இலங்கை கண்டி சுற்றுலா

இலங்கை கண்டி சுற்றுலா
இலங்கை கண்டி சுற்றுலா

கண்டி இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம்.கொழும்பிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கண்டி மத்தியமாகாணம்.

கண்டி காடு, மலை, சரணாலயங்கள், என எப்பொழுதும் குளிர்ந்த சூழ்நிலை உள்ள இந்த கண்டி  கடல் மட்டத்திலிருந்து 500 அடி  உயரத்தில் உள்ளது.

இதன் உயரம் காரணமாக எப்பொழுதும் குளிர்ந்த காலநிலைக்கு காரணம்.  புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை கண்டியில் உள்ள முக்கியமான கோவில்.

கண்டி ஏரி ,தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களை கொண்ட ஒரு மலை சுற்றுலாத்தளம் கண்டி.

ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான மற்றும் இனிமையான காலநிலை இருந்தாலும் டிசம்பர் முதல் மார்ச் வரை அதிகமான பயணிகளை பார்க்கக்கூடிய இடம் தான் இலங்கையின் கண்டி.

இலங்கையின் மத்தியமாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 70 மையில் தொலைவில் உள்ளது.

கண்டி கலாச்சாரம் மற்றும் மத மையங்களில் ஒன்றாக உள்ளது.இங்கு மண்டியிட்டு மன்றாட பல புத்த கோவில்கள் உள்ளது.

கண்டி பாரம்பரிய நடனம்:

கலை, கலாச்சாரம், ஆன்மீகம் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு இடம் தான் கண்டி.இங்கு மாலை நேரங்களில் பல இடங்களில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை பார்ப்பதற்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்கின்றனர். ஒரு சிறு தொகையை நுழைவு கட்டணமாக செலுத்தி அரங்கத்தின் உள்ளே நுழைந்தால்  நேர்த்தியான , அழகான ஆடையை உடுத்தி பெண்கள் ஆடும் நடனம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும்.

ஆண்கள் குரலோசையோடுசேர்ந்த இசைக்கருவியின் இசைக்கு ஏற்ப பெண்கள் ஆடும் நடனம் அருமை.நாம் ஆசைப்பட்டால் அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

தலதாமாளிகை:

கண்டியின் புகழ்பெற்ற பௌத்த ஆலயம் ஆகும் . பௌத்த சமயத்தவர்கள் முக்கியமான புனித தலங்களுள் ஒன்று. இந்த கோவிலில் புத்தரின் புனித பல் வைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் மேற்குறை தங்க நிறத்தில்  அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தினமும் மூன்று வேலை பூஜைகளும், புதன் கிழமைகளில் நனுமுரா மாங்கல்யா எனப்படும்   நீராட்டும் நடைபெறும்.

இப் புனித நீராட்டு விழாவில் புத்தரின் பல் நறுமண பூக்கள்  மற்றும் மூலிகைகள் கொண்டு நீராட்டப்படுகிறது. மருத்துவ குணமிக்க இந்த நீரானது பக்க்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் “the  festivel of  tooth “புத்தரின் புனிதப்பல் 60 வது யானைகள் வலம் வர நகர்முழுவதும்  கொண்டுசெல்லப்படுகிறது.

சுசந்தா இஸ்பைசி மற்றும் மூலிகை தோட்டம்:

கண்டியின் பல இடங்களில்   ஏலக்காய், ஜாதிக்காய், இலவங்கம் போன்றவற்றை நேரடியாக தோட்டத்தில் பார்க்க முடியும.

அதே இடத்தில் பலவகை மூலிகைகளையும்  அதிலிருந்து தயாரித்த மருந்துகளையும் நாம் வாங்கி பயன்படுத்தமுடியும்.

இந்த மூலிகைகள் எந்த வகை நோயை குணமாக்கும் என்பதை நமக்கு தெளிவாக விவரிக்கிறார் வழிகாட்டி ஒருவர்.

