு செய்யும்போது சில சமயங்களில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

நான் இந்த பூங்காவிற்கு செல்லும்போது ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் பதிவு செய்திருந்தேன். அப்போது ஒரு நபருக்கு ₹170 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேலும் கேமரா பயன்படுத்துவதற்கு தனியாக ₹50 கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

ராஜமலை வனவிலங்கு சரணாலயம் (Rajamalai Wildlife Sanctuary)

Rajamalai Wildlife Sanctuary என்பது Eravikulam National Park பகுதியின் முக்கியமான சுற்றுலா இடமாகும்.

ராஜமலையின் நுழைவாயிலில் இருந்து சொந்த வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக Kerala Forest Department மூலம் பேருந்துகள் மற்றும் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பேருந்தில் அல்லது பேட்டரி காரில் பயணம் செய்யலாம். பொதுவாக பேருந்தில் செல்ல குறைந்த கட்டணம், பேட்டரி காரில் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நான் குறைந்த செலவில் பயணம் செய்ய முடிவு செய்து பேருந்தில் ஏறினேன். 🚌

பேருந்து மெதுவாக நகரத் தொடங்கியதும், வழியெங்கும் பசுமையாக பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் கண்ணில் பட்டது. அந்த தேயிலை தோட்டங்களை சுற்றி பனிமூட்டங்கள் மெல்ல உருண்டோடும் காட்சி மிகவும் கண்கவர் தோற்றமாக இருந்தது.

அந்த தருணம் மனதிற்கும் கண்ணுக்கும் ஒரு தனி குளிர்ச்சியை அளித்தது. கனமாக இருந்த மனம் கூட அந்த இயற்கை காட்சிகளை பார்த்தபோது மிகவும் இலகுவாக மாறியது.

நான் சென்றபோது பனிமூட்டங்கள் தேயிலை தோட்டங்களின் மேல் மெல்ல உருண்டு நகரும் காட்சியை நேரில் காணும் அனுபவம் மிகவும் புதுமையாக இருந்தது.

சில தூரம் சென்றபோது, அருவி கொட்டும் சத்தம் மெதுவாக காதில் கேட்கத் தொடங்கியது. மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் அருவியாக பாய்ந்து வரும் காட்சி மிகவும் அழகாக இருந்தது.

பயணிக்கும் வழியெங்கும் இதுபோன்ற சிறிய நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகள் கண்களுக்கு விருந்தாக காட்சியளித்தன. இந்த இயற்கை அழகு நிறைந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ராஜமலை – வரலாறு மற்றும் பாதுகாப்பு

Kerala அரசு ஒரு காலத்தில் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சில நிலங்களை விவசாய சாகுபடிக்காக ஒதுக்கியது. ஆனால் அந்த நிலங்களை மக்கள் பெரிதாக விவசாயத்திற்கு பயன்படுத்தவில்லை.

இதனால் 1971 ஆம் ஆண்டு, அரசு அந்த நிலங்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டது. அதன் பிறகு அங்கு வாழும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 1975 ஆம் ஆண்டு அந்த பகுதியை Rajamalai Wildlife Sanctuary எனும் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.

இந்த பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததற்கான முக்கிய காரணம், அங்கு அதிக அளவில் பறவைகள், வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்ததுதான்.

அந்த உயிரினங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது Nilgiri Tahr என்று அழைக்கப்படும் வரையாடு. இந்த விலங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் காணப்படும் அரிய வகை மலை ஆடு இனமாகும்.

வரையாடு இனமானது அழிந்து வரும் அபாய நிலையில் இருந்ததால், அதன் இயற்கை வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 1978 ஆம் ஆண்டு இந்த பகுதி Eravikulam National Park என்ற தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது.

