சிவா பக்தர்களின் வாழ்நாள் கனவு மவுண்ட் கைலாஷ் தரிசனம் :

உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல மர்மங்களும், பல அமானுஷியங்களும் இன்றுவரை உலகளவில் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாமும் அதை பல ஊடகங்கள் மூலமாகவும், காணொளிகள் மூலமாகவும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனாலும் நம்முடைய பழங்கால புராணக்கதைகளில் பல இடங்களில் அன்றே கணித்து சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம், இது உண்மையா? இல்லை மாயையா? அன்றே துல்லியமாக கணக்கீட்டு சொல்லியது எப்படி.
நம்முடைய உலகம் எப்படி தோன்றியது? இதற்கு யார் காரணம், இந்த ரகசியங்கள் எங்கு பாதுகாக்கபடுகிறது? இப்பொழுது வளர்ந்திருக்கும் அளவிற்க்கு அறிவியலும் விஞ்ஞானமும் அப்பொழுதே இருந்ததா? என பல கேள்விகள் நம்முள் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆன்மிகமும் அறிவியலும் சில சமயங்களில் ஒன்று சேர்ந்து நம்பமுடியாத பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இதையெல்லாம் நம்புவதா நம்பாமல் இருப்பதா என தெரியவில்லை.
சில கூற்றுகள் ஆன்மிகத்தில் உண்மை என நம்முடைய முன்னோர்கள் புராணக்கதைகள் வழியாக அன்றே கணித்திருப்பார்கள். சில அறிவியல்’விஞ்ஞானிகளே வியக்கும் அளவிற்க்கு பலநிகழ்ச்சிகள் நடந்திருக்கும்.
இப்படி ஆன்மிகவாதிகளும் அறிவியல் ஆர்வலர்களும் ஒன்று சேர ஒரே இடத்தில் பல அமானுஷியங்களை இன்றும் நிகழ்த்தி கொண்டுதான் இருக்கிறது.இப்படிப்பட்ட ஒரு இடத்திற்க்கு சென்று ரகசியங்களை அறியவேண்டும் என முடிவெடுத்து நான் தேர்வு செய்தது ” சுற்றுலா “.
கட்டுரையின் தொடக்கத்திலிருந்தே ரொம்ப புதிராகவே உள்ளதே என குழம்பவேண்டாம்.நம்முடைய வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உண்டு.அதில் குறிப்பிட்ட சில இடங்களையாவது நேரில்சென்று பார்த்து ஆராயவேண்டும் என்பது நீண்டநாள் கனவு.அதனை நினைவாக்கும் விதமாக நான் மேற்கொண்ட சுற்றுலா “ஆன்மிக சுற்றுலா “.
இச்சுற்றுலா பெரும்பாலும் மேற்கொள்ள காரணம் குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு மனம் தானாகவே அமைதியை தழுவும் ஒரு இடம் ஆன்மிகம்.ஆன்மிகத்தின் பயன்களை வரையறுக்க இதுவரையில் யாராலும் முடியவில்லை.
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.இதில் படைத்தல்,காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களும் மூலகாரணமானவர்கள் இவர்கள் தான்.
இப்படி நம்மை இவ்வுலகில் படைக்கும் திறன் கொண்ட பிரம்மாவும் சரி, நம்மை பாதுகாத்து வரும் விஷ்ணுவும் சரி, அழிக்கும் சக்திகொண்ட சிவபெருமானின் அடி முடியை பார்க்கமுடியவில்லை என்பது பல புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே.
அவ்வளவு சக்திகொண்ட சிவபெருமான் விற்றிருப்பதாக நம்பப்படும் உலகப்புகழ்பெற்ற “கைலாய மலை”க்கு சுற்றுலா செல்ல விரும்பினேன்.
இந்த ஆன்மீக சுற்றுலா தலம் பலரது வாழ்நாள்கனவாக இன்றளவிலும் இருந்து வருகிறது. இத்தலத்தின் பெருமையை எண்ணிலடங்காது.
நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து மவுண்ட் கைலாஷ் எனப்படும் கைலாய மலைக்கு செல்ல திட்டமிட்டோம்.அதற்கான நடவடிக்கை பரபரப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டது.
எப்படி செல்வது :-

நாங்கள் ஒரு தனியார் சுற்றுலா துறையினர் மூலமாக செல்ல முடிவெடுத்தோம். இச்சுற்றுலாவை பொறுத்தவரையில் லக்னோவிலிருந்து தான் தொடங்கும். அதற்கு முன் தமிழ்நாட்டிலிருந்து லக்னோ வரை செல்வது நம்முடைய செலவு தான்.நாங்கள் இந்தியாவில் உள்ள கர்நாடகா விமான நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.
தமிழ்நாட்டில் நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து அருகாமையில் இருப்பது பெங்களூர் விமான நிலையம் தான். பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு விமானம் மூலமாக செல்ல அனைத்து வழிமுறைகளும் முடிந்தது.
பெங்களூர் முதல் லக்னோ வரை செல்ல விமான பயண சீட்டை பதிவுசெய்தோம்.பதிவுசெய்த பிறகு அவரவர் இருக்கையில் அமர்ந்தோம். பெங்களூரில் இருந்து லக்னோ செல்ல 2 மணி நேரம் பயண நேரம்.பிளைட் டிக்கெட் இந்திய பண மதிப்பில் 10000 டூ 15000 ரூபாய் வரை தேவைப்படும்.
எங்கு தங்குவது :
பின்பு லக்னோவில் உள்ள விமான நிலையத்தை அடைந்தோம்.இங்கிருந்து வாடகைக்கு நான்கு சக்கர வாகனத்தை பதிவுசெய்தோம். விமான நிலையத்திற்கு வெளியில் வாகனம் வந்து காத்துக்கொண்டிருந்தது. இந்த வாகனத்திற்கு கட்டணமாக ஐநூறு ரூபாய் வசூலிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து லக்னோ வில் ஆன்மிக சுற்றுலா தொடங்கும் இடத்திற்கு அருகில் நமக்கென ஒரு தங்கும் விடுதியில் அன்றிரவு தங்கினோம். ஏகப்பட்ட தங்கும் விடுதிகள் லக்னோவில் உண்டு.சுற்றுலாத்துறையினர் நமக்கு பிடித்த விடுதியில் ரூம் பதிவுசெய்து தருவார்.
இந்த விடுதிக்கான கட்டணம் நம்முடைய சொந்த செலவு தான். விடுதியில் உள்ள அறைகள்,பாத்ரூம்கள் மற்றும் இதர இடங்கள் சுத்தமானதாக இருந்தது.இன்றிரவு இரவு உணவை நம்முடைய சொந்த செலவில் சாப்பிட வேண்டியிருக்கும் .
அடுத்த நாள் காலையில் ஒன்பது மணியிலிருந்து நம்முடைய பயணம் தொடங்கும்.காலையில் தூங்கி எழுந்து பயணத்திற்கு தயாரானோம்.இந்த விடுதியில் காலை உணவு அருந்திய பிறகு, நம்முடன் வந்திருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் வரை விடுதியின் வெளியே சிறுது நேரம் காத்திருந்தோம்.
இந்த சுற்றுலாவில் குறைந்தது நம்மை போல பல சுற்றுலா பயணிகள் பல நாட்டிலிருந்து வந்திருந்தனர்.குறைந்தபட்சமாக ஐம்பது பேர் இருந்திருப்பார்கள்.இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இச்ச்சுற்றுலாவிற்கு வந்திருப்பார்கள்.அதிகபட்சமாக வயதானவர்கள் தான் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
நாங்கள் அனைவரும் இங்கிருந்து நேபாளில் உள்ள மற்றொரு தங்கும் விடுதிக்கு செல்ல தயாராக இருந்தோம்.எங்கள் அனைவரையும் அழைத்து செல்ல தனி தனி கார் தயார்நிலையில் இருந்தது.