மூலிகை மருத்துவர் ஒருவர் ஒரு தெளிவான குறிப்புரையை நமக்கு அங்கு வழங்குவார் .3055 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மூலிகை மலையை அனுமன் கடவுள் உருவாக்கியது என்கின்றனர்.

 கண்டி ஏரி:

இந்த ஏரி பார்க்கடல் எனவும் கிரிமுகுடா எனவும் அழைக்கப்படுகிறது. கண்டியின்  மையப்பகுதியில்  இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட கண்டி  ஏரி  1807 ஆண்டு  இலங்கையை கடைசியாக ஆட்சி செய்த  ஸ்ரீ விக்ரம ராஜசிங்க  என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது.

கண்டியின் மையப்பகுதியில் ஏரி இருந்தாலும் அதிகமான இரைச்சல் இல்லாத ஒரு இடம். இந்த இடத்திலிருந்து நகரத்தின் பரந்த காட்சிகளை பார்க்கமுடியும். சுற்றுலா பயணிகள் அழகிய நடைபாதையில் நிதானமாக நடந்து தங்களது பொழுதை இனிமையாக்க ஒரு சிறந்த இடம்.

கண்டி ஏரியிலிருந்து அரண்மனைக்கு செல்ல ஏரியில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறசொல்லப்படுகிறது.

அத்துடன் 1815 ஆணடு பிரிட்டிஷ் படையெடுப்பு காரணமாக  காரணமாக ஏரியின் ஒரு பகுதி முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. வார்த்தையில் சொல்லிவிடமுடியாது இயற்கை அழகுக்கு கொட்டிக்கிடக்கும் கண்டி ஏரி பார்வையாளர் அதிகம் நேசிக்கும் இடங்களில் ஒன்று.

கிரகாமா தேயிலை தோட்டம்:

உலகின் தேயிலை உற்பத்தியில் இலங்கையும் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது.இலங்கையில் பல இடங்களில் தேயிலை தோட்டம் உள்ளது அவற்றில் ஒன்று தான் கண்டியில் உள்ள கிரகாமா தேயிலை தோட்டம்.

2500 அடி உயரத்தில் உள்ள இந்த தேயிலை தோட்டம் பார்பதற்க்கே ஒரு ரம்மியமான காட்சியை கொடுக்கும்.இங்கு பலரும் தேயிலை பற்றி தெரிந்துகொள்ள ஒரு தேயிலை அருங்காட்சியகமும் உள்ளது. இலங்கை கண்டி சுற்றுலா

பேராதனை தாவரவியல் பூங்கா:

கண்டியில் ஜாதிக்காய் , ஏலக்காய், கிராம்பு  போன்ற  மசாலா பொருட்கள் அதிகம் விளையக்கூடிய தோட்டங்களும் உள்ளது. இதற்கு கண்டியின் காலநிலையும் ஒரு காரணம்.

கண்டியின் புறநகரான பேராதனையில் அமைந்துள் தாவரவியல் பூங்கா  இலங்கையின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவாகும்.

இங்கு 4000 (நான்கு  ஆயிரத்திற்கும் அதிகமான) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாவர வகைகள் இருக்கின்றன.147 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் 10000 திற்கும் அதிகமான மரங்கள் உள்ளன.

கற்றாழை, மூலிகை, மசாலா பொருட்களின் வாசனை என கண்டியின் மற்றொரு அடையாளம் இந்த தாவரவியல் பூங்கா. குடும்பத்துடன் நேரம் செலவழிக்க சிறந்த இடம் கண்டி தாவரவியல் பூங்கா.

Royal Palace of Kandy

கண்டி அரண்மனை: கண்டியில் தலதா மாளிகைக்கு வடக்கில் அமைந்துள்ளது Royal Palace of Kandy எனப்படும் அரசமாளிகை.

கண்டி ராஜ்ஜிய அரசர்களின் இருப்பிடமாக இருந்த இந்த அரண்மனையில் கடைசியாக வசித்தவர் அரசர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்.

