வாகமன் சுற்றுலா – Vagamon Tourist

 

வாழ்க்கை பயணத்தில் வெற்றியாளர்களை விட தோல்வியாளர்களே இவ்வுலகில் அதிகம்.ஒருவரின் வாழ்வில் எவ்வளவு வெற்றி அடைந்துள்ளோம் ,எவ்வளவு  தோல்வியை நாம் தழுவியுள்ளோம்  என ஆராய்வதை விட ஜெயிக்க அடுத்துஎன்ன செய்யவேண்டும் என உழைக்க ஆரம்பித்தாலே போதும் நாம் வாழ்க்கையில் பாதி வெற்றி பெற்றதற்க்கு சமம்.

வெற்றி என்னும் கோப்பையை அடைய கடினமாக உழைக்கவேண்டும். இப்படி உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துபோன நமக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் மீது வெறுப்பும், சலிப்பும் வந்துவிடும். வாகமன் சுற்றுலா – Vagamon Tourist

சலிப்பும்,வெறுப்பும் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட நமக்கு மாற்றுவழி வேண்டும். அவரவர் விருப்பத்திற்குஏற்றவாறு வழிமுறைகள் மாறும். சிலர் தனிமையை நடுவர்,சிலர் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கநினைப்பார்கள், சிலர் ஆன்மிக தளங்களை ரசிக்க நினைப்பார்கள் இப்படி மனிதர்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறுமாறுபடும்.

எனக்கும் இதுபோல தான் வெறுப்பும்,சலிப்பும் அதிகளவில் இருந்தது.இதிலிருந்து சில நாட்கள் விடுபடஎண்ணினேன்.அந்த சில நாட்கள் பழைய நினைவுகளை முற்றிலும் அறவே ஒழிக்க நினைத்தேன்.இது எப்படிசாத்தியப்படும் என எனக்குள் ஒரு போராட்டமே நடந்தது.

கோவிலுக்கு போலாமா,இல்ல நண்பர்களுடன் நேரத்தைபோகலாமா, இல்ல தனிமையை விரும்பலாமா  என பல கேள்விகள் இருந்தது. இவைகளை மேற்கொண்டால்   சிலமணி நேரத்திற்க்கு மட்டுமே ஆறுதல் அடைய முடியுமே தவிர சில நாட்களுக்கு ஏற்றதல்ல.

வேறு எங்குசெல்லாம்,என்ன செய்யலாம் என மேலும் யோசிக்க ஆரம்பித்தேன். குறைந்த செலவில்,சலிப்பு இல்ல வாழக்கை எப்படிவாழ்வது என்ற யோசனை மேலோங்கியது.

இதற்காக நான் தேர்வு செய்த மாற்றுவழி இயற்கை அழகை ரசித்து,முகம் தெரியாத நண்பர்களுடன் சில நாட்கள்பயணம்,நீண்ட தூரம் நடைபயணம்  மற்றும் குறைந்த செலவில் சில விளையாட்டுகள் என இவைகளை அனுபவிக்கநினைத்தேன்.

இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் சுற்றுபயணம் மேற்கொள்வது.ஆம் சுற்றுலா பயணம்மேற்கொண்டால் வாழக்கையில் ஏற்பட்ட கசப்புகளை  மறக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது.

சுற்றுலா செல்லாம்என முடிவெடுத்து தேர்வு செய்த இடம் கடவுளின் தேசமான “கேரளா”.கேரளாவில் சுற்றிப்பார்க்க எக்கச்சக்கமானசுற்றுலா தளங்கள் உள்ளது.கேரளாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு சுற்றுலாத்தலங்களுக்கும் தனி சிறப்பு உண்டு.

கேரளாவில் உள்ள  மலைவஸ்தலமான “வாகமன்” சென்று அங்குள்ள இயற்கை அழகை ரசிக்கமுடிவெடுத்தேன்.அதற்கான நேரமும் வந்தது நானும் என்னுடன் சில நண்பர்களும் சேர்ந்து வாகமனை சுற்றிப்பார்க்ககிளம்பிவிட்டோம்.

