தேக்கடி சுற்றுலா

        

மனிதனின் வாழ்க்கை என்பது கவலைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும் .இந்த கவலைகளில் இருந்து விடுபடவும் ,கவலைகளை மறக்கவும் ஒரே வழி சுற்றுலா.

சுற்றுலா என்றதும் நம் மனதிலே ஒரு சந்தோசம் ,போகும் இடம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு  நிறைந்தவை .

அதிலும் நம்முடைய குழந்தைகளை கூட்டி செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

குடும்பங்களுடன்  செல்லும் ஓரு இடம் தான் கேரளாவில் உள்ள தேக்கடி .தேக்கடி மிகவும் அழகான ,அமைதியான சூழ்நிலையை நமக்கு வழங்குகிறது .

தேக்கடியின் குளிர்ச்சியான காலநிலை உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியடைய செய்கிறது . தேக்கடியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மக்கள் கண்டிப்பாக வாசிக்க தடை செய்யப்பட்டு இயற்கை அன்னையை பாதுகாக்கப்பட்டு வருகிறது .

தேக்கடி :

கேரளா மற்றும்  தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள தோட்ட நகரமான குமலையிலிருந்து தேக்கடி 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

இந்தியாவின் கேரள மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் தேக்கடி .

தேக்கடி என்ற பெயர் தேக்கு என்ற சொல்லிருந்து வந்ததாக கூறப்படுகிறது .மிகப்பெரிய புலிகளின் காப்பகமாக பெரியாரின் தேசிய பூங்கா அமைந்துள்ள பெருமையும் தேக்கடிக்கு உண்டு.

பெரியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ”சுர்கி ” அணையானது மற்றொரு சுற்றுலா தலமாக விளங்குகிறது .

தேக்கடியில்  உள்ள ஏரிக்கரையின் பெருமையாக பெரியார் வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா உள்ளது .

கேரளாவில் உள்ள தேக்கடி ,கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவிலும் ,திருவனந்தபுரத்திலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் ,கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது .

பரம்பிக்குளம் சுற்றுலா

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான தேக்கடி, இந்தியாவிற்க்கு சுற்றுலா மேற்கொள்ளும்   உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு   ஒரு கனவு தலமாக உள்ளது .

இங்கு அரிய வகை வனவிலங்குகளான ஆசிய யானைகள், காட்டெருமைகள், சாம்பார் மான்கள், பன்றிகள், புலிகள், சிறுத்தைகள், காட்டு அணில்கள், சிங்கவால் குரங்குகள் போன்றவற்றைக் காணலாம்.

இங்கு புலிகள் தென்படுவது மிகவும் குறைவான ஒன்று தான் .

இயற்கை மசாலாக்களின் ராணி :

           தேக்கடியில் இயற்கையாக கிடைக்கும் மசாலாப்பொருள்களின் புகலிடமாக கருதப்படுகிறது .அவையாவன கருப்பு மிளகு ,ஏலக்காய் ,இலவங்கப்பட்டை ,ஜாதிக்காய் ,இஞ்சி ,மற்றும் கிராம்பு போன்ற பொருட்கள் இங்கு நிறைய கிடைக்கிறது .

தட்பவெப்பநிலை :

தேக்கடி டிசம்பர்  மற்றும் ஜனவரி மாதங்களில் குளிர்ந்த காற்று அதிகமாக வீசும் ,வெப்பம்  சற்று குறைவாகவே இருக்கும் .

அதேபோல ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளிர்ந்த காற்றுகள் சற்று குறைவாக வீசும் ,இந்த நேரத்தில் வெப்பம்  சற்று அதிகமாக காணப்படுகிறது .

 குடியிருப்பு :

தேக்கடி மனிதர்களையும் ,இயற்களையும் ஒன்றாக இணைக்கும் விதமாக அங்குள்ள மூங்கில் புதர்களால் பாதுகாக்கபட்ட உயரமான இரண்டு தீவுகள் உள்ளது .