இந்த அரண்மையில் அரச அரண்மனை, விருந்தாளிகள் மண்டபம், அந்தப்புரம், ராணி குளிக்கும் குளம் ஆகியவற்றுடன் தலதா மாளிகையையும் உள்ளடக்கியது.

இந்த அரண்மனைக்கு அருகில் இருக்கும் விக்டோரியா காலகட்டிடத்தில் கண்டி  உயர் நீதிமன்றம் இயங்கிவருகிறது.

இரத்தின கற்கள் அருங்காட்சியகம்(Gemstones):

கடவுள், ராசி, நட்சத்திரம் என இவற்றை நம்பாத சிலர் இருந்தாலும் இவற்றை நம்பி நல்லது நடக்கும் என பலர் நம்புகின்றனர்.

இந்த ராசி காரர்கள் நீல நிற கல் இருக்கும் மோதிரம் கையில் அணிவதால் நல்லது நடக்கும், இப்படி சொல்வதை நாம்  பார்த்திருப்போம்.

நகை கடைகளில் மட்டுமே பார்த்த கலர் கலரான இரத்தின கற்கள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது.

எப்படி எடுக்கின்றன, எடுக்கப்பட்ட கற்கள் எப்படி அணிகலன்களாக மாற்றப்படுகிறது என்பதை பார்க்கும் இரத்தின கற்கள் அருங்காட்சியகம்  இலங்கையில் நாம் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஒரு இரத்தின கற்களுக்கு இத்தனை  வேலைப்பாடு இருக்கின்றதா என ஆச்சரியத்தை தூண்டுகிறது. ஒவ்வொரு அணிகலனுக்குள் மறைந்திருக்கும் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது.

கண்டி போர் கல்லறை(Kandy War Cemetry):

முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்காக போரிட்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 203 கல்லறைகள் இங்கு உள்ளது. இதில் 107 பிரிட்டிஷ் வீரர்களின் கல்லறைகளும், 35 கிழக்கு ஆப்ரிக்கா வீரர்களின் கல்லறைகளும், 26 இலங்கை வீரர்களின் கல்லறைகளும், 6 கண்டவீரர்களும், 3 இத்தாலிய வீரர்களும் , 1 பிரெஞ்சுவீரர் கல்லறையும் மற்றும் அடையாளம் தெரியாத 2 வீரரின் கல்லறையும் உள்ளது.

இலங்கையின் கடந்த காலத்திற்கு ஒரு அடையாளமான இந்த இடம் அமைதி ததும்பும் ஒரு இடம்.

பைரவகண்டா விஹார புத்தர் சிலை:

கண்டியில் மலையின் உச்சியில் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலை. மதநினைவு சின்னங்களில் ஒன்றான இதை   பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்தில் அடையமுடியும்.

மதிய வேளையில் அதிகமான வெப்பமான சூழ்நிலை நிலவுவதால், மாலை  நேரங்களில் செல்வது நல்லது. இங்கிருந்து கண்டியின்  பரந்த காட்சியமைப்பை காண முடியும்.

அதே போல் கண்டியின்  பல இடங்களில் இருந்து புத்தர் சிலையை நாம் பார்க்கமுடியும். காலணிகள் இன்றி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஒளிர்வதை பார்க்கமுடியும். இலங்கை கண்டி சுற்றுலா

கண்டி தேசிய அருங்காட்சியகம் – இலங்கையாண்ட கடைசி அரசரான விக்ரம ராஜா பயன்படுத்திய பொருட்கள், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராஜா அருங்காட்சியகம் – தலதா மாளிகையின் புனித பல் திருவிழாவில் ஊர்வலத்தில் 50 ஆண்டுகள் கலந்துகொண்ட யானை இறந்த பிறகு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படி இலங்கையில் பல சுற்றுலா தளங்கள் இருக்க ஒரு சில சுற்றுலா தலங்களை பற்றி மட்டுமே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top