சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்

நவக்கிரக கோவில்கள்
நவக்கிரக கோவில்கள்

நவகிரங்கங்களை வழிபடுதல் தொன்மையான வழிபாடாகும். நவகிரகங்களை நமது முன்னோர்கள் தனித்தே அக்காலத்தில்வழிபட்டு வான் வந்துள்ளனர். 11 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அனைத்தும் ஒரு சேர வழிபடும் முறை தோன்றியது.

இன்று நமது சுற்றுலா கட்டுரையில் மிக குறைத்த செலவில் நவகிரகோவில்களை எப்படி சுற்றிப்பார்பது என்பதைதெரிந்துகொள்ள போகிறோம்.

நவக்கிரக கோவில்கள்:

சூரியக் கோவில்கள்: சூரியனார் கோவில்(கும்பகோணம்)

சந்திர கோவில்: திங்களூர் கைலாசநாதர் கோவில்(தஞ்சாவூர்)

குரு கோவில்: ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்(திருவாரூர்)

ராகு கோவில்:திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில்(தஞ்சாவூர் )

புதன் கோவில்:திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்(மயிலாடுதுறை )

சுக்ரன் கோவில்:கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்(தஞ்சாவூர்)

கேது கோவில்:கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில்(மயிலாடுதுறை)

சனி கோவில்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்(காரைக்கால்)

 செவ்வாய்க்கோவில்:சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்(மயிலாடுதுறை)

ஒவ்வொரு கிரகத்தையும் அதன் உரிய திசையில் இருந்து வலம் , உரிய மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் கிரகதோஷங்கள் குறையும்,நன்மைகள் அதிகரிக்கும்,ஆரோக்கியம், செல்வம்,புகழ், அறிவு, தைரியம், ஞானம் போன்ற பலன்கள்கிடைக்கும்.

TNSTC பேருந்து:

குறைந்த செலவில் 9 நவகிரக கோவில்களையும் எப்படி சுற்றிப்பார்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெளிவாகபார்க்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் “நவக்கிரக  சிறப்பு ரதம்” பேருந்தில்   ஒரேநாளில் சிறப்பு தரிசனத்தில் 9 நவக்கிரக கோவில்களையும் சுற்றிப்பார்க்க முடியும்.

 online டிக்கெட் பதிவிற்கு  TNSTC என்னும் இணையத்தளத்தில் நவக்கிரக பேக்கஜ்  சுற்றுலா என்பதை தேர்ந்தெடுக்கவும், பின் தேதி மற்றும் நபர்களின் எண்ணிக்கை குறிப்பிட வேண்டும். குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து அல்லது சாதாரணபேருந்து எது என்பதை தேர்ந்தெடுத்து அடுத்ததாக பேருந்து இருக்கையை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துக்கு GST யுடன்  சேர்த்து 1403 ரூபாயும், சாதாரண பேருந்துக்கு GST யுடன் சேர்த்து799 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பேருந்து புறப்படும் நேரம்:

சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்
சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்

 

பதிவு செய்த பேருந்து பயணசீட்டை எடுத்துக்கொண்டு காலை 5 மணிக்கே கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குசென்றுவிடவேண்டும். அங்கு “நவக்கிரக சிறப்பு ரதம்” கவுண்டரில் நமது டிக்கெட்டின் PNR சொன்னவுடன் அவர்கள் நமக்குபேருந்து பயண சீட்டை வழங்குவார்கள்.

இந்த Trip In charge நமக்கு சில வழிமுறைகளை சொல்லி “நவக்கிரக சிறப்பு ரத்தத்தில்” பயணத்தை தொடங்கினார். காலை5 மணிக்கு ஆரம்பமாகும் நமது பயணம் இரவு 8 மணிக்கு முடிவடையும்.இந்த பேருந்தில் 2 ஓட்டுநர்,2 வழிகாட்டி , 1 உதவியாளர் என மொத்தம் 5 நபர்கள் இருப்பார். வழிகாட்டி நமக்கு ஒவ்வொரு கோவில்களைப் பற்றியும்  தகவல்களைசொல்லிக் கொண்டே வருவார்.

