பரம்பிக்குளம் சுற்றுலா

x     

ஒரு மாறுதலுக்காக போகக்கூடிய சுற்றுலாக்களில், சுற்றுலா செல்லும் இடங்களை தேர்ந்தெடுப்பதுஎன்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. இயற்கையின் அழகை ரசிப்பதோடு சேர்த்து ஒருசாகசத்தையும் செய்யவேண்டும் என்பது சிலரின் விருப்பம்.

அமைதிக்காக செல்லக்கூடிய சுற்றுலாவில்என்ன சாகசம் வேண்டியிருக்கு என்பது பலரின் கேள்விகளாக எதிரொலிக்க, இருப்பது ஒரு வாழ்கைஅதில் நமக்கு பிடித்தமாதிரி  வாழ்வதில் என்ன தவறு.

உற்சாகத்தோடு சேர்த்து ஒரு திகிலையும்அனுபவித்தாள் தான் என்ன?. இயற்கையும் திகிலையும் ஒருசேர அனுபவிக்கும் சுற்றுலாத்தளங்கள் மிககுறைவாகத்தான் உள்ளது. இன்று நாம் பார்க்கக்  கூடிய கேரளா,  பரம்பிக்குளம் சுற்றுலாசாகசப்பிரியர்களின் சுற்றுலாத்தளம் என்று தாராளமாக கூறலாம்.

டாப் ஸ்லிப்:

    கோயம்பத்தூர்,பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக நாம் டாப் ஸ்லிப்க்கு வரவேண்டியதுஇருக்கும்.கோயம்பத்தூரிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் நாம் டாப் ஸ்லிப்பை வந்தடைய முடியும்.

இங்கு வருவதற்கு முன்னர்வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். சேத்துமடை சோதனை சாவடியில் அனுமதி சீட்டைவாங்கிக்கொண்டு உள்ளே வரவேண்டும்.டாப் ஸ்லிப்பில் பல  பசுமையான பல சுற்றுலா இடங்கள்உள்ளது.  டாப் ஸ்லிபிபிருந்து தான் நாம் பரம்பிக்குளம் வரவேண்டும்.

வழித்தடம்:

    பரம்பிக்குளம் வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளது. கோயம்பத்தூரிலிருந்து பொள்ளாச்சிக்குபேருந்தில் வரவேண்டியதிருக்கும் . பொள்ளாச்சிலிருந்து டாப் ஸ்லிப் வழியாக பரம்பிக்குளம்வரமுடியும்.

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. காரிலோ,ஜீப்பிலோ  அல்லது பேருந்திலோதான் வரமுடியும்.இந்த இடத்திற்கு பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

Day Trip:

பரம்பிகுளத்தை பொருத்தவரை ஒரே நாளில் நாம் சென்று வர முடியும். ஒரே நாளில் சென்று வருவதற்குவனத்துறை அனுமதி தேவையில்லை.

பரம்பிகுளத்தில் ஒரு நாள் :

பரம்பிகுளத்தில் ஒரு நாள் தங்கி அங்குள்ள அனைத்தையும் பார்த்து ரசிக்க முடியும். குறிப்பாக மாலை 3 மணி அளவில் வேன் சபாரி செல்லலாம் . அந்த நேரத்தில் காட்டிற்குள் சென்றால் தான் பல அரியவகைவிலங்கினங்களை நம்மால்பார்க்க முடியும்.நாம் பரம்பிக்குளத்தில் தங்குவதென்றால் முன் அனுமதி பெறவேண்டும்.

கொழுக்குமலை சுற்றுலா

பரம்பிக்குளம் பற்றிய சில தகவல்கள்:

    பரம்பிக்குளம் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு ஒரு பயம் ஏற்படும் அதற்கு பரம்பிக்குளம் நுழைவுவாயில்கூட ஒரு காரணமாக இருக்கலாம். புலி, சிறுத்தை என பல விலங்கினங்களைகற்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட நுழைவு வாயில் .

கேரளாவில் உள்ள பரம்பிக்குளம் அடர்ந்த காட்டுமலைப்பகுதி . கேரளத்திலிருந்து பரம்பிக்குளத்துக்கு    தரை மார்க்கமாகச் செல்வதாக இருந்தால்  தமிழகத்துக்குள் வந்து பொள்ளாச்சியிலிருந்துதான் செல்ல முடியும்.

