திருவனந்தபுரம் சுற்றுலா – Thiruvananthapuram Tourist Places
திருவனந்தபுரம்:
பல அடைமொழிகளையும் பல சிறப்புகளையும் கொண்ட இந்த நகரம் கேரளாவின் தலைநகரம். இந்நகரம் இந்தியாவின்பசுமை நகரம் என மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்ட சிறப்பான நகரம்.
சூரிய குளியலுக்கான பல அழகியகடற்கரைகளையும், பக்தி மணம்கமழும் கோவில்களையும், விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட உயிரியல்பூங்காக்களையும், அருங்காட்சியகங்களையும், மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும் படகு பயணத்தையும் அனுபவிக்க சிறந்தஇடம் கேரளா திருவனந்தபுரம்.
திருவனந்தபுரம் என்பதற்கு அழகிய பெயர் காரணம் உண்டு. தமிழ் சொற்களான திரு, அனந்த, புரம் ஆகிய சொல்லின்இணைப்பே திருவனந்தபுரம் என்பதாகும்.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியாலே இப்பெயர் வந்தது. இக்கோவிலின் மூலவரான விஷ்ணு பாம்பின் மீது ஆனந்த சயனத்தில் இருப்பதுதான். திருவனந்தபுரம் என்பதற்கு ஸ்ரீ அனந்தபத்மநாதசாமியின் பூமி என்பதுபொருள்.
வழித்தடம்:
ஆண்டு முழுவதும் திருவனந்தபுரத்திற்கு சுற்றலா செல்லலாம். காலநிலைகளை பொறுத்து அக்டோபர் முதல் மார்ச்வரை சிறந்த நேரம்.
மிக குறைந்த செலவில் நாம் திருவனந்தபுரத்தை அடையமுடியும். இந்த இடத்திற்கு ரயில் சேவை, விமான சேவை,வால்வோ பஸ் வசதி என அனைத்து சேவைகளும் உள்ளது. விமான நிலையத்திற்கும் ரயில் நிலையத்திற்கும்இடையே உள்ள தூரம் 6 கிலோமீட்டர்.
தங்கும் விடுதிகள்:
மிக குறைந்த விலையிலிருத்த ஸ்டார் தங்கும் விடுதிகள் வரை பல வகையான தங்கும் விடுதிகள் உள்ளன . திருவனந்தபுரத்தில் நம் வசதிக்கு ஏற்ப தங்கும் விடுதிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
கேரளா உணவுகள் அனைவரும்விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக பரோட்டா, சிக்கன் கறி , புட்டு என கேரளவிற்கென தனி உணவு வகைகள்உண்டு. உணவை பற்றி கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
நம்மிடம் 2 நாட்கள் இருந்தால் போதும் கேரளா திருவனந்தபுரத்தையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் சுற்றிபார்த்துவிட முடியும். இன்று நம்முடைய கட்டுரை தொகுப்பில் ஆன்மீக தலங்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள போகிறோம்.
சுற்றுலா செல்ல முடிவு எடுத்து ரயில் பயணத்தில் திருவனந்தபுரம் வந்தபிறகு நாம் சுற்றிப்பார்க்க சென்ற முதல் இடம்திருவந்தபுராணத்தின் நகரின் மையப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா.
உயிரியல் பூங்கா:
55 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உயிரியல் பூங்காவிற்கு உள்ளே செல்ல ஒரு சிறுதொகையைநுழைவுக்கட்டணமாக செலுத்தவேண்டும். நாம் எடுத்துச்செல்லும் கேமராவிற்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நண்பர்களுடனும், குடும்பமாகவும் வந்து செல்பவர்களுக்கும் ஏற்ற இடம். 1830 -1846 -ல் திருவாங்கூரை ஆண்ட புகழ்பெற்றமன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மா குதிரை, யானை, வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு தொழுவம் அமைத்து பாதுகாத்தார்.
அத்துடன் புலிகள், சிறுத்தைகள், மான், கரடிகள், சிங்கம் போன்றவற்றையும் வைத்திருந்தார். 1857 – ல் இரும்பு கூண்டுக்குள்விலங்குகள் பொதுமக்களுக்கு அருங்காட்சியகமாக திறக்கப்பட்டது. இது மக்களை அதிகம் ஈர்க்கவில்லை.