பேருந்து பயணத்தை தொடங்கும்போது நமக்கு ஒரு பை கொடுப்பார்கள் அதில் ஒரு தொப்பியும், கோவில்களின் வரைப்படதொகுப்பும் அடங்கிய ஒரு துண்டுப்பிரசார  சீட்டும் நம்மிடம் கொடுப்பார்கள்.

காலை உணவு மற்றும் மதிய உணவு பல நேரங்களில் அங்கு வருபவர்கள் சிலர் அன்னதானமாக மற்றவர்களுக்குவழங்குகின்றனர். அன்னதானம் இல்லாதபொழுது நமது சொந்த செலவில் வாங்கி சாப்பிடவேண்டியது தான்.

 நமது பயணத்தில் நாம் பார்த்த முதல் கோவில்

சந்திர பரிகாரஸ்தலம்:

அருள் மிகுகைலாசநாத சுவாமி திருக்கோவில் .திங்களூர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் திங்களூரில் இருக்கக்கூடிய சந்திர பரிகாரஸ்தலம். சந்திரனால் ஏற்படும் தீங்குவிலக நாம் இந்த கோவிலுக்கு வந்து வணங்குவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

சந்திர பரிகாரம் செய்ய ஏற்ற ஸ்தலம். சந்திரனால் ஏற்படும் சாபம் நீங்க இங்குள்ள கைலாசநாதரை வணங்க சாபம் நீங்கும்என்பது ஐதீகம். இந்தக்கோவிலின் சிறப்பு சந்திரகிரகத்தன்று மூலஸ்தானத்தில் கோவிலின் சிலை மீது நேரடியாக விழும்படிவடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரன் தனியாக அருள்பாளிக்கும் இந்த திருத்தலத்தில் அவரால் ஏற்படும் தோஷங்களும், இடர்பாடுகளும்  நீங்க  இங்கு வந்து வழிபடுவது பரிகாரமாக பார்க்கப்படுகிறது.

குருபரிகார ஸ்தலம்:

சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்
சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோவில்.ஆலங்குடி.

இந்த கோவில் தமிழ் நாட்டில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில்கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குருபகவானுக்கு சிறப்புவாய்ந்த இந்த திருத்தலம்குருபெயர்ச்சி நடக்கும்போது இந்த கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டு செல்கின்றனர்.

மூலவர் சிவன் ஆபத்சகாயேஸ்வரர், அம்பாள் ஏலவார் குழலி, குருபகவானின் சன்னதியும் அமைந்துள்ளது.மாதா, பிதா,குரு, தெய்வம் இந்த வரிசைபோன்று மூலவர் சன்னதி, அம்மபாள் சன்னதி, குருபகவான் சன்னதி என வரிசையாக தனித்தனிசன்னதியில் வணங்கி செல்கின்றனர். நாகதோஷம், மனக்குழப்பம், பயம் நீங்க இந்த குருபரிகார ஸ்தல கோவிலுக்கு வந்துசெல்வதன் மூலம் நல்லதே நடக்கும். திருமண தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த கோவிலுக்கு வந்துசெல்கின்றனர்.

காலை உணவு:

இரண்டு கோவில்கள் முடித்தும் காலை உணவு இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி அன்னதானமாக வழங்கப்பட்டது. எல்லாநாட்களிலும் நமக்கு அன்னதானம் கிடைக்கும் என சொல்லிவிடமுடியாது.சில நாட்களில் உபயதாரர்கள் இல்லாமல் போனால்அவரவர் பணத்தில் சாப்பிடவேண்டியதிருக்கும்.

ராகு பரிகாரஸ்தலம்:

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்.திருநாகேஸ்வரம்.

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்என்ற ஊரில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், நாகதோஷம் விலகவும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ராகுபகவானுக்கு உரிய பூஜைகள் செய்து ராகு தோஷம் நீங்க உதவும்.