இந்த தீவானது ஒரு சிறு வசிப்பிடமாக இருந்து வருகிறது .இங்கு இயற்கையாக  புல்வெளிகள் ,மூங்கில்கள்  மற்றும் ஸ்க்ரூ பைன் செடிகள்  கூடிய ஓடைகள் உள்ளது .

இங்கு மூங்கில் மற்றும் புல் போன்ற இயற்க்கை பொருள்களால்   குடியிருப்பு கூடாரங்கள் உருவாக்கப்படுகின்றன , இங்கு அலகுகள் போன்ற அமைப்பிலும் வீடுகள் உள்ளன  ,மரத்தின் மீது அமைந்துள்ள குடிசைகள் என சுற்று சூழலுடன் இணையும் ஒரு இருப்பிடமாகும் .

 இந்த தேக்கடியில் மூங்கில் குடிசைகள் ,பாரம்பரியம் மிக்க நவீன சமையலறை மற்றும் நன்கு பொருத்தப்பட்ட மரப்பலகையால்   செய்யப்பட்ட அறை என  15 மூங்கில் குடிசைகள் இங்குள்ளது .

தேக்கடிக்கு என்று சில பெருமைகள் உண்டு , சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க பல இடங்கள் உள்ளன .அதில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் .அவையாவன

1.குமுளி (மங்களா தேவிக்கோவில் )

2.பெரியார் தேசிய பூங்கா

3.பெரியார் வனவிலங்கு சரணாலயம்

4.பெரியார் ஏரி

5.கல்வாரி மலை வியூபாயிண்ட்

6.யானைசவாரி

7.மூங்கில் படகு

8.சத்திரம்

9.ஜீப் சஃபாரி போன்றவையாகும் .

குமுளி (Kumuli ):

    குமுளி என்பது தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு கேரளாவின் உள்ளே  நுழையும் ஒரு நுழைவாயில் ஆகும்  .கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி மற்றும் பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் ஏலக்காய் மலையில் உள்ள ஒரு நகரம் தான் குமுளி .

இந்த குமுளிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில் உள்ளது .அந்த கோயிலின் பெயர் தான் ”மங்களா தேவிக் கோவில் ”ஆகும்

மங்களா தேவிக் கண்ணகி கோவில் :

                 இக்கோவிலுக்கு சிறப்பு என்னவென்றால் சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தவறான தண்டனை கொடுத்ததற்காக மதுரையை எரித்த கண்ணகி  , மதுரையை எரித்த பிறகு 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் என்ற மலையிலிருந்து  தான் கண்ணகி தேவலோகத்தை சேர்ந்தால் என்பது தான் இந்த கோவிலின் சிறப்பாகும் .

                  இந்த கோவில் வருடத்திற்க்கு ஒருமுறை மட்டும் தான் மக்கள் பயன்பாட்டிற்க்கு வருகிறது   . அந்த நாளான சித்திரை பௌர்ணமி வெகு விமர்சியாக அங்குள்ள மக்கள் கொண்டாடுகின்றனர் .

பெரியார் தேசிய பூங்கா (Periyar  National Park):

     இந்தியாவிலேயே ஒருவர் பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமான ஒரு சுற்றுலா பெரியார் தேசிய பூங்கா  .இந்த பெரியார் தேசியப்பூங்கா உலகின் மிக முக்கிய உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட முக்கிய பகுதியாகும் .

பெரியார் தேசிய பூங்காவை பெரியார் புலிகள் காப்பகம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த பூங்காவனது அமைதிக்கு பெயர்போனது .இயற்கை அழகும் ,பசுமையும் நிறைந்த ஒரு இடமாகவும் இருக்கிறது .இந்த பூங்காவில் குறைந்தது இரண்டு புலிகளையாவது காணமுடியும் .

இந்த தேசிய பூங்காவனது 257 சதுர மைல் பரப்பளவை கொண்ட ஒரு அகன்ற நிலப்பரப்பை கொண்டுள்ளது .இந்த பெரியார் தேசிய பூங்காவனது ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை தன் வசம் கவர்கிறது .