இதற்க்கு பொள்ளாச்சியிலிருந்துஇரண்டு மணி பயணம் மேற்கொள்ளவேண்டும்  . இந்த சுற்றுலாவிற்கு ஆன்லைனில் முன்பதிவு  செய்துகொண்டும் வரமுடியும்.

    பரம்பிகுளத்தின் சோதனை சாவடி ஆனைப்பாடியில் உள்ளது. பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. காட்டுப் பகுதி என்பதால் எளிதில் அனுமதிகிடைக்காது.

தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் வரவேண்டியதுஇருக்கும்.

தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், தேசியப்பூங்கா ,காணக் கிடைக்காத வனவிலங்குகள், அரியவகை சிங்கவால் குரங்குகள், பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்த வனப்பகுதி. அதனால், பரம்பிக்குளம்  வனம் மிகுந்தஅக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் கடுமையானக் கட்டுப்பாட்டுக்கும்சோதனைக்கும் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.அக்டோபர் முதல் மார்ச் வரை பரம்பிக்குளம்செல்ல ஏற்ற மாதம் ஆகும்.

இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதுதடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு மதுபானத்திற்கு அனுமதி கிடையாது.

பரம்பிக்குளம் தகவல் மையம்:

       பரம்பிக்குளம் சோதனைச்சாவடியில் அனுமதிப்பெற்று சிறிது நேர பயணத்தில் நாம் பரம்பிக்குளம்தகவல் மையத்தை(Parambikulam Tourisum Center) அடையமுடியும்.

இந்த தகவல் மையத்தின் நுழைவுவாயிலில் புலி கம்பிரமாக நடப்பதை போன்ற ஒரு கட்சியை நாம் பார்க்க முடியும் , அதை பார்க்கும்போதேபுத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு பயம் நம்மை தொற்றிக்கொள்ளும்.

இங்குதான் ஜீப் சபாரி, வேண் சபாரிசெல்வதற்கு நாம் அனுமதி சீட்டு வாங்கவேண்டி இருக்கும். வேண் சபாரிக்கு நுழைவு  கட்டணம் வசூலிக்கப்படுகிறது . காட்டில் 30 கிலோமீட்டர் வரை சுற்றி காட்டப்படுகிறது.

காடுகளில் உள்ளவிலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு கேரளா வனத்துறை இதை நமக்கு ஏற்பாடு செய்துகொடுக்கிறது.

 பரம்பிக்குளம் Van Saffari:

    காட்டில் உள்ள விலங்குகளையும், பறவைகளையும் பல நீர் தேக்க அணைகளையும் நாம் பார்க்கதயாராகிவிட்டோம். நம்முடன் ஒரு ஓட்டுனரும் , வழிகாட்டி என்று சொல்ல கூடிய கைட் இவர்கள் இருவரும் சேர்ந்துபயணிப்பார்கள் .

மாலை நேரத்தில் செல்லும் போதுதான் பெரும்பாலும் அங்குள்ள விலங்குகளை பார்த்து ரசிக்கமுடியும். வேன் நகர ஆரம்பித்த இடத்திலேயே மயில்கள் தோகையை விரித்து அழகாக ஆடியதை நம்மால்பார்க்கமுடிந்தது.

இது போன்ற நிகழ்வுகளை நாம் பார்ப்பது இன்றைய நாளில் நமக்கு ஒரு அதிசயம் என்று தான்சொல்லவேண்டும்.வேன் அடர்ந்த காட்டிற்குள் மெதுவாக ஒட்டப்பட்டது. அடுத்த 20 நிமிடத்தில் மான்களின்கூட்டங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இப்படியே காட்டெருமை, பன்றி  போன்றவற்றை பார்க்கும்வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யானையை மட்டும் பார்க்கமுடியாமல் போனது சிறிது வருத்தமாக இருந்தது.

தூனக்கடவு நீர்த்தேக்கம்:

    வேன் சபாரி செல்லும் இந்த 30 கிலோமீட்டரில்  சில நீர்விழ்ச்சிகளையும்,நீர்த்தேக்கங்களையும்   நம்மால்பார்க்கமுடியும். அப்படி நாம் முதலில் பார்க்கும் இடம் தான்  தூனக்கடவு அணை அல்லது தூனக்கடவு நீர்த்தேக்கம் .