வந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலோனோர் வயதானவர்கள் என்பதால் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு வாகனம் பதிவுசெய்யப்பட்டது. எங்களுக்கு ஏற்றார் போல் வாகனமும் அலுங்காம குலுங்காம அழைத்து சென்றது.
இந்தியா டூ நேபால் பார்டர் :-

இப்பொழுது நம்முடைய வாகனம் லக்னோ டூ நேபால் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.லக்னோவில் இருந்து நேபால் செல்ல நான்கு முதல் ஐந்து மணி நேரம் தேவைப்படும்.இதற்கிடைப்பட்ட நேரத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றவாறு தேனீர் பருகவும், ரெஸ்ட் ரூம் செல்லவும் ஆங்காங்கே வாகனம் நிறுத்தப்பட்டது.
இன்று மதிய உணவு நேபாளில் உள்ள ஹோட்டலில் தான் சாப்பிடப்போகிறோம்.தற்பொழுது இந்தியா – நேபால் -பார்டரில் நாம் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்தியா பார்டர் மற்றும் நேபால் பார்டர் என இரு இடத்திலும் நம்மை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
நம்மை முழுவதும் சோதனை செய்யும்பொழுது நம்மிடம் உள்ள பாஸ்போர்ட்,வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கவேண்டும்.இதை அவர்களிடத்தில் முறையாக காண்பித்தபிறகு அங்கிருந்து நாம் செல்ல அனுமதிக்கப்படுகின்றோம். நேபால் பார்டர் என்பது நேபால்கஞ்சி என்ற பகுதியில் உள்ளது.
நேபால் கஞ்சியில் உள்ள ஒரு தங்கும் விடுதியை நோக்கி நமது வாகனம் சென்றது. நாம் தங்கப்போகும் ஹோட்டலும் வந்தது.சுற்றுலாப்பயணிகளை வரவேற்க இரண்டு பணிப்பெண்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
ஒருவர் தங்கள் கைகளால் நெத்தியில் போட்டு வைத்தும், மற்றொருவர் பெரிய சைஸ் ருத்ராட்சை மாலையை சுற்றுலாப்பயணிகளுக்கு அணிவித்து வரவேற்றனர்.
அடுத்ததாக நம்மை பற்றிய முழு விவரத்தையும் அங்குள்ளவர்களிடம் தெரிவித்து செக் இன் ப்ராசஸ் முடித்துவிட்டோம். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவியை நிமிடம் கொடுத்தனர்.நமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நாம் எடுத்துவந்த உடமைகளை வைத்துவிட்டோம்.
மதிய சாப்பாடு தயாராக இருந்தது.மதிய உணவை உண்டபிறகு சிறிது நேரம் இளைப்பாறினோம். ரூமை பொறுத்தவரையில் சுத்தமாக வைத்திருந்தனர்.மாலை நேரத்தில் அங்குள்ள பெரிய ஹாலில் ஒரு மீட்டிங் நடந்தது.
இதில் நம்முடன் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கும் ,ஒரு பண்டித்துக்கும் இடையில் மீட்டிங் நடைபெற்றது.
இதில் புனித யாத்திரையான கைலாய யாத்திரையை பற்றி பல தகவல்களை கூறினார்.நமக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது,அன்றிரவே அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு நம்மை அழைத்து சென்றனர்.
இந்த கோவிலின் பெயர் பாகேஸ்வரி டெம்பிள் என்றழைக்கப்படுகிறது.இந்த கோவில் ஒரு சக்திபீடமும் கூட,நமக்காகவும் நம்முடைய குடும்பத்திற்காகவும் அங்கு அக்னீ வேள்வி நடத்தப்படுகிறது. அதேபோல நம்முடைய கையால் பூஜை பொருள்கள் கொண்டு அக்னீ தெய்வத்திற்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
அப்படியே அருகில் உள்ள துர்க்காதேவியையும் கருவறைக்கு சென்று வணங்கிடலாம்.தெய்வங்களை வணங்கி வெளியே வந்தபிறகு ஒரு பத்துபேர் கொண்டு குழு இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்து அதற்கேற்றாற் போல நடனமாடி மகிழ்ந்தனர்.