வாகமன் :-

வாகமன் சுற்றுலா - Vagamon Tourist
வாகமன் சுற்றுலா – Vagamon Tourist

கேரளாவின்  இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளிக்கு அருகில் இந்த வாகமன் உள்ளது. இங்கு  எப்பொழுதும்குளிர்ச்சியான  காலநிலை நிலவுவதால் கேரளாவின் “சுவிசர்லாந்து” என வாகமனுக்கு சிறப்பு பெயர் உண்டு.

திரைப்பட படப்பிடிப்புகள், பச்சைப்பசுமையான மலைகள்,நீர்விழ்ச்சிகள் மற்றும் அட்வென்சர் விளையாட்டுகள்  எனஅனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும் இடம் தான் வாகமன்.கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ளது.இந்த இடத்தை பொறுத்தவரை மழைக்காலத்தை தவிர எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.

பறவைப்போல போல பறக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது ?. இன்று நாம் பார்க்கக்கூடிய கேரளா வாகமன்சுற்றுலாவில்  பாராக்ளைடிங் என்று சொல்லக்கூடிய பறக்கும் விளையாட்டை நாம் விளையாட முடியும்.

நேஷனல் ஜியோக்ராபிக் ட்ராவலர்(National Geographic Traveller):

             நேஷனல் ஜியோகிராபிக் ட்ராவல்லர் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில்,இந்தியாவில் பார்க்கவேண்டியஇடங்களின் பட்டியலில் கவர்ச்சிகரமான இடமாக கேரளாவில் உள்ள வாகமன் 50 வது இடத்தை பிடித்துள்ளதுமற்றொரு பெருமையாக பார்க்கப்படுகிறது .

                இந்த இடத்தில் விலங்கின பன்முக தன்மை என்ற மற்றொரு  ஆய்வு நடந்தது ,அந்த ஆய்வின் படி 112 வகையான வண்ணத்துப்பூச்சி ,நீர்விழ்ச்சிகள் ,பறவைகள்  மற்றும் பாலூட்டிகள்   இங்கு இருப்பதாகவும் அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.

வழித்தடம் :-

*தமிழ்நாட்டில் இருந்து ரோடு வழியாக காரில்  வர தேனீ,கம்பம்,குமுளி,வண்டிப்பெரியார் வழியாக வாகமனைஅடைந்திடலாம்.

*தமிழ்நாட்டில் பேருந்தில்  எந்த இடத்தில் இருந்து நாம் கிளம்பினாலும் சரி குமுளிக்கு வரவேண்டும்.அங்கிருந்துகிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வாகமனை அடைந்திடலாம்.

*ரயில் மூலமாக வருபவர்கள் கேரளாவில் உள்ள கோட்டயம் ரயில்வே நிலையத்திற்கு வந்திட வேண்டும்.இங்கிருந்துஇரண்டு அல்லது மூன்று மணிநேர பயணத்திற்கு பிறகு வாகமன் வந்து சேர்ந்திடலாம்.

தங்கும் விடுதி:-

வாகமன் சுற்றுலா - Vagamon Tourist
வாகமன் சுற்றுலா – Vagamon Tourist

தமிழ்நாட்டில் இருந்து  இரவு 10 மணிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து காரில் கேரளாவில் உள்ளவாகமனிற்க்கு   பயணம் மேற்கொண்டோம்.

காலையில் 9 மணியளவில் வாகமனை சென்றடைந்தோம். அங்குள்ள ஒருவிடுதியில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து தங்கும் அறையை தேர்வுசெய்தோம்.

இந்த அறையை பொறுத்தவரையில்மொத்தமாக ஆறு நபர்கள் தங்கியிருந்தோம். அந்தளவிற்க்கு பெரிய அறை ஆனால் இதற்கான கட்டணம்குறைவாகத்தான் வசூலிக்கப்பட்டது.

தங்கும் விடுதியை பொறுத்தவரையில் அவரவர் வசதிகளுக்கு ஏற்றவாறுதேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாங்கள் தேர்வுசெய்த அறையின் கட்டணம் தோராயமாக  ஒருவருக்கு 1400 ரூபாய்வந்தது.  இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதெற்கென்று பல தங்கும் விடுதிகள் உள்ளன .

