மலைகளின் இளவரசி கொடைக்கானல் சுற்றுலா

மலைகளின் இளவரசி கொடைக்கானல் சுற்றுலா

மலைகளின் இளவரசி கொடைக்கானல் சுற்றுலா

தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே உன்ன உணவு, உடுத்த உடை இல்லையென்றால் பசியும், பட்டினியுமாகத்தான்இருக்க வேண்டும்.

அவர்களுக்குள் நிறைவேறாத ஆசையாக பல ஏக்கங்கள் இருக்கும்.

அவர்கள் வயிறார குடும்பத்துடன்உணவு உண்டு, பல இடங்களை பார்த்து ரசித்து, அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஒரு அறையில் படுத்து தூங்கி,

அந்தஒரு நாள்முழுவதும் சந்தோஷமான நாளாக மாறினால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் யோசித்து பாருங்களேன்.

அதற்கு நாம் அவர்களாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அந்த எல்லையில்லா சந்தோசத்தை அனுபவிக்கமுடியும். இல்லையேல் அது வாய் வார்த்தையில் மட்டுமே அனுபவித்ததாக இருக்கும்.  ஒரு ஏழை பணக்காரனாக வாழமுடியும், ஆனால் ஒருபணக்காரரால் ஒரு நாள் கூட ஏழையாக வாழமுடியாது.

மலைகளின் இளவரசி கொடைக்கானல் சுற்றுலா
கொடைக்கானல் சுற்றுலா

“இயற்கையை நேசிப்போம்” – வில்லேஜ் டேட்டா பேஸ் யூ டியுப் தளத்தில் மிக குறைந்த செலவில் எப்படி சுற்றுலா செல்வதுஎன காணொளியாக வெளியிட்டுள்ளார். அது கட்டுரையாகவும் எழுதப்பட்டுள்ளது. இன்று நமது கட்டுரையாக மிகக்  குறைந்தசெலவில் குடும்பத்துடன்  சுற்றுலா செல்ல சிறந்த இடமான கொடைக்கானலை பற்றி ஒரு தொகுப்பு.

பணம்படைத்தவர்களும், பணம் இல்லாதவர்களும் இருவருமே ஒரு கணிசமான தொகையில் சந்தோசத்தோடு சுற்றிப்பார்க்க சிறந்தஇடம். தேகத்தை வருடும் குளிர், நீர்வீழ்ச்சி, ஏரி, குகை, கோவில், பள்ளத்தாக்கு என இயற்கை அழகு அனைத்தும் ஒருசேர அமைந்த அழகிய இடம்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து  7000 அடி உயரத்தில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலிருந்தே கோடைக்கால ஓய்விற்காகவும், விடுமுறை நாட்களுக்கு செல்லும் இடமாகவும்  இருந்துள்ளது  கொடைக்கானல் சுற்றுலாத்தலம்.

நண்பர்களுடன் குதூகலிக்கவும், குடும்பத்துடன் உற்சாகமாக இருக்கவும், புதிய திருமண தம்பதிகளுக்கு தேன் நிலவுசெல்லவும் சிறந்த இடம் கொடைக்கானல். இங்கு வீட்டில் தயாரிக்கும் சாக்லட் வகைகள் பல இடங்களில் வாங்கி சுவைக்கமுடியும்.

 வழித்தடம்:

தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் கொடைக்கானலும்  ஒன்று. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடியகொடைக்கானலுக்கு பேருந்து அல்லது  தொடர் வண்டி  மூலமாக வரலாம். தொடர்வண்டி மூலம் வருவதாக இருந்தால்திண்டுக்கல், மதுரை, பழனி வந்துவிடவேண்டும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர்,திருச்சி போன்ற இடங்களிலிருந்து  பேருந்து வழியாக கொடைக்கானல் வரலாம். சொகுசு பேருந்து மூலம்   கொடைக்கானலுக்கு வரமுடியும்.

கார், இருசக்கர வாகனம் என நம்மிடம் உள்ள சொந்த வாகனங்களின் மூலமாகவும் கொடைக்கானலுக்கு வந்துசுற்றிப்பார்க்க முடியும்.

பேருந்தில் சுற்றுலா பயணம்:

கொடைக்கானல் வந்தபிறகு அங்குள்ள அரசு பேருந்துகள்  அல்லது தனியார் பேருந்துகள் மிக குறைந்த கட்டணத்தில்  கொடைக்கானல் சுற்றுலா தளங்களை சுற்றிக்காண்பிக்கின்றனர்.2000 ரூபாய் ஒருநாள் கார் வாடகைக்கு எடுத்துசுற்றிப்பார்க்க முடியாதவர்களுக்கு  இந்த பேருந்து சுற்றுலா மிறக்குறைந்த செலவில் பயனுள்ளதாக இருக்கும்.

சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள்:

வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமான கொடைக்கானலுக்கு பனிபடர்ந்த, தேகத்தை வருடும் குளிர்ச்சியைஅனுபவிக்க வேண்டும் என்றால் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மாதங்களிலும், விடுமுறைகளை கொண்டாட ஏப்ரல், மே, ஜூன்மாதங்களையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுகின்றனர்.

சுற்றுலாத்தலங்கள்:

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களான  வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, குணா குகை,ரோஸ் கார்டன், தற்கொலை முனை, கொடைக்கானல் ஏரி, குறிஞ்சியாண்டவர் கோவில், டால்பியன்  நோஸ்,கோக்கர்ஸ் வாக்  என பல இடங்கள் உள்ளது. இதை சுற்றிப்பார்க்க ஒருநாள் போதுமானதாக இருக்காது.

குறைந்தது இரண்டு முதல் மூன்றுநாட்கள் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்க முடியும்.  கொடைக்கானல்சுற்றுலாத்தலங்களையும் அதற்கான சிறப்புகளையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி நீர்வீழ்ச்சி:

இந்த நீர்வீழ்ச்சி நாம் கொடைக்கானல் மலையேறும்போது பார்க்கும் முதல் நீர்வீழ்ச்சி. கோடைரோடு வழியாககொடைக்கானல் மலையேறும்போது 8  கிலோமீட்டர்  தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி வெள்ளியை உருக்கிஊற்றியRemove featured imageதுபோல வெண்மையாக இருக்கும். அருவியின் ஆர்பரிப்போடு ஆரம்பிக்கும் கொடைக்கானல் சுற்றுலாபுத்துணர்ச்சியை அள்ளித்தெளிக்கும் ஒரு இடம்.

பேருந்தில் பயணித்தால் இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. பேருந்தில் பார்த்துகொண்டே செல்லலாம்.

சொந்த வாகனங்களில் வருபவர்கள் இங்கு  வண்டியை நிறுத்தி சிறிதுநேரம்அருவியின் அழகை பார்த்துவிட்டு செல்கின்றனர்.கொடைக்கானல் ஏரியிலிருந்து வரும் தண்ணீரே இந்த அருவி, இங்குகுளிக்க அனுமதி கிடையாது.

Upper lake:

நுழைவு கட்டணம் இல்லாத இந்த பார்வை மையத்திலிருந்து நாம் நட்சத்திர வடிவத்தில் இருக்கும் கொடைக்கானல் ஏரியின்அழகை பார்த்து ரசிக்க முடியும்.

இந்த பார்வை மையத்தின் எதிர்திசையில் பலவகையான கடைகள் இருப்பதை காணலாம்.  நமக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு கொடைக்கானல் குளிருக்கு ஒரு இஞ்சி டீ குடித்துவிட்டு வரலாம்.

ரோஸ் கார்டன்:

 பூக்களின் அழகை ரசிக்க சிறந்த இடம். தோட்டக்கலைத்துறை சார்பில்  12 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ரோஜாதோட்டத்தில் 15,000 ரோஜா செடிகள் பணியாட்கள் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கே கண்கொள்ளாகட்சியாக இருக்கும் இந்த ரோஜாத்தோட்டத்தை பார்க்க கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கானசுற்றுலாப்பயணிகள் வருவதை காணமுடியும்.

மோயர் பாயிண்ட்:

காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த இடத்திற்கு நுழைவு கட்டணம் உண்டு.

நுழைவுகட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தால் நம்மை வரவேற்கும் பூங்கா. பூங்காவில்    பார்வை மையமும் உள்ளது.

இந்தபார்வை மையத்திலிருந்து பனி படர்ந்த அடர்ந்த அழகிய பள்ளத்தாக்கை பார்க்கமுடியும்.பூங்காவின் மைய பகுதியில் ஒருதூண் உள்ளது.

இந்த தூண் சர் தாமஸ் மோயர் அவர்களின் நினைவாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனாலேயே இந்தபார்வை மையத்திற்கு  மோயர் பாயிண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

தூண் அருகில் ஒரு காளைசிலையும் உள்ளது. மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய மிக அழகிய காட்சிகளை இந்த பார்வை மையத்திலிருந்து நாம்காணமுடியும்.

