வயநாடு சுற்றுலா Wayanad Tourist Place

பெயர் காரணம் :
வயநாடு = வயல் + நாடு அதாவது வயல்நிறைந்த நாடு என்னும் பொருளில் இந்த பெயர் வந்ததாக அங்குவாழும் மக்கள் சிலர் கூறுகின்றதாகவும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் மாயாசேத்திரம் எனஅழைக்கப்பட்டதாக பழைய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர்கூறுகின்றனர் .
வயநாடு :

இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் மிகவும் உயரமான பகுதியாகும் .கேரளாவின்நான்காவது நீளமான நதியான சாலியார் ஆறு வயநாடு பீடபூமியில் உற்பத்தியாகிறது.
வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த எடக்கல் குகைகள் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.வயநாட்டுக்குவனவிலங்குகளின் சரணாலயம் என்ற பெயரும் உண்டு.
இங்கு ஆசிய யானைகள் ,புலிகள் ,சிறுத்தைகள்மற்றும் ஈக்ரேட்ஸ் உள்ளிட்ட விலங்குகளின் இருப்பிடமாகவும் கருதபடுகிறது.
அதுமட்டுமில்லாமல்தெற்கு உள்ள மலைகளில் வரலாற்று மிக்க பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள்அனைத்தும் கற்காலங்களுக்கு முந்தைய காலத்தில் இருந்தவை யாகும் .
வயநாட்டில் உள்ள சில கோவில்கள் மிகவும் பிரசதிபெற்றது .அவை புல்பள்ளியில் உள்ள லவ குஷா,வைத்திரியில் உள்ள கண்ணாடி கோவில் (ஜெயின் கோவில் ) என்பன மிகவும் முக்கியமான கோவில்கள்ஆகும் .
மிகவும் பழமை வாய்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்றும் வரம்பேட்டா என்ற பகுதியில் உள்ளது .
வயநாடு தங்க வயல் :

வயநாடு 3 நகராட்சி நகரங்களைக் கொண்டுள்ளது கல்பெட்டா, மானந்தவாடி மற்றும் சுல்தான்பத்தேரி.
சாலியார் பள்ளத்தாக்குடன் இயற்கையான தங்க வயல்களுக்கு பெயர் பெற்றது, இந்த வயநாடுசுற்றுலாவில் நாம் குறைந்தது ஒரு வாரம் தங்கினால் கூட அங்குள்ள இயற்கை அழகையும்,வரலாற்றுமிக்க இடங்களையும் சுற்றி பார்க்க நேரம் போதாது என்றுதான் சொல்லவேண்டும் .
அவற்றுள்சில சுற்றுலா தலங்களை இப்பொழுது நாம் காண்போம் .அவை
1.சுல்தான் பத்தேரி வட்டம்(Jain Temple Sulthan Bathery )
2.தேயிலை அருங்காட்சியகம்(Tea Museum)
3.எடக்கல் குகை(Edakkal Caves)
4.முத்தாங்க வன விலங்குகள் (Muthanga Wildlife )
5.பானாசூரா சாகர் அணை(Banasura Sagar Dam )
6.செம்பரா சிகரம் அல்லது செம்பரா மலைமுடி (Chembra Peak )
7.பூக்காட்டேரி (Pookot Lake )
8.சூச்சிப்பாரா நீர்விழ்ச்சி (Soochipara Waterfalls )
9.குருவ தீவு(Kuruvadweep ) என சிலவற்றை பற்றி விரிவாக காண்போம் .
சுல்தான் பத்தேரி வட்டம்(Jain Temple Sulthan Bathery ):
சுல்தான் பத்தேரியில் பழமைவாய்ந்த ஜெயின் கோவில் உள்ளது .இக்கோயில் இந்திய தொல்லியல்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக விளங்குகிறது .
ஜெயின் கோவிலானது கிபி 13 ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் ,கல்வெட்டுகள்மிகவும் அழகாகவும் ,பல கதைகளையும் விளக்கும் விதமாகவும் அமைந்துள்ளது .
பெயர் வர காரணம் :
சுல்தான் பத்தேரி என்றழைக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்திற்க்கு ஒருமுறை மைசூரை சார்ந்த திப்பு சுல்தான் படையெடுத்து வந்தார் .
அப்படிபடையெடுத்து வரும் பொழுது அங்குள்ள ஜெயின் கோவிலில் தான் தன்னுடைய பீரங்கி படையைமறைத்து வைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன .
இந்த காரணமாகத்தான் இந்த நகரமானது சுல்தான்பத்தேரி என்றும் பீரங்கி படை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது .இந்த சுல்தான் பத்தேரியை முந்தையகாலங்களில் கணபதிவடம் என்ற பெயரிலும் அழைத்தனர் .