உணவு :-

நாங்கள் தங்கியுள்ள விடுதியில் காலை உணவாக கேரளாவின் ஸ்பெஷல் உணவானபுட்டு,ஆப்பம்,தேங்காய்ப்பால்,பரோட்டா,கடலை கறி,முட்டை கறி மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டோம்.

அதேசமயம்மதியம் மற்றும் இரவு உணவாக சிக்கன் பிரியாணி,வெஜ் மீல்ஸ்,பரோட்டா,சப்பாத்தி,சிக்கன் கறி,மீன் கறி மற்றும் மீன்வறுவல் இருந்தது.இந்த இடத்தில் உணவின் சுவையை பொறுத்தவரையில் அருமையாக இருந்தது.

வாகமன் சுற்றுலா தலங்கள் :

வாகமன் சுற்றுலா - Vagamon Tourist
வாகமன் சுற்றுலா – Vagamon Tourist

விடுதியில் சென்று செக் இன் ப்ராசஸ் அனைத்தையும்  முடித்தோம். பிறகு வாகமனை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டோம்.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் வாகமனில் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவேண்டிய சில தலங்களை பற்றி நாம்காண்போம் .

*பைன் காடு (Pine Forest )

* மடொவ்ஸ் (மொட்டாகுன்னு – Meadows )

*அட்வென்சர் பார்க் மற்றும் பாராக்ளைடிங் (Adventure park and Paragliding )

*அஞ்சுருளி (Anjuruli )

*பருந்துப்பாரா(Parunthum Para )

*தங்கல் பாரா (Thangal Para ) என பல இடங்களை நாம் சுற்றிப்பார்க்க போகிறோம்.

பைன் காடு (Pine Forest ):-

முதலில் சுற்றிப்பார்க்க நாம் சென்ற இடம் பைன் காடு – Pine Forest.வாகமனிலிருந்து நான்கு கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ளது.காரை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தோம்.வழிகள் முழுக்க பல கடைகள்இருந்தது.

கடைகளில் வண்ண பொம்மைகள்,தொப்பிகள்,கலர்கலர் மூக்குக்கண்ணாடிகள்,சாக்லேட் என பல  பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.நமக்கு பிடித்த பொருளை இங்கு நினைவாக வாங்கிமகிழலாம்.

இந்த பைன் மரங்களை பொறுத்தவரையில் அமைதியான சூழலில் குடும்பகளோடும், நண்பர்களோடும், காதலர்களோடும்  வந்து  சில மணிநேரம் ரசிக்க வேண்டியஇடம்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட செங்குத்தான சூழலில் செழிப்பாக வளரக்கூடிய  ஒருவகையான மரம் . வாகமன்  பைன் காடுகள் என்பது பல ஏக்கர் நிலப்பரப்பில்  உள்ள மிக உயரமான மற்றும் செங்குத்தான மரம் சூழ்ந்த பகுதியாகும்.

இது  மிகவும் அமைதியான சூழல் கொண்ட இடமாகும் . இந்த காடுகள் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ள ஏற்ற இடம் .இங்கு மாசுக்கள் இல்லாத காடு என்றும் கூறலாம் .

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள பைன் மரங்கள் போல, அடர்த்தியான மரங்கள் அதிகம் கொண்ட இடமாகவாகமன் உள்ளது.இந்த பகுதியில் உள்ள மரங்கள் உயரங்கள் அதிகம் கொண்ட குளுமையான பகுதி.

இதை சுற்றிலும்மலைகள் அதிகம் காணப்படுகிறது.இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.பலவகையான பறவைகளை நம்மால்இங்கு காணமுடியும்.வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் மரங்களுக்கு அருகில் நின்றபடி பல புகைப்படங்கள் எடுத்துமகிழ்ந்தனர்.

நுழைவுக்கட்டணம் :-

இங்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு  10 ரூபாய் ,குழந்தைகளுக்கு (10 வயதுக்குட்பட்ட) 5 ரூபாயும்,கேமராபயன்படுத்தினால் 100 ரூபாயும்,வீடியோ எடுத்தால் 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

செயல்படும் நேரம் :-

காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு செல்ல அனுமதி உண்டு.

மேடொவ்ஸ் (மொட்டாகுன்னு – Meadows ):-

பைன் காடுகளை சிலமணிநேரம் ரசித்து முடித்த பிறகு அடுத்த இடத்தை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டோம்.அடுத்ததாகநாம் சென்ற இடம் மேடொவ்ஸ் என்று சொல்லக்கூடிய மொட்டாகுன்னு.

வாகமனிலிருந்து மூன்று கிலோமீட்டர்தூரத்தில் உள்ளது. இந்த இடத்தை பொறுத்தவரையில் நிறைய மலைகள் அடுக்கடுக்காக காணப்படும்.பசுமையானமலைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து காணும் காட்சியை சொல்ல வார்த்தைகளே இருக்காது.

பலதிரைப்படங்களின் பாடல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய வாகனத்தை வெளியிலேயேநிறுத்திவிடவேண்டும்.இங்கும் பல கடைகள்இருந்தது.இங்கு பல புல்வெளிகளின் பள்ளத்தாக்கில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிறிய குளங்களையும் காணலாம் .வாகமனில் படப்பிடிப்பிற்கான முக்கிய இடங்களில் இந்த இடமும் ஒன்று .

இந்த இடத்தை பொறுத்தவரையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகம் ரசிக்க கூடிய இடமாகபார்க்கப்படுகிறது. மாலை நேரங்களில் இங்கு வந்தால் அமைதியான, மாசில்லா காற்றையும் நம்மால் சுவாசிக்கமுடியும்..இக்குன்றுகளை பார்க்கும் காட்சிகள் அடுக்கடுக்காக மலைகளை வரைந்தது போல அழகாக காட்சியளிக்கிறது.

இந்த காட்சியானது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளைகொள்ளும் அளவுக்கு உள்ளது .மாயவித்தைகள் அதிகம் நிறைந்த இந்த வாகமனில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நுழைவுக்கட்டணம் :-

இந்த இடத்தை சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பெரியவர்களுக்கு ரூ.20, குழந்தைகளுக்கு(5.12) வயது ரூ.10, கேமரா ரூ.50, வீடியோரூ.100,ஆல்பம் ஷூட்டிங் ரூ.250, பிலிம் ஷூட்டிங் ரூ.15000 என நுழைவுக்கட்டணம் மாறுபடும்.

செயல்படும் நேரம்:-

மொட்டைக்குன்னு பொறுத்தவரையில் காலை 9 மணி முதல் 6 மணி வரை செயல்படும்.

விளையாட்டுகள்:-

இந்த இடத்தை பொறுத்தவரையில் குழைந்தைகள் விளையாடும் கிட்ஸ் போட்(Kids Boat),மீன் மசாஜ்(Fish Spa), ஜிப்லைன் ஆக்ட்டிவிட்டி(Zip Line Activity) என சில விளையாட்டுகள் விளையாடமுடியும்.

மீன் மசாஜ்ஜிற்கு நுழைவுகட்டணமாக ரூ.100, ஜிப் லைன் ரூ.300, ஸ்கை சைக்லிங்(Sky cycling)ரூ.300 மற்றும் ஜிப் லைன் + சைக்கிள் ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

அட்வென்சர் பார்க் மற்றும் பாராக்ளைடிங் (Adventure park and Paragliding ):-

மொட்டகுன்னுவின் அழகை பார்த்து ரசித்த பிறகு அடுத்ததாக சுற்றிப்பார்க்க சென்ற இடம் அட்வென்சர்பார்க்.பெயரிலே உங்களுக்கு வித்தியாசம் தெரிந்திற்குக்கும்.

இங்கு பல அட்வென்சர் விளையாட்டுகள் உள்ளது.நமக்குஎது பிடித்திருக்கிறதோ அதை விளையாடி மகிழலாம்.சமீப காலம் வரை சுற்றுலா தலமாக மட்டுமே இருந்துவந்தவாகமன் இன்று பாராக்ளைடிங்கால்  சர்வதேச சுற்றலாத்தலத்தின் வரைபடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என்பதுமிகவும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது . இந்த மலையானது கீழாக 3000 அடி உயரம் ,10 கிலோமீட்டர்  நீளமுள்ள மலைஉள்ளது .

இங்கும் நுழைவுக்கட்டணமாக சிறிது பணம் வசூலிக்கப்படுகிறது.நுழைவுக்கட்டணத்தை எடுத்துக்கொண்டு உள்ளேசெல்ல ஆரம்பித்தோம்.

இந்த இடத்தில் பல சாகச விளையாட்டுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.கயிறுபாலம்,ATV ரைடு நான்கு சக்கர வாகனம்,கையாக்கிங்,போட்டிங்,வாட்ச் டவர்,ஜிப் லைன் என பல விளையாட்டுகள்உள்ளது.சில விளையாட்டுகள் கம்போ பேக்கிலும் உண்டு.

செயல்படும் நேரம் :-

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்.

வாகமனின் அடையாளம்:

வாகமன் என்றால் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் , பல வரலாற்று   சிறப்பு  மிக்க சுற்றுலாத்தலங்களைகொண்டுள்ளது என   வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

தற்போது பாராக்ளைடிங்கிற்கான  ஹாட்ஸ்பாட்  எனவாகமனின் அடையாளமாக  மாறியுள்ளது .வாகமானிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் கோலாஹலமேடு மலையில்உள்ளது .

 சரியான நேரம் :

 பாராக்ளைடிங் விளையாடுவதற்க்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்தவிளையாட்டானது முழு நகரத்தின் பரந்தகாட்சியும் , அழகனா மேகமூட்டங்களுக்கிடையில் பயணம் செய்யும்காட்சியும் நம்மிடையே ஆழ்ந்த உற்சாகத்தை தருகிறது.

வாகமானில் பாராக்ளைடிங் முறையான மற்றும் சட்டப்பூர்வசுற்றுலா தலமாக உள்ளது .பாராக்டிங்க்கு ஏற்ற ஒரு காலம் என்றால் அது செப்டம்பரில் தொடங்கி ஜனவரி வரையிலும், மீண்டும் மார்ச் முதல் மே வரையிலும் பறக்க சிறந்த ஒரு சூழ்நிலையாகும் .

பாராக்லைட்டிங் விளையாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் .சாதாரணமாக நாம்    குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சென்றாலே மனம் ,உடல் போன்றவைகளில் சில மாற்றம் ஏற்படும் .

அது போலபாரக்ளைடிங் விளையாட்டில் பறக்கும் போது ,மேலிருந்து கீழ் பார்க்கும் இயற்கை காட்சிகள் ,வானில் மேகமூட்டங்களை கடக்கும் போதும் , வெண்மையான மேகங்களுக்குள் ஊடுருவி செல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியைசொல்லவும் ,வர்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை .

அஞ்சுருளி (Anjuruli ):-

அடுத்ததாக நாம் சென்று ரசித்த இடம் அஞ்சுருளி.மலையை குடைந்து வட்டவடிவ குகை போன்ற சுரங்கப்பாதை . இதுஒரு வகை  டனல்.அஞ்சுருளி என்பது கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காஞ்சியார் கிராமத்தில் உள்ள இடுக்கிவளைவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

இந்த அஞ்சுருளி என்பது எரட்டையாறு அணையிலிருந்து இடுக்கிநீர்தேக்கத்திற்க்கு தண்ணீரை கொண்டு செல்லும் ஒரு வட்டவடிவ சுரங்கப்பாதை .

இந்த சுரங்கபாதையானது சுமார்5.5 கிலோமீட்டர் அதாவது 3.4 மைல்  நீளம் கொண்ட சுரங்கபாதையாகும் .இந்த சுரங்க பாதையில் குறிப்பிட்டதூரத்திற்கு மேல் செல்லமுடியாது.

ஏனெனில் மிகவும் பயங்கரமான ஓர் பாதையாகும் மழைக்காலங்களில் இந்தஅஞ்சுருளியானது மனதை கொள்ளைகொள்ளும் விதமாக மிகவும் அழகாக தெரியும் .

அஞ்சுருளியானதுமழைக்காலங்களில் சுரங்கம் வழியாக பெருக்கெடுத்து வரும் காட்சியை காணும்போது ,சுற்றுலா பயணிகளின் மனதில்ஏற்படும் இன்பத்திற்கு அளவில்லை .

இதன் அருகிலே அருவி ஒன்று உள்ளது.கொஞ்சம் சிறிய அருவிதான்.இதையும் நம்மால் காணமுடியும்.இங்கும் சிலகடைகள் உள்ளது.கொஞ்சம் நேரம் இங்கு ரசித்து விட்டு அடுத்த இடத்தை நோக்கி கிளம்பிவிட்டோம்.

பருந்துப்பாரா(Parunthum Para ) :-

வாகமனிலிருந்து இங்கு வர ஒரு மணி நேரம் தேவைப்படும்.பருந்து பாரா என்பது இயற்கை அழகு நிறைந்த வாகமானில்உள்ள இடமாகும் .

பருந்தும் பாரா தேக்கடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் ,பீர்மேட்டிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது .பருந்தும்பாரா கடல்மட்டத்திலிருந்து சுமார் 1400 மீட்டர் உயரத்தில்அமைந்துள்ளது .

பருந்துபாரா என்பதன் விளக்கம் பருந்து என்றால் கழுகு என்றும் ,பாரா என்பது பாறை என்றும் பொருள் .அதாவதுகழுகு போன்ற உருவம் உடைய பாறை என்று அர்த்தம் . பருந்து போன்ற அமைப்பை உடைய பாறை உயரமானஉச்சியில் உள்ளது.

பருந்து தலையின் உருவத்தை காண நீண்ட தூரம் நடக்கவேண்டியிருக்கும் . பருந்து பாறையைபார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக படையெடுத்து வருகின்றனர் . மலை உச்சியில் நின்று சில சுற்றுலாபயணிகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர் .

பருந்து பாராவும் சபரிமலை மகரஜோதியும் :

பருந்துபாராவிலுருந்து  15 கிலோமீட்டர்  தொலைவில் சபரிமலை வனப்பகுதியை நம்மால் காணமுடியும்.பருந்துபாராவிலிருந்து  சபரிமலையின் மகரஜோதியை காணமுடியும் என்ற மற்றொரு சிறப்பும் இதற்க்கு  உண்டு.

சபரிமலைக்கு வரும் மக்கள் மகரஜோதியை காண கூட்டம் அலைமோதும் ,அப்பொழுது இந்த பருந்தும்பாராவிற்குசுற்றுலாப்பயணிகள் மிக அதிகமாக  வருகின்றனர் .

பருந்தும்பாறைக்கு செல்ல கரடுமுரடான பாதைகளும் ,பரந்து விரிந்த பச்சை புல்வெளிகள் ,வெல்வெட் புல்வெளிகள், ஆழமான பள்ளத்தாக்கு கொண்ட மலைகள் ,குளிர்ந்த மலைக்காற்று மற்றும் நதியின் வெள்ளிக்கோடுகள் , மூடுபனிஎன சுற்றுலாப்பயணிகளின் மனதில் ஒரு மாயஉலகிற்க்கு நம்மை அழைத்து செல்கிறது . இந்த இடத்தில சூரியன்அஸ்தமனம் (மறையும் ) காட்சி மாலைவேளைகளில் மிகவும் அழகாக இருக்கும் .

இந்த வாகமன் சுற்றுலாத்தலமாக மட்டும் இல்லாமல் ,திரைப்படங்களின் படப்பிடிப்பிலும்  அதிக வரவேற்பைபெற்றுள்ளது. குறிப்பாக மிகவும் பிரபலம் அடைந்த  ”தங்கமீன்கள்” திரைப்படத்தில் உள்ள நா.முத்துக்குமார் அவர்களின்  வரிகளில் உள்ள ”ஆனந்த யாழை மீட்டுகிறாள் ” என்ற பாடல் இந்த கேரளா  வாகமனில் எடுக்கப்பட்டதுஎன்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top