1859 ல் மிருகக்காட்சிசாலையுடன் ஒரு பூங்காவும் தொடங்கப்பட்டது. மனித வளர்ச்சியால் காடுகள் அழிப்பு மற்றும்வனவிலங்குகள் பேரிழப்பு ஆகியவற்றால் பொழுதுபோக்கு என்பதிலிருந்து பாதுகாப்பு என மாறியது.
82 விலங்கினங்களை கொண்ட இந்த உயிரியல் பூங்கா வனப்பகுதி, ஏரி, குளம், ஓடை, நீர்வீழ்ச்சி, புல்வெளி எனஇயற்கையை சார்ந்து உருவாக்கப்பட்டது. கூண்டில் இருந்த விலங்குகள் வனத்தில் விடப்பட்டது.
காட்டெருமைகள் நம்மை வரவேற்க விலங்குகளின் ஒவ்வொரு இருப்பிடத்திலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்தபலகையில் விலங்கின் பெயர், பூர்விகம் என பல தகவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
மனித குரங்கு, நீர்யானை, பலவகையான மான்கள், முள்ளம் பன்றி, சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை இயற்கையானசூழலில் காணலாம்.
பட்டாம் பூச்சிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. குளத்தில் இருக்கும் மீன்களையும் ஆற்றின் சிறு தீவு போல் உருவாக்கப்பட்ட இடத்தில் பறவை இனங்களையும், பாம்புகள் ஆமைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
சுற்றிப்பார்க்க குறைந்த பட்சம் 2 முதல் 3 மணி நேரம் தேவைப்படும். நடக்க முடியாதவர்களுக்கு பேட்டரி கார் சேவைகள் இயக்கப்படுகின்றன. குழந்தைகளுடன் நேரம் செலவிட சரியான இடம்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
கேரளா திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பகவதியம்மன்கோவில்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் கேரளாவின் மிகவும்புகழ்வாய்ந்த கோவில், தன்னுடைய கணவருக்காக மதுரையை எரித்த கண்ணகியே பகவதி அம்மனாகவணங்கப்படுகிறார்.கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் என்னும் இடத்தில் பகவதி அம்மன்கோவில் உள்ளது.
ஊரின்பெயரை சேர்த்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் என அழைக்கின்றனர்.
கோவிலின் வரலாறு:
கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்தார். ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த முதியவரிடம் ஆற்றைக்கடக்க உதவுமாறு கேட்க அவரோ சிறுமியை அம்மனின் உருவகமாகபாவித்து வீட்டிற்கு அழைத்துச்செல்ல முயன்றபோது சிறுமி மறைந்தாள். அன்று இரவு கனவில் வந்து தனக்கு கோவில்காட்டும்படி சிறுமி சொல்ல உருவானதே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில்.
செம்புத் தகடால் செய்யப்பட்ட கோவிலின் தூண்களிலும் சுவர்களிலும் காளிதேவி, சிவ பார்வதி, மகிஷாசுரமர்த்தினிசிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் நுழைவுவாசலின் மேல்பகுதியில் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கையில்கொண்டுஅரக்கியின் மீது அமர்ந்திருப்பார் பகவதியம்மன். இக்கோவில் வளாகத்தில் கணபதி, சிவன், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்திசன்னிதிகள் உள்ளன.
அதிகப்பெண்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்யும் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 10 நாட்கள்நடைபெறும் இந்த பொங்கல் விழாவில் முதல் பொங்கல் கோவிலின் சார்பாக சரியாக 10.30 மணிக்கு தொடங்கியபிறகு மற்றபெண்கள் பொங்கலிடுவார்கள். மதியம் 2.30 மணிக்கு பொங்கல் பானைகள் நைவேத்தியம் செய்யப்பட்டும். தங்களதுவேண்டுதலை பகவதி அம்மன் நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் அனைவரும் தங்களது சொந்தஊருக்குதிரும்புவார்கள்.