ஜெயின் கோவில் :
ஜெயின் கோவில் என்பது ஜைன மதமாகும் .இந்த மதமானது ஒரு இந்திய மதமாகும். அதன் ஆன்மீகக்கருத்துக்களையும் வரலாற்றையும் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களின் வரிசையாகக்கண்டறிந்துள்ளது.
இந்த கோவிலின் தற்போதைய நிலை என்னவென்றால் கருவறையில் உள்ள சிலைகள்எல்லாவற்றையும் அங்குள்ள வேறொரு கோவிலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
தேயிலை அருங்காட்சியகம்(Tea Museum):
தேயிலைக்கு அருங்காட்சியகமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் தோன்றும் .கலை ,அறிவியல்,வரலாற்று சம்மந்தப்பட்ட அருங்காட்சியகங்கள் நாம் கேள்வி பட்டிருப்போம் .
ஆனால் தேயிலைஅருங்காட்சியம் என்பது புதிதாக உள்ளது . இந்த தேயிலை அருங்காட்சியமானது டாடா நிறுவனத்தால்2005 ஆம் ஆண்டு நல்லத்தண்ணி தோட்டத்தில் தான் தொடங்கப்பட்டது .
வயநாட்டில் உள்ள வயநாடுதேயிலை அருங்காட்சியகம், வைத்திரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பொழுதான அருகேபாணாசுரசாகர் அணை சாலையில் அமைந்துள்ளது.
1911 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான மரத்தால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு தேயிலைதொழிற்சாலை தேயிலை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
இளைஞர்களிடையே தேயிலைகலாச்சாரம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுப் பகிர்வு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குதேநீர் அனுபவத்தை வழங்குதல் சிறப்பம்சங்கள் ஆகும் .
தேயிலை அருங்காட்சியகத்தில் பலவகையான தேயிலை மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன .இதோடதேயிலை பற்றிய தகவல்களை பெறமுடியும் மற்றும் பழங்கால பொருள்கள் சில அங்கு காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது .
எடக்கல் குகை(Edakkal Caves):
எடக்கல் குகை குகை என்பது இரண்டு இயற்கை குகையாகும் .அதாவது இரண்டு பாறைகளுக்கு நடுவேஒரு கல் இருக்கும் அந்த கல்லுக்கு அருகிலிருந்து குகை தொடங்குகிறது .
இந்த குகையானதுஇந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ளகல்பெட்டாவிலிருந்து 25 கிமீ (15.5 மைல்) தொலைவில் என்ற இடத்தில் உள்ளது .
இந்த மலையைஅம்புகுத்தி மலை என்றும் அழைப்பார்கள் .அதே போல சுல்தான் பத்தேரியிலிருந்து 12 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது .கடல் மட்டத்திலிருந்து 1,200 மீ (3,900 அடி) உயரத்தில் உள்ளது .
எடக்கல்லின் கற்காலச் சிற்பங்கள் அரிதானவை,பழங்கால சித்திர எழுத்துக்கள் மற்றும் புதிய கற்காலவரலாறு சிறப்பு மிக்க ஓவியங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கிறது .
பின்பு பழங்காலகுறியீடுகள்,விலங்குகள் ,மனிதர்களின் உருவங்கள் ஆகியவை கி .மு .6000 ஆண்டுகளுக்கு முன்னதாகஇருந்தாக வரலாறுகள் கூறப்படுகிறது .
முத்தாங்க வன விலங்குகள் (Muthanga Wildlife ):
இந்த முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் – சுல்தான் பத்தேரி, வயநாட்டில் யானைகளைக் காணும்இடம். 1973 ஆம் ஆண்டு இந்த முத்தாங்க சரணாலயம் உருவானது .
யானைகள் கூட்டம் கூட்டமாகஅலைந்து திரிந்து கொண்டிருக்கும் தக்காண பீடபூமியின் ஒரு பகுதியே இந்த வனவிலங்கு சரணாலயம்ஆகும் .
இந்த வனவிலங்கு சரணாலயம் சுல்தான் பத்தேரி ,முத்தாங்கா ,குறைச்சாத்தி மற்றும் தோல்பெட்டிஆகிய 4 பிரிவுகளாக அமைந்துள்ளது .
இங்கு காட்டுப்பன்றி ,யானை ,மான் ,புலி போன்ற பெரிய காட்டு விலங்குகள் காணப்படுகின்றன .யானைபாதுகாப்பு திட்டத்தின் கீழ் இச்சரணாலயம் பாதுகாக்கப்படுகிறது .
பிறகு கேரளா வனத்துறையினால்யானை சாரிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றனர் . உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆசியயானைகள் மற்றும் புலிகளைக் கொண்டதாக இந்தப் பகுதி புகழ்பெற்றது .