கோவிலை சுற்றி முடித்துவிட்டு கோவிலின் தென்மேற்கு திசைக்கு வந்தால் நாகவள்ளி, நாக கன்னியோட ராகு பகவான் தனிசன்னிதியில் இருப்பார். மூலஸ்தானத்தில் சிவபெருமானை வணங்கிவிட்டு அப்படியே வெளியே வந்துவிடலாம்.புராணகாலத்திலிருந்தே இப்போதுவரைக்கும் இந்த திருத்தலத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் நாகநாதசாமிகள்வணங்குவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும்.அழகிய சிலை வேலைப்பாடுகளுடன் நான்கு பக்ககங்களிலும் நான்குகோபுரம் அழகாக இருக்கும்.

சூரிய பகவான் கோவில்:

அருள்மிகு சிவசூரியப் பெருமாள் திருக்கோவில்.

சூரிய பகவானுடைய இந்த கோவில் சூரியனார் கோவில். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடை மருதூர் வட்டத்தில்கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட சூரிய பகவானுக்கு முதன்மைஸ்தலமாக அருள்மிகு சிவசூரிய பெருமாள் திருக்கோவில் உள்ளது.

சூரிய திசை, சூரிய புத்தி,சூரிய பார்வை என சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க வரக்கூடிய ஸ்தலம்.71/2 சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி போன்றவற்றிற்கு இங்கு வந்து முறைப்படி வணங்குவதன் மூலம் நிவர்த்தி கிடைக்கும். கோவிலின் மற்றொருசிறப்பு எல்லா நவக்கிரக கோவிலின் சன்னிதியும் இந்த ஒரு கோவிலில் இருக்கும். சூரிய பகவானை வணங்கிவிட்டுவந்திடலாம்.

சுக்கிரஸ்தலம்:

அருள்மிகு அக்கினிஸ்வரசாமி திருக்கோவில்.கஞ்சனூர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகில் கஞ்சனூர் என்னும் இடத்தில் அக்கினிஸ்வரசாமி திருக்கோவில் உள்ளது.

சுக்கிரபரிகாரஸ்தலமான இங்கு சுக்கிரனுக்கு தனி சன்னதி கிடையாது.சிவபெருமானே சுக்கிர வடிவத்தில் காட்சிதருகிறார்.

திருமண தடை நீங்க பரிகாரம் செய்யும்  ஸ்தலமாக உள்ளது. சுக்கிரன் தேவர்களுக்கு கொடுத்த சாபம் நீங்கியஸ்தலம்.சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நிவர்த்தியாக இந்த கோவிலுக்கு நாம்வந்து வணங்க வேண்டும்.

செவ்வாய் ஸ்தலம்:

அருள்மிகு வைத்தீஸ்வரர் திருக்கோவில்.

வைத்தீஸ்வரர் என்பதற்கு ஆரோக்யம் அளிப்பவர் என்பது பொருள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் இருக்கும்இந்த திருத்தலம் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வந்து வழிபட வேண்டிய ஒரு ஸ்தலம். 2000-ம் வருடம் பழமையானகோவில். சிவபெருமான் வைத்தியநாதராகவும், அம்பாள் தையல் நாயகியாகவும், செவ்வாய் அதிபதி அங்காரகன் தனிசன்னதியாகவும் இருப்பார்கள். இந்த கோவிலின் அமைப்பு 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்தசன்னதி. செவ்வாய் தோஷம், கஜ கேசரி தோஷம், திருமணத் தடைகள், ரத்த நோய்கள் ஆபத்து நீங்க இங்கு வந்துவழிபடுகின்றனர்.