குறிஞ்சி மலர்

Eravikulam National Park என்பது இந்தியாவின் Kerala மாநிலத்தில் உள்ள Idukki District மற்றும் Ernakulam District ஆகிய மாவட்டங்களில், Western Ghats மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள ஒரு முக்கியமான தேசிய பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 97 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

கேரளாவின் உயரமான மலைத்தொடர்கள், பசுமையாக பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகள் ஆகியவை இணைந்து, இரவிகுளம் தேசிய பூங்காவை ஒரு அற்புதமான இயற்கை காட்சியாக மாற்றுகின்றன. 🌿🌄

இரவிகுளம் தேசிய பூங்கா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது Nilgiri Tahr (வரையாடு) மற்றும் Neelakurinji (குறிஞ்சி மலர்) தான். குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பது இந்த இடத்தின் மிகப்பெரிய சிறப்பாகும்.

இந்தியாவின் தேசிய விலங்கு Bengal Tiger மற்றும் தேசிய பறவை Indian Peafowl என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை என்னவென்றால், Tamil Nadu மாநிலத்தின் மாநில விலங்கு இந்த வரையாடு (Nilgiri Tahr) என்பதே ஆகும்.

இந்த அரிய வகை விலங்கினத்தை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு வருகின்றனர்.

நானும் அதே ஆர்வத்துடன் இந்த வரையாடை எப்படியாவது நேரில் காண வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணம் மேற்கொண்டேன்.

பேருந்து Rajamalai மலை உச்சியில் நின்றது. அங்கிருந்து இரவிகுளம் தேசிய பூங்காவை அடைய சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

பேருந்து கடைசியாக நிறுத்தப்படும் இடத்தில் “Story of the Park” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அருங்காட்சியகம் (Museum) உள்ளது. இங்கு சில விலங்குகளின் எலும்புக்கூடுகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பூங்காவில் வாழும் தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய முக்கியமான தகவல்கள் புகைப்படங்களுடன் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவிகுளம் தேசிய பூங்காவை பற்றிய பல தகவல்களை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த தகவல்களை பார்த்து முடித்த பிறகு ட்ரெக்கிங் (Trekking) பயணத்தை தொடங்கினால், இயற்கையையும் அதில் வாழும் உயிரினங்களையும் மேலும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

இரவிகுளம் தேசிய பூங்காவை சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகள் போதாது. கண்களுக்கு எட்டிய தூரம் வரை பசுமை பரந்து விரிந்திருக்கும்.

இந்த பூங்கா முழுவதும் மூன்று முக்கியமான தாவர சூழல்களால் சூழப்பட்டுள்ளது:

  • புல்வெளிகள் (Grasslands)

  • புதர் நிலங்கள் (Shrublands)

  • ஷோலே காடுகள் (Shola Forests)

இந்த மூன்று வகையான தாவர சூழல்களும் இணைந்து, இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு தனித்துவமான இயற்கை அமைப்பை வழங்குகின்றன.

இயற்கை அமைப்பும் அனுபவமும்

Eravikulam National Park பூங்காவை சுற்றி பார்க்கும் போது முதலில் கண்களில் படுவது புல்வெளிகள் தான். இந்த புல்வெளிகள் பூங்காவை சுற்றியுள்ள உயரமான மலைப்பகுதிகளில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

பசுமையாக விரிந்த இந்த புல்வெளிகள் அந்த இடத்தின் இயற்கை அழகை மேலும் உயர்த்துகின்றன. 🌿

பூங்காவில் நடைபயணம் மேற்கொள்ளும் போது பல இடங்களில் புதர்கள் காணப்படும். இந்த புதர் நிலங்கள் பெரும்பாலும் பாறைகளின் அடிவாரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.

மலைகள் மற்றும் பீடபூமிகளுக்கு இடையே காணப்படும் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் ஷோலே காடுகள் (Shola Forests) அமைந்துள்ளன. இந்த பகுதிகள் மிகவும் அடர்ந்த காடுகளாகவும், இயற்கை வளம் நிறைந்த பகுதிகளாகவும் காட்சியளிக்கின்றன.

இந்த தேசிய பூங்காவில் சுமார் 19 வகையான நீர்வீழ்ச்சிகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அவை அனைத்தும் இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் விதமாக கண்கவர் தோற்றத்தில் காணப்படுகின்றன.