சில நேரங்களில் இந்த புலி,யானைகளுடன் கழுகுகள் சேர்ந்து முதன்மை இனமாக சரணாலயத்தில் கருதப்படுகின்றன .இங்குபாலூட்டிகள் அதிகமாக காணப்படுகிறது .
ஆதிவாசி:
முத்தாங்கா வன விலங்கு சரணாலயம் பகுதில் இன்றும் பழங்கால நாகரீகம் அறியாத ஆதிவாசிகள்பெரும்பாலும் வாழ்ந்துவருகின்றனர் .
ஆதிவாசி என்ற சொல்லுக்கு இயற்கையுடன் வாழும் நிலத்தின் பூர்வமக்கள் என்பதே பொருள் .ஆனால் இங்கு வசிக்கும் இவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது .
ஆதிவாசிகள் இன்றும் கூட இயற்கையாக கிடைக்கும் காய் ,கறி போன்றவற்றை சமைத்து சாப்பிட்டு,எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கைய அழகான முறையில் வாழ்ந்து கொண்டுஇருக்கிறார்கள் .
பானாசூரா சாகர் அணை(Banasura Sagar Dam ) :
பானாசூரா சாகர் அணையானது இந்தியாவிலேயே பெரிய மண் அணையாகும் .இந்தியாவின் பெரிய கரைதடுப்பு அணையாகும் .
உலகளவில் இரண்டாவது கரைத்தடுப்பணை என்ற புகழும் இதற்கு உண்டு.சுல்தான் பத்தேரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
கேரளா மாநில மின்சாரவாரியத்தினால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .இந்த ஆறு பனமரம் ஆற்றின் குறுக்கே ஓடும்ஆறாகும் .
பானாசாகர் திட்டம் 1979 ல் தொடங்கப்பட்டது .இந்த அணையின் நோக்கம் வறட்சிநேரங்களில் மக்களுக்கு நீரை அளிப்பது மற்றும் காக்கயம் நீர்மின் திட்டத்திற்கு தேவையான நீரைஅளிப்பது .
பானாசூரா சாகர் அணை -பெயர் காரணம் :
பானாசூரா அணைகளுக்கு அருகில் உள்ள மலைகளில் மகாபலியின் மகன் அசுர மன்னன் பாணாசுரன்கடும் தவம் புரிந்தாகவும் அதனால் தான் இந்த அணைக்கு பானாசூரா அணை என்ற பெயர் வந்ததாகவும்அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர் .
இந்த அணையில் பள்ளமாக இருந்த பகுதிகள் நீர்த்தேக்கத்தில் மூழ்கி சிறு ,சிறு தீவு திட்டுகள் போன்றஅமைப்புகளில் உள்ளது .இந்த சிறு சிறு தீவுதிட்டுகள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன .
எனவே உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த அழகான குட்டி தீவுகளைரசிகின்றனர் .
இந்த அணைக்கு மிக அருகில் 10 முதல் 15 நிமிட நடைபாதையில் குழைந்தைகளுக்கான சிறு சிறுவிளையாட்டுகள் ,ஏராளமான கிருஸ்துமஸ் மரங்கள் ,பல வண்ணங்களில் அழகிய மீன்கள் இன்னும் பலவிளையாட்டுகள் இங்கு அமைந்திருக்கின்றன .
செம்பரா சிகரம் அல்லது செம்பரா மலைமுடி (Chembra Peak ):
செம்பரா சிகரமான மிகவும் உயரமான மலையின் உச்சியில் உள்ளது .இந்த மலை கிட்டத்தட்டகடல்மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரமானது .
தமிழ்நாட்டின் நீலகிரி மலைத்தொடர்களையும் ,கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வெல்லாரிமலைகளையும் இணைக்கும் விதமாக இந்த சிகரம் அமைந்துள்ளது .
இந்த மலையின் உச்சியைஅடையை குறைந்தது 3 மணி நேரம் ஆகும்.இந்த இந்த மலைமுடியானது மனிதக்குலத்திற்கு சவாலானஇடமாகும் .ஏனென்றால் இங்கு அவ்வளவு எளிதாக இந்த இடத்தை அடையமுடியாது .
இந்த மலைமுடிக்கு செல்ல அங்கு உள்ள சம்மந்தப்பட்ட வனத்துறையினர் அனுமதியின்றிசெல்லக்கூடாது . காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே அனுமதி மற்றும் நுழைவு சீட்டுபெறமுடியும் .
ஏனென்றால் ஆபத்தான வன விலங்குகள் மற்றும் மிகவும் செங்குத்தான வளைவு பகுதியாகும்.பின்பு வனத்துறையினர் மூலம் அங்கு செல்ல மலையேறுவதற்க்கு தேவையான கருவிகள்வழங்கப்படுகின்றனர் .
