சரித்திரம் படைத்த காசி விஸ்வநாதர் கோவில்

வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?
வாழும் வாழ்க்கை மனிதனுக்கும் வரமா? சாபமா?

சரித்திரம் படைத்த காசி விஸ்வநாதர் கோவில் இன்றைய காலத்தில் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா? என எண்ணும் அளவிற்க்குஉள்ளது.

வரத்திற்கும் சாபத்திற்கும் சில எடுத்துக்காட்டுகளை இப்போது பார்ப்போம். முன்னோர்கள் காலத்தில்வாழ்ந்தவர்கள்அதிகபட்சமாக புண்ணியம் செய்தவர்களாகவே கருதப்படுவர் .

காரணம் என்னவெனில் சத்தான உணவு, கொடியநோய்கள் அதிகம் இல்லாத காலம், மருந்துகளே இல்லா வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த உணவு பொருட்கள் மற்றும்மூலிகைகள், காசு பணம் இல்லாத நாட்களில் கூட நிம்மதியான வாழ்க்கை, அதிக அளவில்  அறிவியல் வளர்ச்சி இல்லாகாலங்களில் கூட பல அதிசய நிகழ்வுகள், இயற்கை அழகு கொட்டிக்கிடம் சுற்றுசூழல் என கஞ்சோ கூலோ குடித்தகாலத்தில் கூட எவ்வித கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் மக்கள் வாழ்ந்தனர் .

அப்பொழுதெல்லாம் ஆயுட்காலம் சாதரணமாக நூறு வயதிற்கும் மேல் வாழ்ந்து வந்ததை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.இப்படி நம்முடைய தாத்தா பாட்டி காலம் எப்படி இருந்தது என்பதை பற்றி பார்த்தோம். இதை வைத்தே அக்கால வாழ்க்கைமுறை வரமே என நம்மால் உணரமுடிகிறது.

ஆனால் பழங்கால வாழ்க்கை முறைக்கு எதிர்மறையானது தான் நம்முடைய வாழ்க்கை முறை. உணவுகள் எல்லாம் விஷமாகமாறி ஆரோக்கிய உணவுகளை தேடி அலைகின்றோம். இன்றளவிலும் சில கொடிய நோய்களுக்கு மருந்துகளே இல்லசூழ்நிலையில் நோய்களை கண்டு அஞ்சுகின்றோம்.

இயற்கையை அழித்துவிட்டு செயற்கையான பொருட்களினால்ஆயுட்காலம்அதிகபட்சமாக அறுபது வயதை கூட கடக்கமுடியாமல் தவிக்கின்றோம் .ஓரளவிற்க்கு பணவரவு இருந்தாலும்மக்கள் நிம்மதியற்றே திரிகின்றனர் . அறிவியலில் அதீத வளர்ச்சியடைந்தாலும் பல இழப்புகளை இன்றளவிலும் சரிசெய்யமுடியாத நிலை.

இயற்கையை அழித்து செயற்கையாக பல அழகிய சூழலை உருவாக்குக்கின்றனர்.விதவிதமான உணவுகள்என ரசித்து ருசித்து சாப்பிட்டாலும் காஞ்சி மற்றும் கூழுக்கு இணையாகாது . இப்படி நாம் வாழும் இந்த நூற்றாண்டுகள்மனிதர்களுக்கு சாபமே என நம்மால் உணரமுடிகிறது.

சாபத்தின் பரிசாக எங்கு பார்த்தாலும் பிரச்சனை பிரச்சனை என பலரும் அதிக அளவில் மன அழுத்ததினால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மன அழுத்ததின் தாக்கம் சிறு குழந்தையை கூட விட்டுவைக்கவில்லையே என்பது தான்வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது.இப்படி நம்முடைய சாபத்திலிருந்து விடுபடவும், புண்ணியங்கள் நம்மை வந்து சேரவும் பலஆன்மிக வழிகளை தேடி தேடி செல்கிறோம்.

தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் ஈடு செய்யும்விதமாக புண்ணிய ஸ்தலங்களை தேடி ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள விரும்பினேன்.வாழ்க்கையில் ஒருமுறையாவதுசுற்றுலா செல்ல வேண்டிய இறை வழிபாட்டு தலமாக  மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற புண்ணிய ஸ்தலம் பட்டியலில்”இராமேஸ்வரம்” , “காசி ” ஆகிய இரு வழிபாட்டு தலங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அதே போல நாம்ஏழுஜென்மங்களிலும் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னிக்கும் விதமாகஅயோத்தி,மதுரா,ஹரித்வார்,காஞ்சி,அவந்தி,துவாரகா மற்றும் காசி என ஏழு ஸ்தலங்கள் உண்டு. பல திரைப்படபாடல்களிலும் சரி , காட்சிகளிலும் சரி புன்னியம் தேடி காசிக்கு போவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இப்படி பலஇடங்களில் தனி சிறப்பை பெற்ற வழிபாட்டு ஸ்தலமான காசிக்கு நானும் என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் செல்லமுடிவெடுத்தோம். வாழும் வாழ்க்கை மனிதனுக்கும் வரமா? சாபமா?

காசி – ஒளிநகரம் :

வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ்நாட்டில் எப்படி ராமேஸ்வரம் புனித யாத்திரை தலமோ அதுபோல உத்திரபிரதேசத்தில் காசியும் புனித யாத்திரைதலமாக சிறந்து விளங்குகின்றது.

அதேபோல ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மற்றும் காசியில் உள்ளவிஸ்வநாதர் கோவில் பரிகாரம் மற்றும் பாவங்களை போக்கும் புண்ணிய ஸ்தலம்.உலகத்தில் மொத்தம் அறுபத்து நான்குஜோதிலிங்க கோவில்கள் உண்டு.

அதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் இரண்டுமே இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று என்ற சிறப்பும் பெருமையும் கொண்டது. சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் என்ற பெருமைக்குரியது.

காசியை வாரணாசி, பனாரஸ், அவிமுக்தம், மகாமயானம், அனந்த வனம் என பல பெயர்களை கொண்டுஅழைக்கப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ளது காசி.

காசி என்றாலேஞானத்தையும்,கல்வியையும் வழங்கும் புண்ணிய ஸ்தலமாகவும், அறிவுத் தலமாகவும் பார்க்கப்படுகிறது. வாரணாசி என்றமற்றொரு பெயர் கொண்ட காசி,வாரணா, ஹசி என்ற இரண்டு நதிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்துள்ளதால்வாரணாசி என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

காசியில் இறந்தால் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வழக்கு இன்றும்மக்கள் மத்தியில் நம்பப்படுகிறது.அதற்காகவே உலகில் பலரும் காசியில் தங்கி தன்னுயிர் இங்கே பிரிந்து சொர்க்கத்தைஅடைய வேண்டும் என விரும்புகின்றனர். காசியில் அனைவரும் வழிபட விரும்பும் ஸ்தலம் காசி விஸ்வநாதர் கோவில்.

இங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் தேவார பாடல்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .அவ்வளவு பிரபலமானஇக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.

சரித்திரம் படைத்த காசி விஸ்வநாதர் கோவில் :-

வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?

இந்த காசி விஸ்வநாதர் கோவில் உருவாக்கியதற்கு பிறகு ஒரு பெரிய சரித்திரமே உண்டு.பலமுறை முகலாய பேரரசர்களால் சேதப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது.

இக்கோவில் இடிக்கப்பட்ட அதே இடத்தில பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இதனால் பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தது.

சொன்னால் நம்மபமுடியாத அளவிற்க்கு ஒரு நிகழ்வு அன்றே நடந்துள்ளது. அதாவது தற்போதுள்ள விஸ்வநாதர் கோவிலை ஒரு பெண் தான் காட்டினார் என்று சொன்னால் நம்மில்பலருக்கும் வியப்பாகத்தான் உள்ளது.

அந்த சிங்க பெண் யார் என்றால் மராட்டிய பேரரசின் ராணியாக இருந்தஅகல்யாபாய்.