பத்மநாதசாமி கோவில்
திருவனந்தபுரத்தின் சிறப்புவாய்ந்த கோவில் அதுமட்டும் அல்லாது திருவனந்தபுரத்திற்கு பெயர் காரணம்கொடுத்ததொரு கோவில் பத்மநாதசாமி கோவில். திரு + அனந்த +புரம் இக்கோவிலின் மூலவர் மகாவிஷ்ணு (பாம்பின்மீதுஅனந்த சயனத்தில் )பாம்பின் மீது படுத்திருப்பார் இருப்பார். ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலிலிருந்து 2 கிலோமீட்டர்தொலைவிலுள்ளது பத்மநாதசாமி திருக்கோவில்.
பொதுவாக கோவில்கள் மன்னர் ஆச்சியின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக கட்டப்பட்டிருக்கும்.1750 ஆண்டுராஜமார்த்தாண்டவர்மர் தன்னுடைய அணைத்து சொத்துக்களையும் பத்மநாதசாமி கோவிலுக்கு பட்டையம் எழுதிதந்தார். இதனாலேயே இக்கோவிலை பணக்கார கடவுள் என அழைக்கின்றனர். இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் பாதுகாக்கப்பட்டுவந்தது.
பல ஆச்சர்யங்களையும் மர்மங்களையும் கொண்டிருக்கும் இந்த கோவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளகோவில் ராஜகோபுரம் 100 அடி உயரமும், 7 நிலைகளை கொண்டது.80 அடி உயரத்தில் தங்கத்தகடுகள் வேயப்பட்டபிரமாண்ட கொடிமரம் . ராஜகோபுரத்தின் முன்பு பத்ம தீர்த்தம் என்ற தல தீர்த்தம் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
கருங்கல்லில் அழகிய வெளிப்பாடுகளில் செய்யப்பட்ட தாழ்வாரங்களும், சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களும், சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்களும் மிக தத்ரூபமாக இருக்கும்.கோவிலின் கர்ப்பகிரகம் ஒரே கல்லால்செதுக்கப்பட்டது.இதனை ஒற்றைக்கல் மண்டபம் என அழைப்பர்.
திருவனந்தபுரம் சுற்றுலா Thiruvananthapuram Tourist Places
பத்மநாதசாமி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த ரகசிய அறைகளை திறக்க வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 2011 ஆண்டு ஜூன்27 ல் ரகசிய அறைகள் திறக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததன் பேரில் 5 அறைகள் திறக்கப்பட்டது.
6 வது அரைதிறக்கக்கூடாது அதை திறப்பதன் மூலம் பல அழிவுகள் ஏற்படும் என திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தடையை பெற்றனர்.
திறக்கப்பட்ட 5 அறைகளில் விலைமதிப்பில்லாத வைரம்,வைடூரியம், தங்க நாணயங்கள், தங்க நகைகள், தங்கத்தால்செய்யப்பட்ட விஷ்ணு சிலைகள் என பல கோடிமதிப்பிலான சொத்துக்கள் ரகசிய அறையில் இருந்தது.
கோவிலுக்கு உள்ளே செல்ல சில கட்டுப்பாடுகள் உள்ளன. நாம் கொண்டுசெல்லும் அனைத்துப் பொருட்களையும் கிளாக்ரூம்பில் வைத்துவிட வேண்டும்.குழந்தைகளுக்கான உணவு, மருந்து, மாத்திரைகள் மட்டுமே கோவிலுக்குள்எடுத்துசெல்லமுடியும்.
இக்கோவிலுக்கு ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆண்களாக இருந்தால் மேல் அங்கி இல்லாமல் வேட்டியுடன் உள்ளேஅனுமதிக்கப்படுகின்றனர்.பெண்களாக இருந்தால் சேலை, பாவாடை தாவணி அணிந்து வரலாம்.
இந்த உடையில்வராதவர்கள் அங்கேயே 50 ரூபாய்க்கு வாடகைக்கு வேட்டி வாங்கி ஆடையின் மேல் கட்டிக்கொள்ளலாம்.
கருவறையில் மகாவிஷ்ணு இடது கையில் தாமரையும், வலதுகை சிவபெருமான் மீது தொங்குவது போன்றும், பூமாதேவியும், மகாலட்சுமியும் இருபுறம் வீற்றிருக்க நாபி கமலத்தில் தாமரை மலரில் பிரம்மதேவனும் கொண்டு அனந்தசயனத்திருக்கோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார்.