இந்த அணையை சுற்றிலும் மலைவாழ் மக்கள்   வீடுகட்டி வாழ்ந்துகொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.இந்தசுற்றுலாவில் வரும் வருமானத்தை வைத்து பழங்குடி மக்களின் கல்விக்காக செலவிடுகின்றன.

அவர்களை சுற்றுலாவழிகாட்டியாகவும் பயிற்சி கொடுக்கின்றனர் கேரளா வனத்துறை அதிகாரிகள் . இந்த நீர்த்தேக்கத்தை சுற்றிலும்மலைகளால் சூழப்பட்டுள்ளதால் , எப்பொழுதுமே பசுமையாக காட்சியளிக்கும் .

இங்கு குரங்குகளை அதிகளவில்காணமுடியும் . இந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு பேருந்து வசதியும் உள்ளது. இந்த பேருந்தை மலைவாழ்மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றன.

இந்த இடம் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் இடமாக இருக்கும்.

கன்னிமரா தேக்கு

    அடர்ந்த காட்டில் அடுத்ததாக நாம் பார்த்தது  பல நூறு ஆண்டுகள் பழமையான பெரிய தேக்குமரம் ஒன்றை இங்குநாம் பார்க்க முடியும்.

10 பேர் கைகளை முழுவதும் விரித்து சுற்றி நின்று பிடித்தால்தான் மரம் முழுவதும் கைகோர்க்கமுடியும் . 400 ஆண்டு பழமைவாய்ந்த இந்த மரத்தைகேரளா வனத்துறையின் பொக்கிஷம் என்றே கூறலாம், பொத்திப்பொத்திப் பாதுகாக்கிறது கேரளா வனத்துறை   100 ஆண்டுக்கு முன் இங்குள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.

ஆனால் இந்த மரம் மட்டும் வெட்டாமல் விட்டுவிட்டனர்.ஆண்டுக்கு ஒரு முறை இந்த மரத்திற்கு பூஜைகள்செய்யப்படுகிறது.இந்த தேக்கு மரத்தை மலைவாழ் மக்கள் தெய்வமாக வழிபடுகின்றன.

இந்த மரம் 48 மீட்டர் உயரம்கொண்டது. இந்த மரத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தைகெளரவிக்கும் விதத்தில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி உள்ளது.

பரம்பிக்குளம் வரும் சுற்றுலா பயணிகள் இங்குவந்து கன்னிமரா தேக்குமரத்தை பார்த்து , அதன் அருகில் நின்று selfie எடுத்துக்கொண்டு செல்வதை நம்மால் பார்க்கமுடியும்.

பரம்பிக்குளம் அணை View Point:

    நம்முடைய வேன் நிற்கும் அடுத்த இடம் பரம்பிக்குளம் அணை View Point. இங்கிருந்து அந்த அணையின்அழகையும், காடுகளையும் , அணைக்கு நடுவேயிருக்கும் குட்டி குட்டி தீவுகளைம் நம்மால் பார்த்து ரசிக்க முடியும்.

இந்தவேன் நிறுத்தப்படும் ஒவ்வொரு இடங்களிலும் தங்கள் பயணத்தின் இனிமையான நிகழ்வுகளை புகைப்படமாக பலரும்பதிவு செய்வதை நம்மால் பார்க்க முடியும்.

பரம்பிக்குளம் கிராமம்:

 அடுத்த இடமாக வேன் பரபிக்குளத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் நிறுத்தப்பட்டது.வேன் சபாரியின் 3 மணிநேரபயணத்திற்கு பிறகே இந்த இடத்தை நாம் அடையமுடியும்.

இங்கு சின்ன சின்ன பெட்டி   கடைகள், உணவகங்கள்  , டீ கடைகள்   இருந்தது. இங்குள்ள உணவகங்களில் அங்குள்ள மலைவாழ் மக்கள் சமைக்கும்  உணவை நம்மால்சாப்பிடமுடியும்.

அனி கோம் :

    பரம்பிகுளத்தில் அனி கோம் என்று சொல்லக்கூடிய தங்கும் விடுதி உள்ளது. குடும்பத்தோடு சுற்றுலா வருபவர்களுக்குஇந்த தங்கும் விடுதி ஏற்றதாக இருக்கும்.