Kailash Manasarovar Dharshan
அங்கிருந்து கிளம்பி நாம் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கி விட்டபிறகு இரவு உணவை சாப்பிட்டோம். அதற்கடுத்து ஒரு குட்டி துக்கத்தை போட்டு அடுத்தநாள் காலையில் தூங்கி எழுந்ததும் .காலைஉணவை உண்டபிறகு புனித யாத்திரைக்கு செல்ல ஆரம்பித்தோம்.
நாம் செல்லும் இந்த ஆன்மிக சுற்றுலா பயணிகளை பல குழுக்களாக பிரித்து அழைத்துச்செல்கின்றனர். நமக்கான நேரம் வந்துவிட்டது.நமக்கான நேரம் வந்துவிட்டது. தற்பொழுது நம்மை அழைத்துக்கொண்டு நேபாளில் உள்ள நேபால்கஞ்சி என்ற விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தோம்.
அங்கு சென்று பார்க்கும்பொழுதுதான் தெரிந்தது,முதலாவது குழுக்கள் ஆன்மிக சுற்றுலாவை கண்டுகளித்து திரும்பியது.அடுத்ததாக நம்முடைய குழுக்கள் தயார்நிலையில் இருந்தது.
குழுக்களில் உள்ள சுற்றுலாப்பயணிகளிடம் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. அதை எடுத்துக்கொண்டு செக் இன் பிராசஸ் எல்லாவற்றையும் முடித்தபிறகு விமானத்தின் அருகில் மற்றொரு செக்கிங் நடைபெறும்.
பரபரப்பான மனநிலையில் விமானத்தில் பறக்க ஆரம்பித்தோம்.அவரவர் விருப்பத்திற்கேற்ப இருக்கை வழங்கப்பட்டது.
அதாவது ஜன்னல் ஓர இருக்கையை அல்லது சாதாரண இருக்கையை என முடிவுசெய்து கொள்வோம்.எனக்கு ஜன்னல் ஓர இருக்கை வழங்கப்பட்டது.நாம் புனித யாத்திரை செல்லும் விமானத்தின் பெயர் “ஸ்ரீ ஏர்லைன்ஸ் “.
இந்த ஏர்லைன்ஸ்ஸை பொறுத்தவரையில் கைலாய மலைக்கு அருகில் சென்று வழிபடப்போகின்றோம்.முதன்முதலாக விமானத்தில் இருந்துகொண்டே கைலாய மலையை வணங்கி தரிசிக்கப்போகிறோம்.
அதனாலதான் இந்த சுற்றுலாவின் பெயர் “Kailash Manasarovar Dharshan “என அழைக்கப்படுகிறது.
நாம் சென்ற விமானம் மெதுவாக தரையிலிருந்து மேல பறக்க ஆரம்பித்தது.அப்பொழுது விமானத்தில் வேலைசெய்யும் பணிப்பெண் ஒருவர் சுற்றுலா பற்றிய அறிவுரையை வழங்கினார்.
ஜன்னல் வழியாக பார்க்கும்பொழுது நம்முடைய மனதை கொள்ளைகொள்ளும் விதமாக மலைகள் மற்றும் குன்றுகள் வெண்ணிற பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது . அக்காட்சிகளை பார்க்கும்பொழுது உள்ளம் நம்மை வேற்று உலகத்தில் இருப்பதுபோல உணரவைத்தது.
மும்முர்த்திகளான பிரம்மா,விஷ்ணு மற்றும் சிவன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை.நமக்கு எப்படி வசிப்பிடம் உள்ளதோ அதேபோல மும்முர்த்திகளுக்கும் வசிப்பிடம் உண்டு.