பூங்காவில் சுற்றிப்பார்க்கும் போது Nilgiri Tahr (வரையாடு), பலவிதமான பறவைகள் மற்றும் வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களையும் நம்மால் ரசிக்க முடியும்.

இரவிகுளம் தேசிய பூங்கா கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மலையின் உச்சிக்குச் செல்ல செல்ல பனிமூட்டங்கள் நம்மை தொட்டு செல்லும் அனுபவம் கிடைக்கும். அந்த தருணம் மிகவும் இதமாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.

அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் (Trekking) மேற்கொண்டோம். அந்த பாதையில் செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பலவிதமான பூச்செடிகள் இருந்தன.

அவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் தோற்றம் பற்றிய தகவல்களுடன் பெயர் பலகைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு புதிய தகவல்களை அறிய உதவியது.

இயற்கை அழகை ரசிக்கவும் ஓய்வெடுக்கவும்

சில இடங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்கவும் ஓய்வெடுக்கவும் மரத்தால் செய்யப்பட்ட குடை வடிவ நிழற்குடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்ததால் பலர் அங்கு அமர்ந்து புகைப்படங்களும் செல்பிகளும் எடுத்துக்கொண்டனர். நானும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து அந்த அழகான காட்சியை ரசித்து செல்பி எடுத்துக் கொண்டேன்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சில இடங்களில் மொபைல் டாய்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பயன்படுத்துவதற்கு சிறிய அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நடைபயண பாதையில் சில இடங்களில் பாறைகளின் மேல் தண்ணீர் மெதுவாக பாய்ந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டன. அவை அனைத்தும் கண்களுக்கு மிகவும் இனிமையான காட்சியாக இருந்தது.

இந்த இடம் குடும்பத்துடன் வந்து சுற்றிப் பார்க்க ஏற்றதாக உள்ளது. நான் சென்றபோது பலர் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இந்த இடத்தை சுற்றிப் பார்த்ததை கவனித்தேன்.

நான் இந்த இடத்திற்கு அக்டோபர் மாதத்தில் சென்றதால், அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் எதிரில் நின்ற நபர்களே தெளிவாக தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்தது.

அந்த அமைதியான சூழலில் இயற்கையுடன் பேசிக்கொண்டே நடைபயணம் மேற்கொள்வது, ஒரு மாய உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் அனுபவம் போல இருந்தது.

இதுபோன்ற இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இடமாக Eravikulam National Park சுற்றுலா பயணிகளின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு அற்புதமான இடமாக திகழ்கிறது.

வரையாடு – நீலகிரி தார் (Nilgiri Tahr)

Nilgiri Tahr என்பது Tamil Nadu மாநிலத்தின் மாநில விலங்காக அறியப்படும் அரிய வகை மலை ஆடு இனமாகும்.

Eravikulam National Park சுற்றிப் பார்க்கும் போது, ஒரு இடத்தில் வளைந்த கொம்புகளுடன் இருக்கும் ஒரு ஆடு என் கண்களில் பட்டது. அதுவே வரையாடு (Nilgiri Tahr).

இங்கு வரும் அனைவருக்கும் இதை காணும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு மட்டுமே இந்த விலங்கு நேரில் காட்சியளிக்கும்.

நான் சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் ஓரளவிற்கு காணும் வாய்ப்பு கிடைத்தது.

வரையாடு பெரும்பாலும் 4000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலை உச்சிகளில் வாழும் விலங்காகும். இது முக்கியமாக Western Ghats மலைத்தொடரில் உள்ள Tamil Nadu மற்றும் Kerala பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது.

வரையாடு” என்ற சொல்லில்

  • வரை – மலை அல்லது மலையுச்சி

  • ஆடு – ஆட்டினத்தை சேர்ந்த விலங்கு

என்று பொருள் வருகிறது.