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  படகு பயணங்கள் ,ஜிப் சபாரிகள் , ஜங்கிள் சபாரிகள் போன்றவை நடத்தப்படுகிறது .

இங்கு நடத்தப்படும் யானை  சபாரி  பெரியார் தேசிய பூங்காவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விளையாட்டாக உள்ளது .இந்த சூழல், சுற்றுலா நடவடிக்கைகள் ,  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உன்னதமான முயற்சியாகும்,

பெரியார் வனவிலங்கு சரணாலயம் (Periyar  Wildlife Sanctuary ):

வனவிலங்கு சரணாலயம் 1978 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது . மேலும் காடு ரோந்து, எல்லை ஹைகிங், மூங்கில் தோப்பு, மூங்கில் ராஃப்டிங், பெரியார் டைகர் டிரெயில், ஜங்கிள் இன், ஜங்கிள் கேம்ப் மற்றும் மாட்டுவண்டி கண்டுபிடிப்புகள் போன்றவையும் இதில்   அடங்கும்.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கேரளா சுற்றுலா கழகத்தின் மூலமாக படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு ,ஆற்றின் வழியாக படகு சவாரி செய்யும்போது அங்குள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றியுள்ள இயற்கை அழகையும் ரசிக்கமுடியும் .அந்த இடத்தில் யானை கூட்டத்தை பார்க்கும் அனுபவம் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுக்கிறது .

அந்த படகு சவாரியின் பயணத்தின் முடிவில் அங்குள்ள பெரியாறு அணையின் சுவர்களையும் நாம் காண முடியும் .ஒரு படகு சவாரி முடிக்க குறைந்தது சுமார் 2 மணி நேரம் சுற்றிக்காட்டுவார்கள் .

பெரியாறு  ஏரி  (Periyar Lake ):

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பெரியாறு ஏரி புலிகளின் காப்பகத்தில் உள்ளே உள்ளது . கிட்டத்தட்ட 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெரியாறு ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது .

பெரியாறு ஏரியானது புலிகள் சரணாலயதின் காடுகள் வழியாக பாய்கிறது . பெரியாறு ஏரியானது ஆற்றின் அணைக்கட்டு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நீர்த்தேக்கம் ஆகும் .

இந்த பெரியாறு ஏரி இந்தியாவில் உள்ள 27 புலிகள் காப்பகங்களில் ஒன்று என்ற சிறப்பும் இதற்கு உண்டு .

இந்த செயற்கை ஏரியானது 25  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது .

பெரியாரின் தேசிய சரணாலயத்தில்  சில நேரங்களில் தண்ணீர் குடிக்க அரிய வகை விலங்குகளான சில புலிகள் ,கூட்டம்கூட்டமாக யானைகள் ,மான்கள் ,காட்டெருமை கூட்டங்கள் என பலவிலங்குகள் இங்கு காணமுடியும் .

படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு ,ஆற்றின் வழியாக படகு சவாரி செய்யும்போது அங்குள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றியுள்ள இயற்கை அழகையும் ரசிக்கமுடியும் .

யானை சவாரி (Elephent Safari ):

கேரளாவில் உள்ள தேக்கடியில் வனத்துறையினர் சார்பாக காட்டுக்குள் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர் .அந்த வரிசையில் யானை சவாரிகள் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது .

தேக்கடியில் உள்ள தேசிய பூங்காவில் யானை சவாரி என்பது மிகவும் பிரபலமான ஒன்று .ஸ்பைஸ் பிளாண்டேஷன் மூலமாக யானையின் மீது யானை சஃபாரி செல்லும் ஒரு அரிய விளையாட்டை இங்கு காணமுடியும் .

இந்த யானை நம்மை தன் மீது ஏற்றிக்கொண்டு செல்லும் போது அந்த வழியாக வரும் மென்மையான காற்று ,மசாலா பொருள்களின் வாசனை கூடிய காற்று ,இயற்கை அழகு என மிகவும் அருமையாக இருக்கும் .