உயிரினங்களை படைக்கும் பிரம்மாவிற்கு சத்தியலோகம்,காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு வைகுண்டமும்,அழிக்கும் வல்லமை கொண்ட சிவபெருமானுக்கு கைலாய மலையும் வசிப்பிடம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
பிரம்மா மற்றும் விஷ்ணுவின் வசிப்பிடத்தை நம்மால் காணமுடியாது ,ஆனால் சிவபெருமானின் வசிப்பிடத்தை நம் கண்களால் காணமுடியும் என்பதே இதன் சிறப்பு .
பஞ்ச கைலாஷ்( Panch Kailash):

இந்து புராணங்களின் படி சிவபெருமானுக்கும் கைலாய மலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.சிவபெருமானின் பஞ்ச கைலாஷ் தளங்களில் ஒன்று மவுண்ட் கைலாஷ்.
பல நூற்றாண்டுகளாக சிவபெருமான் இங்குதான் வாழ்வதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
அதேபோல பல பழங்கால நூல்கள் மற்றும் மரபுகளின் படி ஐந்து புனிதமலைகள் சிவபெருமான் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்ச கைலாஷ் என்றழைக்கப்படும் மவுண்ட் கைலாஷ்(Mount Kailash in Tibet ),ஆதி கைலாஷ்(Adi Kailash in Uttarakhand),ஷிகர் கைலாஷ் (Shrikhand Mahadev in Himachal Pradesh) ,கின்னர் கைலாஷ் ( Kinnaur Kailash in Himachal Pradesh) மற்றும் மணிமஹேஷ் கைலாஷ்(Mani Mahesh in Himachal Pradesh) சிவபெருமானின் தெய்வீக விடு.
இதில் மவுண்ட் கைலாஷ் தவிர மற்ற மலைகள் இந்தியாவில் உள்ளது.கைலாய மலை மட்டும் சீனா வசம் உள்ளது.
கைலாய மலை (Mount Kailash):-
இமயமலைத்தொடர் மற்றும் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது தான் “கைலாய மலை “.
இக்கைலாய மலை ஒரு ஆன்மிக புனித தலமாக கருதப்படுகிறது.முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மவுண்ட் கைலாஷ் பல மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒன்று.
இந்த மவுண்ட் கைலாஷ் உலகத்தின் மையம்,சொர்க்கத்தின் படிக்கட்டு என பல பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது.
மவுண்ட் கைலாஷை பொறுத்தவரையில் 21778 அடி உயரத்தில் நிற்கும் ஒரு கம்பிரமான சிகரம்.இந்த சிகரத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குட்டி குட்டி மலைகள் மற்றும் முற்றிலும் மாறுபட்டது .
குறிப்பாக கைலாய மலையானது முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் காணப்படும். இந்துக்கள்,புத்தர்கள்,ஜனகர்கள் மற்றும் பான்கள் என அனைத்து மதத்தினருடைய ஆன்மிக ஸ்தலமாக கைலாஷ் மலை போற்றப்படுகிறது.
இந்த கைலாய மலையானது எகிப்து பிரமிடுகள் போலவும்,சமச்சீர் வடிவம் கொண்டு தனித்து காணப்படுகிறது.
இந்த மலையானது ஆண்டுகள் முழுவதும் பனிகளால் மூடப்பட்டு குளிர்ந்து காணப்படும்.அதேபோல நான்கு முக்கிய முகங்களை கொண்டு அழகாக காட்சியளிக்கும்.
வெண்மையான பனிபடர்ந்த காட்சியானது பார்ப்பதற்கு கம்பிரமாகவும்,அழகாகவும் காட்சியளிக்கும்.
மதங்களும் அவர்களின் நம்பிக்கைகளும் :-
பஞ்ச கைலாஷாவின் முதன்மை கைலாய மலையான மவுண்ட் கைலாஷ் பற்றி பல கூற்றுகள் உண்டு.