இந்த அரிய வகை விலங்கு அழிந்து வரும் அபாய நிலையில் இருப்பதால், International Union for Conservation of Nature (IUCN) அமைப்பு 2010 ஆம் ஆண்டு இதனை சிவப்பு பட்டியலில் (Red List) சேர்த்து “அழிந்து வரும் இனமாக” அறிவித்துள்ளது.

தற்போது Eravikulam National Park பகுதியில் மட்டும் சுமார் 1000 வரையாடுகள் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


குறிஞ்சி மலர்

Neelakurinji என்ற குறிஞ்சி மலர் மிகவும் அரிய வகை தாவரமாகும்.

தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக சங்க காலத்தில், தமிழர்கள் வாழ்ந்த நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டன. இதில் மலை மற்றும் மலை சார்ந்த நிலம் “குறிஞ்சி நிலம்” என்று அழைக்கப்பட்டது.

அந்த குறிஞ்சி நிலத்தின் அடையாளமாகவே இந்த குறிஞ்சி மலர் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த மலரின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பது தான்.

  • கடைசியாக 2018 ஆம் ஆண்டு Kerala மற்றும் Tamil Nadu பகுதிகளில் பூத்தது.

  • அடுத்ததாக 2030 ஆம் ஆண்டு மீண்டும் பூக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அரிய மலரை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் 2030 ஆம் ஆண்டில் இந்த மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.

நான் சென்றபோது இந்த குறிஞ்சி மலரை பார்க்க முடியாதது மட்டும் சிறிது வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த இடத்தின் இயற்கை அழகும் அமைதியும் இந்த பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.

நீலக்குறிஞ்சி (Neelakurinji)

Neelakurinji எனப்படும் நீலக்குறிஞ்சி செடி பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் வளரக்கூடியது.

இந்த குறிஞ்சி செடிக்கு மிகவும் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று Eravikulam National Park ஆகும்.

இந்தியாவின் Western Ghats மலைத்தொடரில் பரவலாக வளரும் இந்த குறிஞ்சி செடி நீல நிற மலர்களை கொண்டுள்ளது.

இந்த மலர்கள் மலரும் காலத்தில், மலைப்பகுதி முழுவதும் நீல நிற கம்பளத்தால் போர்த்தப்பட்டதுபோல் கண்களுக்கு அற்புதமான காட்சியளிக்கும். 🌸

Nilgiri Hills என்ற பெயர் உருவாகவும் இந்த நீலக்குறிஞ்சி மலர்கள் ஒரு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த மலைப்பகுதிகளில் அதிகமாக பூக்கும் இந்த நீல நிற மலர்களால் அந்த மலைத்தொடர் “நீலகிரி” என்று அழைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

Eravikulam National Park பகுதியில் குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூக்கும். ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் தென்னிந்திய மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நம்மைத் தொடர்ந்து வரும் தலைமுறைகள் இந்த அரிய வகை குறிஞ்சி மலர்களை காணும் வாய்ப்பை இழக்கக்கூடும் என்ற எண்ணமே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இரவிகுளம் தேசிய பூங்கா – சுற்றுலா அனுபவம்

Eravikulam National Park என்பது இயற்கை எழில் நிறைந்த ஒரு அற்புதமான சுற்றுலா தலமாகும்.

இங்கு

  • பசுமை நிறைந்த மலைகள்

  • ஆழமான பள்ளத்தாக்குகள்

  • அழகான நீர்வீழ்ச்சிகள்

  • அரிய நீலக்குறிஞ்சி மலர்கள்

  • Nilgiri Tahr (வரையாடுகள்)

  • வண்ணமயமான தவளைகள் மற்றும் பறவைகள்

என பல இயற்கை அதிசயங்களை நம்மால் காண முடியும். 🌿

நம்முடைய தினசரி வாழ்க்கையில் இருக்கும் கவலைகள் மற்றும் மன அழுத்தங்களை மறந்து சில நாட்கள் அமைதியாக வாழ மிகவும் ஏற்ற இடமாக இந்த இரவிகுளம் தேசிய பூங்கா திகழ்கிறது.

இயற்கையோடு கலந்து வாழ விரும்பும் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை தரும் இடம் இதுவே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top