கேரளா திருவனந்தபுரம் பலவன்காடி கணபதி கோவில்:
திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு கோவிலும் தனக்கென பல சிறப்புகளையும் தலவரலாறுகளையும்கொண்டது.இப்போது நாம் பார்க்கவிருக்கும் திருவனந்தபுரம் பலவன்காடி கணபதி கோவில் பத்மநாபசாமி கோவிலுக்குவடக்கே அமைந்துள்ளது. ஆரம்பகாலங்களில் தமிழ்நாட்டின் முறைப்படி இருந்த இந்த கோவில் தற்போது முழுவதுமாககேரளா முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.
இக்கோவிலின் தலவரலாறு நாம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். நான்கு கைகளையுடை இந்த விநாயகர்திருவிதாங்கூர் தலைநகரான பத்மநாதபுர ஏரியிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அதற்கு மக்கள் பூஜை செய்ததாகவும்கூறப்படுகிறது.
திருவிதாங்கூர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பிறகு திருவனந்தபுரம் பழவன்காட்டில் 3 அடிஉயரத்தில் மூலவரை கொண்ட சிறிய கோவில்கட்டப்பட்டது.பலமுறை புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில் தங்கத்தாலானகணபதியும், கல்லால் ஆன கணபதி சிலையும் உண்டு.
மூலவர் பாலகணபதி வலது காலை மடித்து உட்கார்ந்த நிலையில் உள்ளது. இக்கோவிலில் 32 கணபதி சிலைகள் உள்ளன.
கோவில் வளாகத்தில் ஐயப்பன், துர்காதேவி, நாகராஜா சிலைகளும் உள்ளன. கோவிலின் வெளிப்புறத்திலிருந்தே விநாயகரை அழகாக காணமுடியும். இங்கு கணபதி ஓமமும், விநாயகர்சதுர்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இக்கோவிலின் முக்கிய வழிபாடு தேங்காய் உடைத்தல். ஒரு நாளைக்கு 1000 த்திற்கும் மேற்பட்ட தேங்காய் சூறையிடப்படுகிறது. அப்பம், அடை, மோதகம் இங்கு கொடுக்கப்படும் பிரசாதம்.
ஆண்கள் மேலங்கி அணியாமல் வேட்டியுடனும், பெண்கள் சேலையுடனும் பாரம்பரிய உடையில் தான் கோவிலுக்குள்செல்லவேண்டும்.
சங்குமுகம் கடற்கரை
பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சங்குமுகம் கடற்கரைதிருவனந்தபுரத்தில் உள்ள மிக அழகிய கடற்கரை. சங்குமுகம் கடற்கரைக்கு சுனாமி கடற்கரை என்ற மற்றொரு பெயரும்உண்டு.
2006 ல் சுனாமி தாக்குதல் அதிமாக இருந்த இடம். சுனாமிக்கு பிறகு கேரளா அரசு இந்த பெயரை வைத்ததாககுறிப்பிடுகின்றனர்.
பறந்து விரிந்த அமைதியான கடற்கரை சூரிய அஸ்தமனத்தை ரசிக்க சிறந்த இடம்.
சங்குமுகம் கடற்கரைதற்போது கேரளா அரசால் மேம்படுத்தப்பட்டு சிறுவர்பூங்கா,எலிகாப்டர், சிற்பியில் ஒரு பெண் படுத்திருப்பதை போன்ற ஒருசிலை என ஒரு அழகிய இடமாகவும், அறிவு சார்ந்த இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்தஎலிகாப்டர் 45 வருடம் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த கடற்கரையையொட்டி ஒரு கிணறும், கல்மண்டபமும் உள்ளது. மாணவர்கள் அதிகம் சுற்றுலாவிற்கு வந்துசெல்லும் இடமாக உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு சொல்லப்படுகிறது.
கோவிலுக்குள் செல்லவேட்டி மற்றும் சேலை எனும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறை, சுனாமி கடற்கரை என அழைக்கப்படும் சங்குமுகம்கடற்கரை, வனங்கள் அமைத்து பாதுகாக்கப்பட்ட உயிரியல் பூங்கா என நாம் பார்த்தது ஒரு நாள் சுற்றுலா மட்டுமே.
இரண்டாம் நாள் சுற்றலாவை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். திருவனந்தபுரம் சுற்றுலா Thiruvananthapuram Tourist Places







