மலைகளின் அரசி ஊட்டி சுற்றுலா

நம்முடைய தகவல் சுற்றுலா தகவல் என்றாலும் அது வாழ்க்கையில் பலவற்றோடு ஒத்துப்போகின்றது.”மாற்றம் என்பது மாறாதது” என்பதை நோக்கியே இன்று நம்முடைய சுற்றுலா தகவல்.

2K என்று சொல்லக்கூடிய 2000 ஆண்டுகளுக்கு முன்புவரை வசதிபடைத்தவர்கள் மட்டுமே சுற்றுலா செல்வார்கள். ஆனால் இப்போது அந்தநிலை மாறி இன்று சாதாரண மக்களும் தங்களுடையபொழுதை இனிமையாக்க சுற்றுலா செல்கின்றனர்.

சந்தோஷத்திற்காக மட்டும் சுற்றுலா என்பது மாறி மன அமைதிக்கும்,புத்துணர்ச்சிக்கும் ஒரு அருமருந்தாக சுற்றுலா உள்ளது.

ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளானால் மருத்துவர்கள் அறிவுரையாகவும் சுற்றுலாத்தலங்கள் உள்ளது. எந்த ஒரு சூழலையும் ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் மிதமான குளிர்,

பசுமையான புல்வெளிகள், படகு பயணம், தாவரவியல் பூங்கா,நீர்வீழ்ச்சி என அனைத்தும் ஒரு சேர அமைந்த இடம் நம்முடைய சுற்றுலா.

சுற்றுலாவிற்கு செல்ல தயாராகிவிட்டோம் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்னரே அந்த குளிர்ச்சி நம்மை தொற்றிக்கொண்டது. ஒரு மூன்று நாட்களுக்கு Work presser, EMI என இவற்றையெல்லாம் மறந்து

எப்பொழுதும் இருக்கும் பரபரப்பை தொலைத்து அமைதியும்,மகிழ்ச்சியையும் உணரப்போகிறோம்.நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கும் ஊட்டி இன்று நம் சுற்றுலாத்தகவல்.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகமண்டலம் (ஊட்டி), “மலைகளின் அரசி” (Queen of Hills) என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.

வழித்தடம்:

தொடர்வண்டி வசதியும், பேருந்து வசதியும் உள்ளது. ஊட்டிக்கு செல்ல முடிவு செய்து ரயில் பயணம் இரவு 12 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து மேட்டுப்பாளையம் பதிவு செய்துவிட்டோம்.

ரயில் சேவை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில்வே ஸ்டேசனுக்கு சென்று விட்டோம்.

ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கப்போகிறோம் என்ற என்ற ஆர்பரிப்புடன் நின்று கொண்டிருந்த என்னை ஏற்றிக்கொண்டு செல்ல என் அருகில் வந்து நின்றது நான் செல்லவேண்டிய தொடர்வண்டி.

ஏறி அமர்ந்துகொண்டேன் எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்.

சன்னலோர ரயில் பயணம்:

பொதுவாக பயணங்களின் போது சன்னலோர இருக்கை கிடைத்தால் அது நமக்கான ஒரு குட்டி சந்தோசம் என்று தான் கூற வேண்டும். ஜன்னலோர இருக்கை பலருக்கும் பிடிக்க காரணம் சில்லென வீசும் தென்றல் காற்று,

நம்மை கடந்து செல்லும் பலவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டே  வரலாம் இப்படி பலவற்றை கூறமுடியும். இரவு 2 மணிக்கு வேலூர் நிறுத்தத்தில் வண்டி நின்றது , டீ விற்பவரின் சத்தம் காதில் விழவே சூடான ஒரு இஞ்சி டீயை வாங்கி ருசிக்க ஆரம்பித்தேன்.

இந்த ஒரு பயணம் என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம்.

மேட்டுப்பாளையம் ரயில் நிறுத்தம்:

காலை 6 மணி அளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிறுத்தத்தில் வந்து இறங்கியாச்சு.மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு Toy Train என்று சொல்லக்கூடிய தொடர் வண்டியில் மீண்டும் நமது பயணத்தை தொடங்க காத்திருந்தோம் அனால் அன்று Toy Train சேவை இயக்கப்படமாட்டாது என தெரிவித்தனர்.