அதனால் தான் அவரின் நினைவாக இக்கோவிலின் முன்பகுதியில் அவருடைய திருவுருவ சிலை சிவ லிங்கத்தைகையில் ஏந்தியது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையின் சின்னம் இந்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஒருமண்டபத்தினை ஒட்டியும், அந்த மண்டபத்தை மையமாகவும் வைத்து மறுபடியும் ஒரு மசூதி கட்டப்பட்டுள்ளது.

விஸ்வநாதர்கோவிலும் பள்ளிவாசலும் பக்கம் பக்கம் இருப்பதை நம்மால் நேரடியாக கோவிலுக்கு செல்லும்போது பார்க்கமுடியும்.வேறு எங்கும் கண்டிராத அதிசயத்தை நம்மால் இங்கு பார்க்கவும் உணரவும் முடியும்.

ஒரு இந்து கோவிலும் இசுலாமியர் கோவிலும்பக்கம் பக்கம் நடுவில் ஒரே ஒரு தடுப்பு சுவர் மட்டும் தான் இவ்விரண்டு கோவிலுக்கு தடையாக உள்ளதை நாம்பார்க்கலாம்.

ஒரு சேர இரு கோவில்களையும் பார்க்கும்பொழுது மக்களின் ஒற்றுமையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

அகிலத்தை ஆளும் திறன் கொண்டவர் :-

காசி விஸ்வநாதர் என்பதற்க்கு உலகத்தை ஆளும் திறன் கொண்டவர் என்ற பொருள் உண்டு. இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிலிங்க கோவில்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிக்கும்.

இந்த பிரகாசமே இந்த நகரம் அறிவின் ஒளியாகபார்க்கப்படுகிறது. உள்ளது அதில் முதன்மையான கோவில் தான் இந்த காசி சிவபெருமான்.

இந்த காசி நகரம்சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என பல கூற்றுகள் உண்டு. இக்கோவில் கங்கை நதியின் மேற்கே உள்ள தசாஸ்வனேபடித்துறையிலிருந்து நுழைவாயில் வழியாக சென்றால் வெகு விரைவில் கோவிலுக்குள் சென்று விடலாம்.

காசி விஸ்வநாதரின் கோவிலின் கோபுரம் உயரமாகவும், ஒரு கொடியுடனும் காணப்படுகிறது.இக்கோவிலுக்காக பஞ்சாப் மன்னர் ஒரு டன் தங்கத்தை பரிசாக வழங்கினார்.

அதனால் தான் இக்கோவிலின் கோபுரம் தங்கம் மூலம் பூசப்பட்டுபொற்கோவில் போல காட்சியளிக்கிறது. தங்கம் மூலம் பூசப்பட்டுள்ள கோபுரத்தின் மின்னும் அழகை சொல்ல வார்த்தைகளேஇல்லை.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை :

வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?

பக்தர்கள் போன்,கை பைகள் என சில பொருட்களை கோவிலுக்குள் எடுத்து செல்லஅனுமதி இல்லை. இங்கு இவற்றை எல்லாம் பாதுகாப்பாக வைப்பதற்க்கு தனி லாக்கர்கள் வழங்கப்படுகிறது. இந்த லாக்கருக்குகட்டணமாக 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அதே போல கோவிலின் உள்ளே கருவரையில் உள்ள லிங்கவடிவில் உள்ளசிவபெருமானை புகைப்படம் எடுக்கவோ,வீடியோவாக பதிவு செய்யவோ அனுமதி கிடையாது. கங்கை நதியின் ஓரத்தில்ஏராளமான படித்துறைகளும், 64 தீர்த்தங்களும் உண்டு.

இவை அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, அங்குள்ள காலபைரவரைதரிசனம் செய்து,துண்டி விநாயகரை வணங்காமல் வந்தால் இந்த காசி யாத்திரை முழுமை பெரும். இருந்தாலும் 64 தீர்த்தங்களிலும் நீராடுவது என்பது பக்தர்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் கடினமான ஒன்று.