மதிய உணவு:

6 கோவில்களில் வழிபாடு முடித்திவிட்டு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தின் முன் நிறுத்தப்பது. நவக்கிரக சுற்றுலாவந்தவர்களில் ஒருவர் மதிய உணவை அன்னதானமாக வழங்கினார். சாதம், சாம்பார்,அப்பளம்,கூட்டு, பொரியல் என ஒருசிறப்பான அன்னதானம் கிடைத்தது. அன்னதானத்தை முடித்துவிட்டு அடுத்து நாம் சென்ற கோவில்

கேது ஸ்தலம்:

அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோவில் கீழப்பெரும்பள்ளம்.

கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் நீங்க வந்து வணங்கவேண்டிய இடம் மூலவர் நாகநாத சுவாமிகள், அம்பாள் சௌந்தர்யநாயகி பசுமாட்டின் மீது அமர்ந்திருப்பது போன்று காட்சியளிக்கிறார். சன்னதியின் இடது பக்கத்தில் கேதுவிற்கென தனிசன்னதி உள்ளது. சிவஸ்தலங்களில் கேதுவிற்கு சிறப்பு வாய்ந்த தளம் இந்த திருத்தலம்.

கேது சுவாமி சிங்க முகம், பாம்பு உடல் வடிவில் உள்ளார்.

கேதுவால் உண்டாகும் சர்ப்ப தோஷம், நாகா தோஷம், பிள்ளைப் பெறுதல் தாமதம், திருமணத்தடைகள்,சுகாதாரபிரச்சனைகள் ஆகியவை நீங்க இங்கு வழிபாடு செய்கின்றனர்.

புதன் ஸ்தலம்.

அருள்மிகு சுவேதாரன்யேசுவர சுவாமி திருக்கோவில். திருவெண்காடு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் சிவபெருமான்  சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவபெருமான் 1008 தாண்டவங்கள் ஆடிய திருத்தலம். 108 சக்திபீடங்களில் ஒரு திருத்தலம். சிவபெருமான் ஆனந்த தான்டவம் ஆடும்போது  அவரது மூன்று கண்களிலிருந்து சிந்திய நீர்இங்கு அக்னி, சூரிய, சந்திர தீர்த்தமாக உள்ளது.

புதன் கிரகப்பிரச்சனைகளால் ஏற்படும் கல்வி தடைகள், அறிவுத் தடை, தொழில், வணிக சிக்கல்கள், குழந்தைகளுக்கானசிரமங்கள் நீங்க இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். ஆலயத்தில் புதன் தனி சன்னதி உள்ளது.

சனி பகவான் சன்னதி:

சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்
சுற்றுலா என்றால் ஆனந்தம், ஆன்மீக சுற்றுலா என்றால் பேரானந்தம் நவக்கிரக கோவில்கள்

 தர்ப்பாரண்யேசுவரர் கோவில் திருநள்ளாறு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகில் திருநள்ளாறு என்னும் இடத்தில் உள்ளது. புராண வரலாற்று சிறப்புமிக்கதிருக்கோவில்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தேவராம் பாடிய திருத்தலம். சனிபகவானால் ஏற்படும்பிரச்சனைகள் தீர இங்குள்ள சனீஸ்வரர் பகவானை வணங்குவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும்.

மூலவர் சிவபெருமான்தர்ப்பாரண்யேசுவரர், அம்பாள் பிரஹன்னாயகி அம்பாள். சனீஸ்வரனுக்கு தனி சன்னதி உண்டு. 7 1/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ் டம சனி போன்ற காலங்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்க பக்தர்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபடுவர்.

எண்ணெய் அபிஷேகம் செய்வது துன்பங்கள் குறையும், நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் நம்முடன் இருக்கும்போதுஅதிக கஷ்டத்தை கொடுப்பார். நம்மை விட்டு போகும்போது பல நன்மைகளை செய்வார்.

9 நவக்கிரக கோவிலுக்கு சென்று நவகிரங்களின் அருளை பெற்று மீண்டும் நம்மை கும்பகோண பேருந்து நிலையத்தில் இரவு 8 மணிக்கு இறக்கிவிட்டு பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

மிக குறைந்த செலவில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்படும் இந்தநவக்கிரக சுற்றுலா பலருக்கும் பயணளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top