ரயில் மியூசியம்:

மேட்டுப்பாளையம் ரயில் நிறுத்தத்தில் தொடர்வண்டி என்று சொல்லக்கூடிய ரயிலின் படிப்படியான பரிணாம வளர்ச்சியை மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தனர்.

நம் சுற்றுலாவின் முதல் பகுதி இதுதான். ரயில் ஆரம்பகாலங்களில் எப்படி இருந்தது அடுத்தடுத்து அதன் வளர்ச்சியை இன்றுவரையிலும் பார்க்கமுடியும். இங்கு ஒரு 15 நிமிடம் நமது நேரத்தை செலவிட்டு தொடர்வண்டி பற்றி பலவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

குன்னூர்:

Toy Train பயணம் தடைப்பட்டதால் நாம் தேர்ந்தெடுத்த பாதை மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக சென்றால் பல சுற்றுலாத்தலங்களை நாம் பார்வையிடமுடியும்.

மிகவும் பிரபலமான தவிர்க்கமுடியுதா சுற்றுலாத் தலமாக குன்னூரில் “சிம் பார்க். சிறிய கட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தால் பசுமையான புல் தரைவிரிப்புடன் அழகிய நடைபாதை,

குழந்தைகள் விளையாட சிறிய பூங்கா, வண்ண வண்ண மலர்களை கொண்ட தோட்டம், உயரமான மரங்கள் நம்மை வரவேற்கும் இந்த இடத்தில் செயற்கையாய் உருவாக்கப்பட்ட குளம்,

குளத்தில் மீன்கள் அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்க சிறந்த இடம்.

டால் பின்னோஸ்

டால்பின் மூக்கு கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேலான உயரம் கொண்டது. குன்னூரிலிந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.டால்பின் மூக்கு(Dolphin’s Nose) தமிழ் நாட்டின்,

நீலகிரி மாவட்டத்தின், குன்னூரில் உள்ள ஒரு காட்சி முனை ஆகும்.டால்பின் மூக்கு போல்தோற்றமளிக்கும் பாறை முனை. இங்கிருந்து கேட்டரின் நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றியுள்ள மலைகளின் பிரமிப்பூட்டும் காட்சிகளை பார்க்கமுடியும்.

இதை தவிர குன்னூரில் தேயிலை அருங்காட்சியகம், கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாஸ் நீர்வீழ்ச்சி என பல  சுற்றுலாத்தளங்களை  கொண்ட குன்னூரிலிருந்து ஊட்டிக்கு Toy Train இயக்கப்படுகிறது. குன்னூர் சுற்றுலா இடங்களை பார்த்துரசித்துவிட்டு Toy Train -ல் ஊட்டிக்கு சென்றுவிட்டோம்.

அரசு தாவரவியல் பூங்கா:

ஊட்டியில் நாம் பார்த்து ரசித்த முதல் இடம் அரசு தாவரவியல் பூங்கா.  பூத்துக்குலுங்கும் அழகிய செடிகளுக்கு மயங்காதவர்கள் உண்டோ!. நாம் வீட்டில் வளர்க்கும் செடிகொடிகளை பார்க்கும்போது நமக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படும்.

ஒரு சில செடிகளை பார்க்கும்போதே நமக்குள் இந்த மாற்றம் என்றால் பலவகையான செடிகொடிகள்,பூ வகைகள்,புல்தரைவிரிப்புகள் என பசுமையான சூழ்நிலையை கண்ணுக்குகெட்டிய தூரம் வரை பார்க்கும்போது பரவசத்திற்கு அளவே இல்லை.

இந்த பூங்காவில் பல இடங்களில் காட்சிகள் படமாக்கப்படுவதையும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கும் பார்க்கமுடியும். அதுமட்டும் இல்லாமல் கண்ணாடி மாளிகை அமைத்து  அதற்கான தட்பவெட்ப நிலையில் வளரக்கூடிய பூச்செடிகளும், தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தோடும், நண்பர்களுடனும் அல்லது தனியாக  சுற்றுலா சென்றாலும் புத்துணர்ச்சிக்கு இங்கு பஞ்சம் இருக்காது என்பது தான் உண்மை.

இதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பூங்காவனது காலை 7 மணியிலிருந்துமலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இந்த பூங்காவில் 1 மணி நேரம் வரை நாம் நம் நேரத்தை செலவிடலாம். பூங்காவிற்கு வெளிய குறிப்பிட்டு சொல்ல பல கடைகள் உள்ளன. அங்கு போலீஸ் காபி ஷாப் உள்ளது.

இதன் சுவை பல நேரங்களில் நினைவுப்படுத்தும் விதமாக இருந்தது.

Tea Factory And Tea Museum:

ஊட்டியில் பல இடங்களில் Tea மியூசியம் நாம் பார்க்க முடியும். Tea யின் வரலாறு அது எப்படி உருவானது என்னென்ன வகைகளில் Tea உள்ளது என பல தகவல்களை இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம்.

செடியிலிருந்து பறித்து கொண்டுவரும் Tea இலைகள் எப்படி Tea தூளாக மாறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடியும்.இதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்கு நமக்கு சுவைத்துப்பார்க்க Tea கொடுப்பார்கள். இதனை சுவைத்துப்பார்க்கலாம்  அத்துடன் இங்கு பலவகை Tea தூள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது தேவையானதை வீட்டிற்கு வாங்கிவரலாம்.

சாகச விளையாட்டுக்கள்:

ஊட்டியில் பல இடங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் சாகசவிளையாட்டுகள் உள்ளளன. அதற்கான நுழைவு கட்டணத்தை செலுத்தி அணைத்து விளையாட்டுகளையும் விளையாடலாம்.

கர்நாடக ஸ்ரீ ஆர்டிகல்சர் கார்டன்:

நுழைவு கட்டணத்தை செலுத்தி அப்படியே உள்ளே நுழைந்தால் மிகப் பெரிய பரப்பளவில் பச்சை வண்ண ஆடையை போர்த்தியதுபோல் இருக்கும்.

இங்கு பல இடங்களில் செடிகளில் விலங்குகளின் உருவம் வெட்டப்பட்டிருப்பதை பார்க்கமுடியும்.குடும்பத்துடன் செல்பவர்கள் அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை தங்கள் பொழுதை களிக்கலாம்.

Boat House:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலமாக இயக்கப்படும் படகு படகு வீடு காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது.

3 மணிக்கு மேல் மாலை  நேரத்தில் படகு பயணம் செய்ய பலரும் விரும்புகின்றனர்.காரணம் குளிர்ச்சையையும், பசுமையும், மக்கள் கூட்டத்தையும் ரசிக்க ஏற்ற நேரம்.

மாலை நேரத்தில் நுழைவு கட்டணத்தை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் மோட்டர் படகு, துடுப்பு படகு,மிதி படகு என பல வகை படகுகள் உள்ளன.

விரும்பியதை தேர்வுசெய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி அத்துடன் deposite பணமும் சேர்த்து செலுத்தவேண்டும். இந்த deposite பணம் படகு பயணம் முடிந்து பிறகு நாம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

life jacket என்று சொல்லக்கூடிய பாதுகாப்பு உடையை அணிந்து அந்த அழகான ஏரியில் அரைமணி நேரம் நம் பயணத்தை ஆனந்தமாக செலவழிக்கலாம்.

படகு பயணம் முடிந்ததும் படகில் இருந்து இறங்கி அங்கு சுவைக்க பல கடைகள் உண்டு.விருப்பியதை சுவைத்து பார்க்கலாம். அங்கு குழந்தைகள் விளையாட  சில விளையாட்டுகள் உள்ளது.

அதற்கு தனியாக நுழைவு கட்டணம் செலுத்தி விளையாட வேண்டும். இங்கு பலபேர் I Love Ooty என்று இருக்கும் இடத்தில் புகைப்படம் எடுக்கொண்டிருப்பதை பார்த்தால் நமக்கும் அந்த ஆசை வரும்.

புகைப்படம் எடுத்துக்கொண்டு Boat house விட்டு சந்தோசமாக வரலாம்.

Pine Forest

காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த Pine Forest -க்கு  நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நம்மை வரவேற்கும் வரிசையான மரங்கள் ஒரே மாதிரியான அமைப்பினை கொண்டது.

மரங்கள்  பார்க்க சரிவை நோக்கி நடக்கவேண்டும். இந்த சரிவில் மரங்களை பார்த்தக் கொண்டே இறங்கி சென்றால் ஒரு சிறிய ஏரியை நாம் பார்க்கமுடியும்.