இதய வடிவ ஏரி -இதயத் தடாகம் :
செம்பரா சிகரம் செல்லும் வழியில் பல மலைகளையும் ,ஏறும் பொழுது வழுக்கும் விதத்தில் பாறைகள்,தேயிலை தோட்டங்கள் உள்ளன .
இவை அனைத்தையும் கடந்து சென்ற பிறகு மலைகளின் மேல் நின்றுபார்க்கும் பொழுது கீழே ஒரு ஏரி காணப்படும் .இந்த ஏரியானது ”இதய வடிவில் ” அழகாககாட்சியளிக்கும் .
இயற்கையாக அமைந்த இந்த இதய வடிவ ஏரிக்கு மற்றொரு பெயர் தான் ”இதயத்தடாகம் ”என்றும் அழைக்கப்படுகின்றது .
இந்த ஏரிக்கு ஒரு சிறப்பு உண்டு என்னவென்றால் ,எவ்வளவு வறட்சிக்காலங்கள் வந்தாலும் இந்த ஏரிவறண்டதே இல்லை என்பதுதான் .
பச்சையான இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் மலைகளின் நடுவில்உள்ள இந்த ஏரியில் உள்ள நீரானது நீலநிறத்தில் மிகவும் அழகை சேர்க்கும் விரதமாக காட்சியளிக்கிறது.
இந்த வண்ணனக்காட்சியானது சுற்றுலா பயணிகளின் மனதை அதிகம் கவர்கிறது என்று சொல்லலாம் .
இதய வடிவ ஏரிக்கு மேலே ஏறுவதற்க்கு அங்குள்ள வனத்துறையில் அனுமதி கிடையாது.வனவிலங்குகளின் அபாயம் இருப்பதால் அங்கு முகாம் அமைத்து தங்குவதற்கும் வாய்ப்பில்லை .
சுற்றிபார்த்துவிட்டு 2 1/2 மணி நேரத்தில் திரும்ப கீழே இரங்கிவிடவேண்டும் .
பூக்காட்டேரி (Pookot Lake ):
பூக்காட்டெரி வயநாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் .இந்த ஏரியானதுஅழகிய நன்னீர் ஏரியாகும் .
இந்த ஏரியானது கடல்மட்டத்திலிருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ள ஒருபசுமையான காடுகள் மற்றும் மலை சரிவுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு இயற்கை நன்னீர்ஏரியாகும் .
ஏரியில் உள்ள நீல நிற தாமரை மற்றும் நன்னீர் மீன்கள் அதிகமாக காணப்படுகிறது .இந்த ஏரியில்பெத்திய பூக்கோ டெனிஷ் என்ற ஒரு வகை சைபிரினிடு மீன் வகையாகும் .
இந்த நீலநிறத்தாமரையானதுஆங்காங்கே மழை சிதறுவதுபோல் காணப்படுகிறது .
சூச்சிப்பாரா நீர்விழ்ச்சி (Soochipara Waterfalls ):

சூச்சிப்பாரா என்ற பெயரானது சூச்சி என்பது ஊசி என்றும் ,பாரா என்பது பாறை என்றும் பொருள் .
இந்த அருவி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் உள்ள வெல்லாரி மலையில் உள்ளஒரு 3 அடுக்கு நீர்விழ்ச்சி ஆகும் இந்த நீர்விழ்ச்சி 200 மீட்டர் உயரமுள்ள செங்குத்தானது .
அதாவதுஇதன் அமைப்பானது வெள்ளை நிற வெள்ள பெருக்கானது ஊசி போன்ற உள்ள அந்த பாறைகளின் மீதுவிழும் காட்சி மிகவும் அழகாக இருக்கும் .
இந்த நீர்விழ்ச்சிக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு .
இந்த நீர்விழ்ச்சி இருக்கும் இடத்தை அடைய சிறிது தூரம் அங்குள்ள இயற்கை அழகை ரசித்துகொண்டே நடந்து செல்ல வேண்டும் .
முக்கியமாக இந்த நீர்விழ்ச்சிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாகபிளாஸ்டிக் பொருள்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது .
குருவ தீவு(Kuruvadweep ) :
இந்த தீவு கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது .இங்குள்ள மற்ற தீவைஒப்பிடும்போது குருவ தீவில் மக்கள் வசிக்காத தீவாகும் .
மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் எப்படிஇருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை .
950 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த இந்த குருவதீவு படகு சவாரி செய்ய ஏற்ற இடம் .இங்கு இரண்டுநன்னீர் ஏரிகளை கொண்டுள்ளது .
குருவதீவில் பல அறிய வகை பறவைகள் ,மூலிகைகள் போன்றவைஅங்கு காணப்படுகின்றன .வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ள கேரளா சுற்றுலா துறையின் மூலம்கண்ணாடி இலை படகு அங்கு செல்ல எதுவாக இருக்கும் .