யானைகள் நம்மை  குளிக்க வைப்பது  ,யானை சவாரி செல்வது என யானைகளுடன் நாம் ஒன்றி விளையாடும் பல விளையாட்டுகள் இந்த இடத்தில் காணப்படும் .

யானை குளிக்க வைக்க சிறிது பணத்தை கட்டணமாக  நாம் செலுத்த வேண்டியதாக இருக்கும் .

யானை சவாரி செல்லும்போது இரண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே அதிகபட்சமாக ஏற்றி செல்ல படும் ,யானை பயிற்றுவிப்பாளர் யானையுடனும் ,நம்முடனும்  சேர்ந்து நடந்து வருவார்கள் .

 கல்வாரி மலை வியூபாயிண்ட் (Kalvari Mount ):

  கல்வாரி  மலை என்பது இடுக்கி நீர்த்தேக்கமாகும் .இந்த கல்வாரி மலையானது கடல்மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் உள்ள இடுக்கி நீர்த்தேக்கம் .

கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் நீரின் அளவு பரந்து விரிந்து காணப்படுகிறது .

இது மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள மலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களின் அழகான காட்சிகளை நமது கண்களுக்கு விருந்தளிக்கிறது இந்த இயற்கை காட்சி .

இங்கு இரண்டு முக்கிய பழங்குடி கிராமங்கள் உள்ளன . அவை காமக்ஷி கிராமம் மற்றும் மரியாபுரம் ஆகும் .

கல்வாரி மலையின்  உச்சிக்கு செல்ல பல கிலோமீட்டர் தூரம் குறுகிய மற்றும் நடைபாதை பயணம் மேற்கொள்ள வேண்டும் .

மேலே சென்றவுடன் அதை சுற்றியுள்ள காட்சிகள் நாம் மூச்சியை அடைக்கும் விதமாக அமைகிறது .

இந்த மலையானது உயரமான புற்களால் நிரம்பியுள்ளது .இந்த கல்வாரி மலையின் மீது நின்று பார்க்கும் பொழுது ஒரு புறம் இடுக்கி அணையையும் ,ஐயப்பன் கோவிலையும் காண முடியும் ,மற்றொரு புறம்  காமக்ஷி கிராமம் மற்றும் மரியாபுரம்  கிராமம்  ரசிக்க முடியும் .

மூங்கில் படகு (Bamboo Rafting ):

 தேக்கடிக்கு சுற்றுலா செல்லும் ,சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான பொழுதுப்போக்கு நிகழிச்சிகளில் ஒன்று மூங்கில் படகில் சவாரி செய்வது .

சாதாரண படகில் சவாரி செய்வதற்கும் ,மூங்கில் படகில் சவாரி செய்வதற்கும் நிறைய வித்தியாசத்தை நாம் உணர்வோம்  .

மூங்கில் ராஃபிட்டிங் என்பது மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு படகில் பயணம் மேற்கொள்ளுவதாகும் .

இந்த மூங்கில் பயணம் செய்ய சரியான நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ,அதாவது முழுநாள் விளையாடக்கூடிய ஒருவகையான பொழுதுபோக்கு விளையாட்டாகும் .

மூங்கில் படகில் 3 மணி நேரம் அடர்ந்த காடுகள் வழியாக நம்மை பெரியார் புலிகள் சரணாலயத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாகத்தான் அழைத்து செல்லுவார்கள் .

  காட்டில் இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிப்பார்த்து விட்டு செல்லலாம் என நினைப்பவர்கள் ஜங்கிள் இன் எனப்படும் தங்கும் விடுதி உள்ளது .

இந்த விடுதியானது மூங்கிலால் செய்யப்பட்ட படுக்கையை கொண்டுள்ளது.

சத்திரம் (Sathram ):

      வண்டி பெரியாருக்கும் ,கவிக்கும் இடையே அமைந்துள்ள சத்திரத்தின் காட்சிகள் , அந்த வழியாக நாம் பயணிக்கும் பொழுது  பச்சை மலைகள், தேயிலை தோட்டங்கள் என கண்களுக்கு ஒரு விதமான கவர்ச்சியை கொடுக்கிறது . இந்த சத்திரமானது வன எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது .

சத்திரம் பெயர் காரணம் :

  சத்திரம் என்ற சொல்லுக்கு மலையாளத்தில் ”ஓய்வெடுக்கும் இடம் ”என்ற பொருளை கொண்டுள்ளது .அதாவது தேக்கடியில் உள்ள பாரம்பரியம் மிக்க சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் பயன்படுத்தும் ஒரு இடமாக சத்திரம் இருந்தது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கரடுமுரடான பாதையில் சென்று கொஞ்ச நேரம் உணவருந்தி விட்டு இளப்பாரும் இடமாக இந்த இடம் இருந்தது குறிப்பிடத்தக்கது .

    சுற்றுலா பயணிகளிடம் தொலைநோக்கி ஒன்றை கொடுத்து தூரத்தில் இருக்கும் சில வன விலங்குகளையும் ,மலைகளையும் ,பள்ளத்தாக்குகளையும் இந்த இடத்தில் நம்மால் எளிதாக பார்க்கும் வீதம் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

ஹார்ன்பில் பறவை  மற்றும் லயன் டெயில் குரங்கு போன்ற அரிய வகை விலங்குகளும்  வன எல்லையில் உள்ள மரங்களில் அடிக்கடி காணமுடியும் .

  கேரளாவில் சஃபாரி செய்ய நிறைய இடங்கள் உண்டு .இந்த சஃபாரி இரண்டு வகைபடும்.

1.ஜீப் சஃபாரி

2.ஜங்கிள் சஃபாரி

சத்திரம் ஜீப் சஃபாரி(Jeep Safari) :

   சத்திரம் ஜீப் சபாரியானது பெரியார் புலிகள் காப்பகத்தின் எல்லை வழியாக சுமார் 3 மணி நேரமும்  தேக்கடியிலுருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றன .

தேக்கடியில் கரடுமுரடான பாதையில் ஜீப் சஃபாரி செல்வது ,நிலப்பரப்பில் காட்டு விலங்குகளை காண்பது மிகவும் ஒரு வித்தியாசமாகவும் ,ஒரு விதமான உற்சாகத்தையும் தருகிறது .

ஜங்கிள் சஃபாரி (Jungle safari ):

சில நேரங்களில் யானைகள் மூலமாக  மலையேறும் ஒரு நிகழ்ச்சிதான் ஜங்கிள் சஃபாரி .

கேரளாவில்  அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்குள்ள வயநாடு ,மூணாறு ,பெரியாறு போன்ற பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட  16 சரணாலயங்கள் பாதுகாப்பாக ஒன்றும் வன ஆர்வலர்கள் பாதுகாத்து வருகின்றனர் .

    இயற்கை அழகு நிறைந்த  தேக்கடி , தேசிய  பூங்கா , தேசிய  வனவிலங்கு சரணாலயம் ,யானை சவாரி , யானை குளியல் , ஜீப் சவாரி , ஜங்கிள் சவாரி ,

மூங்கில் படகு சவாரி , சபரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள சத்திரம் , சில புலிகள் சரணாலயம் , கல்வாரி மலை ,  பெரியாறு ஏரி , குமுளியில் உள்ள மங்களா தேவிக் கண்ணகி கோவில் என பல இடங்களை சுற்றிப்பார்க்க உகந்த சுற்றுலா தலமாக தேக்கடி  உள்ளது .

அது மட்டுமல்லாமல் வாசனை பொருள்களான தேயிலை ,கருப்பு மிளகு ,ஏலக்காய் ,இலவங்கப்பட்டை ,ஜாதிக்காய் ,இஞ்சி மற்றும் கிராம்பு போன்ற பொருட்கள் இங்கு நிறைய கிடைக்கிறது .

குமுளியில் வாசனை பொருள்கள் சந்தைப்படுத்தும் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது .பெரியார் வனவிலங்கு சரணாலயதில் நிறைய படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top