அதற்கு பதிலாக பஞ்சதீர்த்த யாத்திரை என்றழைக்கப்படும் அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம்,வரணசங்கம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம்என்ற ஐந்து படித்துறைகளை ஒரே நாளில் நீராடலாம்.

நீராடிய பிறகு கோவிலுக்கு செல்வது மிகவும் சிறந்தது. ஒவ்வொருநாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருந்து தரிசனம்செய்து வருகின்றனர்.

நாங்கள் காலை ஆறு மணிக்கே காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்று விட்டோம். அவ்வளவு காலையில் சென்றும் கூட்டம்குறைந்தபாடில்லை.கிட்டத்தட்ட பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தே சிவபெருமானை எங்களால் தரிசிக்கமுடிந்தது.

அதிலும் நாங்கள் சென்றது சிறப்பு தரிசனம் வரிசையில் சென்றும் கூட்டம் குறைந்தபாடில்லை. பக்தர்கள்அனைவரும் காசி விஸ்வநாதரை தரிசிக்க பூஜை பொருள்கள் எடுத்து செல்லலாம்.

இந்த கோவிலில் மட்டும் பூஜைபொருட்களை நம்முடைய கைகளாலே கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய அனுமதி உண்டு.

அர்ச்சகர்கள்கொண்டு பூஜை செய்ய வேண்டியதில்லை.குறிப்பாக காசி விஸ்வநாதருக்கு தினமும் மூன்று கால பூஜைக்கு தேவையான பூஜைபொருள்கள் அனைத்தும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரதரால் வழங்கப்படுகிறது.தமிழர்களின் புகழ் எங்கும்பரவட்டும் ,அதே போல் அவர்களின் சிறப்பு எப்போதும் ஒலிக்கட்டும்.

தங்க லிங்கமும் வெள்ளி தொட்டிலும் 😐

இக்கோவிலின் மூலவர் விஸ்வநாதர் லிங்கம் வடிவில் காணப்படுகிறார். லிங்கமானதுபூமிக்கு அடியில் தரைக்கு கீழே காணப்படும். லிங்கத்தின் அடிப்பகுதி தங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.லிங்கமானது வெள்ளிதொட்டியின் நடுவில் இருப்பதுபோல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கங்கா ஆர்த்தி :-

வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வரமா? சாபமா?

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வாரணாசி கங்கை ஆற்றின் கரையில் ஆரத்தி வழிபாடுநடக்கும்.அதாவது தசவசுவமேத படித்துறையில் மாலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை பூஜை நடக்கும்.

பாண்டாக்கள்என்றழைக்கப்படும் அர்ச்சகர்கள் கங்கை நதிக்கரையில் அமர்ந்து விஸ்வநாதரை சுற்றி பூஜைகளும், பல அடுக்குகளைகொண்ட விளக்குகளும் கொண்டு ஆரத்தி எடுப்பார்கள்.

வாரணாசியின் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த தசவசுவமேதபடித்துறையில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை ஆறுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வை கங்காஆரத்தி என்கின்றனர். கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க ஏரளமான பக்தர் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் கூட்டம்கூட்டமாக கோயிலுக்கு வந்து ரசிப்பார்கள்.

காலபைரவர் கோவில் :-

காசியின் சிறப்புகளில் ஒன்று தான் கால பைரவர் கோவில்.மரணம் கூட பயப்படும் அளவிற்க்கு காலபைரவருக்கு சக்தி உண்டு.

மண்டை ஓடுகளை மலையாக அணிந்து கோபம் கொண்டவராக சிவபெருமான் காட்சியளிக்கும் தோற்றமே “காலபைரவர் கோவில் “.

வெள்ளி முகத்தை கொண்டு கருவறையின் உள்ளே அழகிய தோற்றத்தில் காலபைரவர்காட்சியளிப்பார்.

காலபைரவர் என்பர் மரணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டையும் குறிக்கும். அதவாது மரணபயம் இல்லாதவர்என்பது பொருள்.

காலபைரவர் கோவிலுக்கு செல்ல அகலமான பாதைகள் இல்லை,குறுகலான பாதைகள் மட்டுமே உண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top