தோட்டத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட கேரட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை பார்க்கும் போதே நமக்குகேரட் வாங்கி சாப்பிடவேண்டும் என்ற ஆசை வரும்.

அதுமட்டுமல்ல  மாங்காய், அண்ணாச்சி போன்ற  பலவகையானகடைகள் அதிகம் காணப்படும் விரும்பியவற்றை வாங்கி சுவைக்கலாம்.குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அரைமணி நேரம்நாம் செலவிட சிறந்த இடம்.

பைன் பாரெஸ்ட்:

பல திரைப்படங்களின் பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் நாம் பார்த்த மிக உயர்ந்த மரங்களை கொண்ட பைன்காடுகளை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கும்.தென்மேற்கில் அமைந்துள்ள பைன் காடுகள் கொடைக்கானலின்முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று.

நுழைவு கட்டணம் உண்டு. தன்னுடைய நேரத்தை தனக்கு பிடித்தவருடன் செலவிட ஏற்ற இடம்.

குடும்பத்துடனும்நண்பர்களுடனும் சந்தோசமாக இருக்கும் பலரை இங்கு நாம் பார்க்க முடியும், பலரும் அந்த அழகிய தருணங்களைபுகைப்படமாக எடுப்பதை பார்க்கலாம். இங்கு நீங்கள் விரும்பினால் குதிரை சவாரி செய்ய முடியும்.

அருள் மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில்:

 மோயர் பாயிண்ட்டிலிருந்து அரைமணிநேரம் அடர்ந்த காட்டுக்குள் பயணித்தால் ஒரு அழகிய மலைக்கிராமம் பூம்பாறையைஅடைந்து விடுவோம்.

இங்கு சுற்றிப்பார்க பல சுற்றுலாத்தலங்கள் இருக்க தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலம் அருள் மிகுகுழந்தை வேலப்பர் திருக்கோவில்.

இங்கு முருகனை வணங்கி, முருகர் அருள் பெற்று வெளிய வந்தால் அங்கு பல இடங்களில்அங்கேயே  விளையக்கூடிய மலை பூண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இங்கு காலன் சூப்பு சுவைக்கமுடியும்.

குணா குகை:

ஆரம்பகாலங்களில் பேய்களின் சமயலறை “டெவில்ஸ் கிட்சேன்” என்று அழைக்கப்பட்டது இந்த குணா குகை.

குணா என்றதமிழ் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்ட பின்னரே இந்த இடத்திற்கு குணா குகை என்ற பெயர் வந்தது. உண்மையியல் இந்தஇடம் பார்பதற்க்கே பயத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும்.

9 மணி முதல் 4.30 மணி வரை மட்டுமேஅனுமதிக்கப்படும் இந்த குணா குகைக்கு நுழைவு கட்டணத்தை செலுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு  பெரிய மரத்தின்வேறானது மேலே தெரியும்படி இருக்கும்,

அந்தமரத்தின் வேர் பகுதியை பார்க்கும்போதே நமக்குள் ஒரு பயம் வந்துவிடும் .

அதை பார்த்துக்கொண்டே நடந்தால் மிகப்பெரிய பள்ளத்தாக்கு உயிர்சேதம் ஏற்படாத வண்ணம் கம்பி வேலிஅம்மைக்கப்பட்டுள்ளது.

கம்பி வேலி அமைப்பதற்கு முன்பாக இங்கு பல தற்கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இங்குஒரு பார்வை மையமும் உள்ளது.

தூண் பாறைகள்:

பல கதைகளை கொண்ட பில்லர்ஸ் ராக்ஸ் என்று அழைக்கப்படும் தூண் பாறைகள் கொடைக்கானலில் சிறந்தசுற்றுலாத்தலமாகும்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சிறுதொகையை நுழைவு கட்டணமாக செலுத்தி உள்ளே சென்றால் ஒரு சிறு பூங்கா உள்ளது.

இது பார்வை மையத்துடன் கூடியபூங்கா. இந்த பார்வை மையத்திலிருந்து எதிர் திசையில் பார்க்கும் போது மூன்று செங்குத்தான தூண் போன்ற கற்களைபார்க்கமுடியும்.

இந்த தூண் போன்ற கற்களை பார்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததென்று கூறுகின்றனர். கொடைக்கானலில்பல சுற்றுலாத்தலங்களில் விரும்பியதை வாங்கி சாப்பிடவும் முடியும், தேவையானதை வாங்கி வீட்டிற்கு எடுத்துச்செல்லாம்.

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts :-