ஒரு முறை தரிசனம் செய்தால் ஒன்பது பிறவி

ஒரு முறை தரிசனம் செய்தால் ஒன்பது பிறவி யின் பாவங்க ள் தீரும் என நம்பிக்கையுடன் வரும் பக்தர்கள் ஒரு வேப்பிலைகிடைத்தால் போதும் அதை உண்பதால் அனைத்து பிரச்சனைகளும் தீரும், நல்லதே நடக்கும் என நம்புகின்றனர். கடவுளின்அவதாரமாக பார்க்கப்படும் மகான், ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும் அவன்பூரண சவுகரியத்தை அடைகிறான் என உபதேசித்துள்ளார். இன்று நம்முடைய தலைப்பு என்னவென்று உங்களுக்குபுரிந்திருக்கும் என நினைக்கிறேன் .இன்று நம்முடைய கட்டுரை வழியாக குறைந்த செலவில் சீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்யப்போகிறோம் .
சாய்பாபா மதம் அல்லது சாதி அடிப்படையிலான பாகுபாட்டை கண்டித்தார்.சாய்பாபாவின் பொன்மொழிகள் நம் மனதைஇலகுவாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.சாய்பாபாவின் சில பொன்மொழிகள்
“கவலை வேண்டாம் நான் இருக்கிறேன்”.
“எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இரு”.
“என்னை நினைப்பவர்கள் எல்லோருக்கும் நான் துணை”.
“உங்களுக்குள்ளேயே உங்களை நேசிக்கிறேன்”.
“உங்களின் தற்போதைய பெரிய பிரச்சனைகள் தீரும்.
சீரடியில் பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி அவரை “சாய்” என்று அழைத்தார். “சாய்” என்றால் பாரசீகத்தில் ‘சுவாமி’ என்றும், பாபா என்றால் இந்தியில் அப்பா என்றும் பொருள். இரண்டும் இணைந்துசாய்பாபா என்ற திருப்பெயர் நிலைத்துவிட்டது.
இது அமைதி மற்றும் ஆன்மீக தலைப்பாக பார்க்கப்படுகிறது “ஷீரடி சாய் பாபா”.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்அகமது நகர் மாவட்டத்தில் ஷீரடியில் உள்ளது “சாய் பாபா கோவில்.” சாய்பாபா ஆசிபெற்று மக்கள் ஷீரடியை சுற்றியுள்ளசுற்றுலாத்தலங்களையும் ரசித்துவிட்டு செல்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சாய் பாபா கோவிலுக்கு சென்னையிலிருந்து இரயில் மூலம்வரமுடியும்.
வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் இந்த இரயில் மூலம் ஷீரடிக்கு வருவதாக இருந்தால் குறைந்தது 25 மணிநேரம் ஆகும். விமானத்தின் மூலம் வருவதாக இருந்தால் சென்னை அல்லது பெங்களூரு விமனநிலையத்திலிருந்து பூனே, பூனேவிலிருந்து ஷீரடி வரமுடியும்.
பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஷீரடிக்கு 2 மணி நேரத்தில் வரமுடியும். இதில் நமது பயணத்திற்கானதை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பயணத்திற்கு நான் தேர்ந்தெடுத்தது பெங்களூரிந்து ஷீரடி 100 பயணிகளுடன் பறந்த விமானம் 2 மணி நேரத்தில் ஷீரடிவிமானநிலையத்தில் தரையிறங்கியது.
மிக சிறி விமானநிலையம் என்று சொல்லலாம். முன்பதிவு செய்த காரில் தங்கும்விடுதிக்கு வந்துவிடலாம்.
தங்கும் விடுதிகள்:

மிக குறைந்த விலையில் தொடங்கும் தங்கும் விடுதிகள் முதல் மூன்று நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் எனவிரும்பிய ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ருசித்து சாப்பிடக்கூடியவகையில் பல சைவ உணவு வகைகள் உள்ளது.
தரிசன முன்பதிவு:
ஷீரடி சாய் பாபா தரிசனத்திற்கு கணினி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். கோவிலுக்கு உள்ளே செல் போன்அனுமதிக்கப்படுவதில்லை முன்பதிவு செய்தபிறகு அதனை நகல் எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் நமது ஆதார்அட்டையையும் வைத்திருப்பது நல்லது. நேரடி தரிசன வசதியும் உண்டு.
லாக்கர் வசதி:
கோவிலுக்கு உள்ளே செல்லும்போது கேமரா,செல்போன் அனுமதியில்லை பல இடங்களில் 5 ரூபாய் லாக்கர் வசதி உள்ளது.
அதில் இந்த பொருட்களை வைத்து டோக்கன் வாங்கி கொள்ளவேண்டும். திரும்பபெரும்போது டோக்கன்கொடுத்தால்மட்டுமே பொருட்கள் தரப்படும்.
டோக்கன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். காலனி மற்றும் பைபோன்றவற்றிற்கு கட்டணம் இல்லா லாக்கர் வசதி உள்ளது அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அருள் தரும் வேப்பமரம்:
சாய் பாபா தவம் செய்த வேப்பமரம், சுற்றிலும் கம்பி வேலிபோடப்பட்ட இந்த வேப்பமரத்தின் ஒரு இலை நமக்கு கிடைத்துவிடாத என ஏங்கும் பலர்.
கசப்புத்தன்மை இல்லாத இந்த வேப்பிலை உண்டால் பாபாவின் அருள் கிடைத்து, நோய், நொடிதீர்ந்து,வேண்டுதல் நிறைவேறியது என மக்கள் நம்புகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேப்பமரத்தை 3 முறை வலம் வந்து அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள. அதன் பிறகே பாபாவை தரிசிக்க செல்கின்றனர்.
சாய்பாபா தரிசனம்:

கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பூமில் பிறந்த கடவுளின் அவதாரமாகபார்க்கப்படும் மகான் சாய் பாபா.தன்னை நம்பி வருகின்றவர்களின் குறைகளையும், கவலைகளையும் தீர்த்து அருள்வழங்குகின்றார்.நம்பிக்கையோடு வருபவர்களுக்கு நல்லதே நடக்கும். சாய் பாபாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் நடப்பதை கண்கூடாக பார்க்கமுடியும்.இப்படிப்பட்ட சாய் பாபா கோவிலில் நுழைந்துநேரடியாக முன்பதிவு வரிசைக்கு சென்று சாய்பாபாவை தரிசித்த நமக்கு காத்துக்கொண்டிருக்குகிறது கோவிலின் உள்ளேபல அதிசயம். கோவிலின் பல இடங்களில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்க்கமுடியும்.
அற்புத கல்:
பாபா வாழ்ந்த காலத்தில் தாக்களுடைய பிரச்சனைக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்கள் அவர் ஒரு கல் மீதுஅமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபாகோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது. பாபா கோவிலுக்குவரும் பக்தர்கள் பாபாவை தரிசித்தபிறகு இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள்.
சத்ய நாராயண பூஜை:
தினமும் காலை 7,9, மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயணபூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள்.இந்த பூஜையில் திருமணமான தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம்கிடைக்கும். தம்பதியர் இடையே பிரச்னை இருந்தால் சுமுகமாக தீரும் என்பது நம்பிக்கை.
துவராகமாயி:
அடுத்ததாக நாம் பார்த்த இடம் துவராகமாயி, இந்த இடம் மசூதி என்றும் இங்குதான் பாபா மக்களுக்கு ஆசிவழங்குவர்எனவும் கூறுகின்றனர். இந்த அதிகமான கூட்டம் இருந்தாலும் இந்த இடத்தை பார்க்காமல் செல்லவேண்டாம் என பலர்கூறுவதை பார்க்கலாம்.சாய்பாபா தன் அதிகமான நேரம் இங்குதான் இருந்ததாக கூறப்படுகிறது.
சாவடி:
கோவிலில் அடுத்ததாக நாம் பார்க்கும் இடம் சாவடி. சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடமாக உள்ள இந்த சாவடி கூரை வேயப்பட்ட இரண்டு அறைகளை கொண்டஇடம். இந்த சாவடியில் ஒரு அறை பாபா தூங்கும் இடம். இந்த அறையில் பாபா தூங்குவதற்கு மரத்தாலான படுக்கை போடப்பட்டிருக்கும். மற்றொரு அறை சேமிக்கும் இடம், இங்கு பக்தர்களுடன் கூட்டம் நடத்த ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருக்கும். அதிகாலை 3.45 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும் இந்த சாவடியில் பாபாவின் அழகிய படம் இருக்கும்.
அருங்காட்சியகம்:

சாய் பாபா தொடர்புடைய பல பொருட்களை இன்றுவரை பாதுகாத்துவரும் சாய் பாபா அருங்காட்சியகம் உள்ளது. சாய் பாபா கோவிலின் வெளியே பிரசாத கவுண்டர் உள்ளது பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளிய வந்தால்இரண்டு மணி நேரம் செலவிடக்கூடிய பல கடைகள் உள்ளன. இங்கு உலர்ந்த பழவகைகள், சாய்பாபா Photo, சாய்பாபா திருஉருவச்சிலை, பொம்மைகள் , விதவிதமான அணிகலன்கள்,உணவகங்கள் போன்றவற்றை பார்க்கலாம். நம் விரும்பியதை வீட்டிற்கு வாங்கிக்கொண்டு வரலாம்.
திருவிழா:
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையில் திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெண்ணீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெண்ணீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்விகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெண்ணீர் கொண்டு சாய்பாபா சிலை கழுவிய பிறகே சாதாரண தண்ணீரில் சிலை சுத்தம் செய்யப்பட்டு பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்கள் பெற்றோர் சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு எனது தாயின் கனவில் தோன்றி பாபா தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெண்ணீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இன்று வரை எங்களது குடும்பத்தினர் பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலை சுத்தம் செய்ய வெண்ணீர் தந்து வருகிறோம்.தற்போது முன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெண்ணீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் ஐயர்.
ஷிரடியில் உள்ள பிற சுற்றுலாத்தலங்கள்:
ஷீரடியில் சாய்பாபா கோவில் மட்டுமின்றி இன்னும் பல ஆன்மீக சுற்றுலா தளங்களை நாம் பார்க்கமுடியும். குறைந்த விலையில் பல தங்கும் விடுதிகள் ஷீரடியில் உள்ளன ஒரு நாள் தங்கி அங்கு சுற்றிப்பார்க்க கண்டோபா கோவில், பஞ்சமுக விநாயகர் கோவில், old ஹெரிடேஜ் கிராமம் ஷீரடி எனும் ஒரு அழகிய கிராமத்தை பார்த்து ரசிக்க முடியும்.
கண்டோபா கோவில்:
இந்த கோவில் சிவபெருமான் கோவில் என்றும், இங்கு வாழ்ந்தவர் தான் சாய்பாபா என பெயர் வைத்ததாகவும் கூறுகின்றனர்.இவர் சாய்பாபாவின் சீடர்.
பஞ்சமுக விநாயகர் கோவில்:

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என பஞ்சபூதங்களை குறிக்கும் விதமாக விநாயகர் ஐந்து தலைகளைகொண்டுள்ளார்.
இந்த இந்த விநாயகர் சிலைக்கு எதிரில் அவரின் வாகனமான எலி இருப்பதை பார்க்கலாம். எலியின் காதில் நாம் என்ன வேண்டுதல் வைக்கின்றோமோ அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஹெரிடேஜ் வில்லேஜ்:
old ஷீரடி என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவு கட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தால் 10 ஏக்கர் பரப்பளவில் சாய் பாபாவின் வாழ்கை மற்றும் போதனைகளை வெளிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகத்தை நாம் பார்க்கலாம்.
இந்த இடத்தில் சாய்பாபா பலருக்கு உதவி செய்வதையும், போதனைகள் செய்வதையும் சிலைவடிவில் நாம் பார்க்கமுடியும்.
இங்கு ஒரு கிராமம் உருவாக்கப்பட்டிருப்பதையும் அங்குள்ள மக்கள் அவர்களின் அன்றாட வேலையை செய்துகொண்டிருப்பதையும் அவர்களுடன் எல்லா இடங்களிலும் பாபா இருப்பதையும் நாம் பார்க்கமுடியும்.
உதவிசெய்தல், போதித்தல் என அனைத்து இடத்திலும் பாபா அவர்களுடன் கலந்து இருப்பதை நாம் காணலாம்.
இந்த இடத்தை சுற்றிப்பார்க்க ரயில் வசதி, ரோப் கார் வசதியும் உள்ளது .நுழைவு கட்டணத்தை செலுத்தி நாம் ரயில் மூலமாகவோஅல்லது ரோப் கார் மூலமாகவோ இந்த ஹெரிடேஜ் கிராமத்தை சுற்றிவரலாம்.
இந்த இடத்தில் குழந்தைகள் ரசித்துப்பார்க்க மேஜிக் ஷோ, பலூன் வெடித்தல், கயிற்றில் நடத்தல் என அவர்கள் குதூகலிக்கபல இங்குள்ளது.
கடவுளின் அவதாரமாக பார்க்கப்படும் மண்ணில் பிறந்த சாய்பாபா மதங்களை கடந்து மக்களுக்கு பல உதவிகளையும், போதனைகளையும் வழங்கினார்.
ஷிரடியை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் நம் பிரச்னைகள் தீரும் என பலரும் கூறும்புகளுக்குரியவர். அவரை தரிசனம் செய்து அங்குள்ள இன்னும் பிற சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்.