ஊட்டியின் குளிரும் மரங்களுக்கு நடுவே நமது மனமும் பரவசத்தில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஷூட்டிங் ஸ்பாட்:

நமக்கும் நாம் எடுத்து செல்லும் கேமராவுக்கும்  கட்டணத்தை செலுத்திவிட்டு மலையேற ஆரம்பித்தோம். ஒரு மலைக் குன்றின் மீது ஏறி நாம் பார்க்கும் இடமெல்லாம் பச்சை ஆடையை போர்த்தியது போல் காட்சியளிக்கும்.

இந்த இடத்தில்  சினிமாக்களின் பாடல் காட்சிகளில் வருவதை போல இருக்கும். பொதுவாகவே  சுற்றுலா செல்கிறோம் என்றாலே நம்முடைய முக்கிய பொருட்களில் கேமிராவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

ஒவ்வொரு சுற்றுலா இடத்திலும் நம்முடைய நினைவுகளை புகைப்படங்களாக பதிவதால் அதிக ஆர்வம் காட்டுவோம். இந்த சுற்றுலா இடத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட் என்று பெயர்.

அப்படியென்றால் பார்த்துக்கங்க வித விதமாக புகைப்படங்கள் எடுக்க ஒரு சிறந்த இடம்.

பைக்காரா நீர்வீழ்ச்சி: 

shooting spot முடித்து அடுத்து நாம் சென்ற இடம் பைக்காரா நீர்வீழ்ச்சி.  இங்கு நடந்து செல்வதாக இருந்தால் குறைந்தது 20 நிமிடம் தேவைப்படும். இங்கு பேட்டரி கார் வசதியும் உள்ளது.

நீர்வீழ்ச்சி என்றாலே உயர்ந்த மலைகளின் மீது இருந்து தண்ணீர் விழுவது போலத்தான் இருக்கும். ஆனல் இந்த பைக்காரா நீர்விழ்ச்சியானது சின்ன சின்ன பாறைகளின் மீது தவழ்ந்து வருவதுபோலதான் இருக்கும்.

இந்த நீர்விழ்ச்சியில் குளிக்கமுடியாது. இந்த நீர்வீழ்ச்சிக்கு 100 படிகள் கீழிறங்கி வரவேண்டும்.  நீர்வீழ்ச்சிக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் இந்த அருவியை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது நுழைவு கட்டணம் எடுத்த இடத்தில் ஒரு சிறுவர் பூங்கா இருக்கும் அதில் சிறிது நேரம் குழந்தைகள் தங்கள் நேரத்தை செலவழிக்க  சிறந்த இடம்.

பைக்காரா படகு இல்லம்

நெரிசலான ஊட்டி எரியுடன் ஒப்பிடும்போது பைகாராவில் படகு சவாரி மிகவும் அமைதியானது.இனிமையானது.ஊட்டியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு ஸ்பீட் போட், மோட்டார் போட் என  பல வகைகையான போட்ட  வசதிகள் உள்ளது.8 நபர்கள் செல்லும் படகில் படகு கட்டணத்தை  பகிர்ந்து கொள்ளலாம்.

இரண்டு பக்கம் மரங்களின் ஆக்கிரமிப்பில் நடுவில் இருக்கும் இந்த சிறிய இடத்தில அருமையான படகு பயணம்.

500 மீட்டர் நடந்து சென்றால் ஒரு  பாறையின் விளிம்பில் பார்வை மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து நாம் பார்க்கும் கட்சி பள்ளத்தாக்கு, பனி, பசுமை என சிறப்பான கட்சியை நமக்கு வழங்குகிறது.

குன்னூரில் ஆரம்பித்த சுற்றுலா ஊட்டியின் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு வரும் வழியில் இருக்கும் கோத்தகிரியையும் ரசித்து குறைந்தது மூன்று நாட்கள் சுற்றுலா செல்ல குன்னூர் – ஊட்டி -கோத்தகிரி பாதையை தேர்ந்தெடுக்கலாம். மலைகளின் இளவரசி ஊட்டி அனைவரும் விரும்பும்  ஒரு சுற்றுலாத்தளம்.

கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் இலங்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top