இந்த இடத்திலிருந்து தான் நம்மை ட்ரெக்கிங் அழைத்து செல்வார்கள்.

மரவீடு:

    பரம்பிக்குளம் போக தில் இருக்கா? என கேட்கும் அளவுக்கு பயம் நிறைந்த இடம். அப்படி ஒரு இடத்தில் மரவீட்டில்தங்குவதென்றால் பயத்தில் நமக்கு ஒரு ரைமிங்கே வந்துவிடும் ,நட்டநடு காடு , செம்ம சைலன்ட் Moode,  அதில் ஒருமரவீடு உள்ளே நான் !

விலங்குகளை பற்றிய கனவாகவே வந்தது என்று மரவீட்டுக்கு ஒரு வரையறையை நம்மால்கொடுக்கமுடியும்.இந்த அனுபவம் பயமாகவும் சுகமாகவும் இருந்தது.

36 புலிகள் :

    பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் என்ற பெயருக்கேற்றார் போல் இங்குள்ள காட்டில் 36 புலிகள் இருப்பதாகவனத்துறை தெரிவிக்கின்றன.

பரம்பிக்குளம் அணை :

    இந்த அணையானது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இந்திய நாட்டின் கேரளம்மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கேகட்டப்பட்டுள்ள தடுப்பு அணை ஆகும்.

இது 2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் அதிக அளவிலான நீர் தேக்கம் கொண்டஅணைக்கட்டுகளில் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் முதல் பத்து அணைக்கட்டுகளின் பட்டியலிலும்இடம் பெறுவதாகும்.

இந்த அணையின்   மூலமாக தமிழ்நாட்டின் கோயம்பத்தூர், திருப்பூர்,பொள்ளாச்சி , பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் இருக்க கூடிய விவசாய மக்கள் பயனடைகின்றன.

படகு சவாரி:

        பரம்பிக்குளம் அணையில் படகு சவாரி செய்யமுடியும். படகு  இங்கு வித்தியாசமான முறையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. மூங்கில்களில் ஆன இந்த படகுகள்  பாதுகாப்பானவை. படகு மூழ்கும் வாய்ப்புகள் மிககுறைவு.

பெளர்ணமி இரவில் பரம்பிக்குளம் தீவு:

பரம்பிக்குளம் அணைக்குள் தீவு ஒன்று உள்ளது. இங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் முன் அனுமதிப் பெறவேண்டும்.   இந்த பங்களாவில் தங்குவதற்கு நம்முடன் வழிகாட்டியும், சமையல்காரரும் இருப்பார்கள்.

பங்களாவில்மின்சாரவசதி கிடையாது. பெளர்ணமி இரவில் நில ஒளியில் தீவின் கரையில் தீ மூட்டி, திகட்டாத நினைவலைகளைநாம் உருவாக்கலாம். இந்த தீவிற்கு மோட்டார் படகில் நம்மை அழைத்து செல்வார்கள் .

ட்ரெக்கிங்:

 

    பரம்பிகுளத்தில் தங்குவோரை காலை  ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள். இனிமையான காலைப்பொழுதில்பசுமையான சூழ்நிலையில் நமக்கு ஒதுக்கப்பட்ட பயண வழிகாட்டி  உடன் காட்டில் நடக்கும் அந்த  அனுபவம்,இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த பயணம் நீண்டுகொண்டே இருந்துவிட கூடாத என நினைக்கதூண்டும் .

    போட்டிகளை, பொறாமைகளையும் பார்த்து சலித்த நமக்கு மலைவாழ்மக்கள், விலங்குகள், அணைகள், காடுகள், பயத்தை ஏற்படுத்தும் விலங்குகளின் சத்தத்தோடு திகில் நிறைந்த தனித்தீவில் மின்சாரம் இல்லாமல் ஒரு நாள் இரவுவாழ்கை .இதனால் தான் என்னவோ பரம்பிக்குளத்தை சாகச பிரியர்களின் திரில் சுற்றுலா என்கின்றனர். மீண்டும் இந்தபயணம் தொடராதா என எங்கும் அளவுக்கு இருக்கும் பரம்பிக்குளம் சுற்றுலா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top