அவற்றுள் இந்துக்கள் சிவபெருமானின் வசிப்பிடமாகவும் ,பார்வதியுடன் சிவபெருமான் நித்திய தியானத்தில் மலையின் உச்சியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது .
அதேபோல புத்தர்கள் டெம்சோக்கின் இல்லமாகவும்,ஜைனர்கள் தங்களின் முதல் தீர்த்தகர் மோட்சம் அடைந்த இடமாகவும்,பான் முறையை பின்பற்றுபவர்கள் அவர்களின் புனித தலமாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது.
மர்மங்களும் அமானுஸ்யங்களும் நிறைந்த கைலாய மலை :

கைலாய மலையை ஒரு வரையறுக்கமுடியாத மலைச்சிகரம்.அதனால் தான் மில்லியன் நூற்றாண்டுகளாக ரஷியா,நாசா போன்ற அறிவியல் விஞ்ஞானிகள் கூட குழம்பும் அளவிற்க்கு பல மர்மங்களையும், அதிசயங்களும், அமானுஸ்யங்களும் கொண்டது.
உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் கிட்டத்தட்ட 29032 அடி உயரம் கொண்டது .
ஆனால் கைலாய மலை 21778 அடி உயரம் கொண்டது .இருப்பினும் எவரெஸ்ட் சிகரத்தை கூட ஏறி சாதனை படைத்த நம்மால் ,உயரம் குறைவானது கைலாய மலையை ஏறி தொட்டவர்கள் யாரும் இல்லை.
புராணக்கதைகளை தவிர வேறு யாராலும் இன்றுவரை சிவனின் வசிப்பிடமான கைலாய மலையை தொட்டதில்லை.
அதையும் மீறி சிகரத்தின் மீது ஏறியவர்கள் யாரும் உயிரோடு திரும்பியது இல்லை.பல நாட்டினர் இந்த மலையில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முற்பட்டும் தோல்வியில் தான் முடிந்தது.
மலையின் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பிறகு நேரம் வேகமாக நகர்வதாகவும் , அதோடு மலையானது திசை தெரியாத அளவிற்கு நம்மை குழப்பி விடுவதாகவும்,
இரண்டு வாரங்களில் நம்முடைய உடலில் உள்ள நகம் மற்றும் முடியின் வளர்ச்சி எவ்வளவு இருக்குமோ அதே அளவு வளர்ச்சி இருநாட்களில் தெரிவதாகவும் பல ஆராய்ச்சிகள் கூறுகிறது .
மலையேற்றத்தின் போது திசை தெரியாமல் பாதிவழியில் திரும்பியவர்கள்,இளமையாக இருந்தாலும் சில வருடங்களிலே அதிகமாக முதுமை அடைந்து இறந்துவிடுவதாக பல அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மலையின் உச்சியில் சென்றால் பூமியை பற்றிய பல ரகசியங்கள் நமக்கு தெரியவரும் என பல ஆன்மிகவாதிகளும்,அறிவியல் அறிஞர்களும் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து ஆராய்ச்சிகள் நடந்தாலும்,எந்த ஆராய்ச்சிகளும் வெற்றிபெறவில்லை என்பதே உண்மை.
சொர்க்கத்தின் படிக்கட்டுகள் கைலாய மலை:
புனித ஸ்தலமான கைலாய மலையின் உச்சியில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக சுமார் 52 கிலோமீட்டர் கைலாய மலையின் அடிவாரத்தில் யாத்திரீகர்கள் சுற்றிவர அனுமதிக்கப்படுகிறார்கள்.
கைலாய மலையை சுற்றி முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்.இந்த கைலாய மலையினை சுற்றிவருவதால் அவர்களுக்கு பாவ விமோட்சனம் கிடைப்பதாகவும், தாங்கள் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்வதாகவும் நம்பப்படுகிறது.
காலத்திற்கு ஏற்ப கைலாய மலைகள் நிறம் மாறுவதாகவும்,நான்கு புறமும் வெவ்வேறு அமைப்பு கொண்டுள்ளதாகவும் சில ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது .
அதிசய ஏரிகள் கொண்ட மவுண்ட் கைலாஷ் :

கைலாய மலையின் அடிவாரத்தில் இரண்டு அழகான ஏரிகள் உள்ளது.உலகின் மிக உயரமான நன்னீர்என்றழைக்கப்படும் மானசரோவர் ஏரி.இந்த மலையின் அடிவாரத்தில் 15060 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு யாத்திரீகர்கள் நீராடினால் தாங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டதாக நம்பப்படுகிறது.
ஆக்ரோஷமான சூழ்நிலையில் கூட அமைதியாக இருக்கும் .இதற்க்கு அடுத்து நடுவில் ஒரே ஒரு சிறிய தடுப்பு கொண்ட ராவணா ஏரி அல்லது ராக்ஷஸ் ஏரி அமைந்துள்ளது.இது உப்பு நீர்.கெட்ட சக்திகளை கொண்ட ஏரி.
சாதாரண சூழ்நிலையிலும் ஆக்ரோஷமாகவே இருக்கும்.இதில் ஆச்சரியப்படவேண்டிய ஒன்று இந்த இரு ஏரிகளும் பக்கம் பக்கம் இருந்தும் இதன் நிறம்,குணம் மாறி மாறி இருப்பதுதான்.
வான்வழி கைலாய மலை தரிசனம் :
சுற்றுலாத்துறையினர் விமானத்தில் செல்வதற்க்கு முன்பே சிவலிங்கம்,கையில் அணியக்கூடிய ருத்திராட்சை மாலை,பிரசாதம் பாக்கெட்,மனசரோவரின் புனித நீர் அடைக்கப்பட்ட சிறிய பாட்டில் கொண்ட சிறிய பை நிமிடத்தில் கொடுத்தார்கள்.
இதை கைலாஷ் மலை அருகில் விமானம் சென்றதும், கையில் அந்த சிவலிங்கத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டால், பண்டிட் ஒருவர் அதற்கு பூஜை செய்து ஆசி வழங்குவார்.என்னதான் கைலாய மலையின் அருகில் வானத்தில் இருந்து ரசித்தாலும் நேரில் சென்று வணங்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த ஆன்மிக சுற்றுலா முடிந்த பிறகு நாம் சென்ற ஏர்லைன்ஸ் மூலம் நமக்கு கைலாய மலைக்கு சென்று வந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மறுபடியும் விமான நிலையத்திலிருந்து நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.மதிய சாப்பாடு தயாராக இருந்தது, பசியோடு இருந்ததால் நல்லா சாப்பிட்டோம்.
கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு மாலை அந்த விடுதியில் உள்ள கோவிலில் சிவலிங்கத்திற்கு நம் கைகளால் பூஜை செய்தோம்.மனதிற்கு நிறைவாக இருந்தது.
உலக புகழ்பெற்ற புனித ஸ்தலமான மவுண்ட் கைலாஷ் மலைக்கு சுற்றுலா இரண்டு நாள் இரவு மற்றும் மூன்று நாள் பகல் பேக்கஜ்ஜில் சென்றோம்.இந்த சுற்றுலாவை பொறுத்தவரையில் லக்னோ டூ லக்னோ தான் சுற்றுலா தொடங்குகிறது.
அதேபோல இந்த பேக்கஜ்ஜில் காலை,மதியம் மற்றும் இரவு உணவு சுற்றுலாத்துறையினரே ஏற்பாடு செய்துகொடுக்கின்றனர்.
மேலும் இரண்டு நாட்கள் தங்கும் விடுதி,சுற்றிப்பார்க்க கார்,பிலைட் டிக்கெட் எல்லாமே இந்த சுற்றுலா தொகுப்பில் அடங்கும். மொத்தத்தில் கைலாய மலையை வான்வழியாக சுற்றிப்பார்க்க ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும்,இத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்துவரும்.



