கொழுக்குமலை சுற்றுலா

நாமெல்லாம் சிறு வயதில் இருக்கும்பொழுது பள்ளி விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்நம்முடைய உறவினர் வீட்டிற்க்கு செல்வது முன்பெல்லாம் வாடிக்கையாக இருந்தது .

வார இறுதிநாட்கள்எப்படா வரும் எப்போ பக்கத்து ஊரில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி,  மாமா மற்றும் அத்தைஇவர்களின் வீட்டிற்க்கு போவோம் என மனம் அலைபாயும்.

அச்சிறுவயதில் நமக்கு தெரியாது இதுவும் ஒருவகை சுற்றுலா என்று. ஏனெனில் இடம் விட்டு இடம் செல்வதே சுற்றுலா தானே.

முன்நாளில் எல்லாம் ஆயிரத்தில் நூறு  பேர் மட்டுமே சுற்றுலா செல்வார்கள்.ஆனால் இன்றோ அப்படியேதலைகீழாக மாறிவிட்டது ஆயிரத்தில் நூறு பேர் மட்டும் தான் சுற்றுலா செல்வதில்லை.

அந்தளவிற்குமக்களால் அதிகம் ஈர்க்கப்படும் பொழுதுபோக்கு அம்சமாக சுற்றுலா மாறிவிட்டது.சுற்றுலாக்களைபொறுத்தவரையில் பலவகை சுற்றுலாக்கள் உண்டு.

அவற்றுள் இன்பசுற்றுலா,ஆன்மிக சுற்றுலா,இயற்கைசார்ந்த சுற்றுலாக்கள் என பல உண்டு.இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மக்களின் பார்வை அதிகம் படக்கூடிய ஒன்றாக இந்த சுற்றுலா பயணம் உள்ளது.

இவ்வகை பயணங்கள் மக்களை வெகுவாக  கவர்ந்திழுக்க முக்கிய காரணமாக இருப்பது  பலதரப்பட்ட  மக்களின் கலாச்சாரம், உணவு, பழக்கவழக்கங்கள், ஆடை, விளையாட்டுகள், பொழுதுபோக்குஅம்சங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

சாதாரணமாக சாஸ்திர சம்பிரதாயங்களே ஒருஇடத்தில் நடைமுறையில் உள்ளதை போல மற்றொரு இடத்தில் இல்லை. சின்ன சின்ன மாற்றங்களாவதுஇருந்தே தீரும், அதுபோல தான் நம்முடைய ஊரிலோ அல்லது நம்முடைய நாட்டிலோ உள்ளகலாச்சாரம் மற்ற ஊர்களிலோ  அல்லது மற்ற நாட்டிலோ இருக்காது.

நம்முடைய பழக்கவழங்கங்களைபார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு வெளிநாட்டுமக்களின் பழக்கவழக்கங்கள் புதிதாக தெரியும். சுற்றுலாவை பொறுத்தவரையில் வெளியுலக அனுபவத்தையும் அங்குள்ள வேறுபாடுகளையும்அறிந்துகொள்வதற்கு நமக்கொரு வாய்ப்பை வழங்குகிறது.

இப்படி எதையாவது ஒன்றை மெய்மறந்து ரசிக்க வெகு நாட்களாக என்னை தூண்டியது. இயற்கை அழகுகொட்டிக்கிடக்கும் இடத்தை சென்று சுற்றுலா மேற்கொள்ளலாம் என என் மனம்ஆர்ப்பரித்தது.

அதற்காக நான் சென்ற இடம் தான் கேரளா.இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாக தான்கேரளா பார்க்கப்படுகிறது.கேரளாவில் உள்ள ஒவ்வொரு சுற்றுலாத்தளமும் தனக்கென ஒரு தனி சிறப்பைபெற்றுள்ளது.

கேரளாவின் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது என்று தான்சொல்லவேண்டும்.குறிப்பாக கேரளாவில் உள்ள கொழுக்குமலையை   சுற்றிப்பார்க்க  பலநாள் ஆசையாகஇருந்தது .இதை  நோக்கித்தான் இன்று என்னுடைய பயணமும்  இருந்தது.

கேரளா மற்றும் தமிழ்நாடு இவை இரண்டையும் இணைக்கும் கொழுக்குமலை ஒரு பிரமிக்கவைக்கும்  இயற்கை சார்ந்த சுற்றுலா தலமாக உள்ளது.

கொழுகுமலையின் பெரும்பகுதி தேயிலை தோட்டங்களால்மூடப்பட்டிற்கும் காட்சி கண்ணிற்கு குளிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கும். இந்த கொழுக்குமலையைபொறுத்தவரையில் கேரளாவிற்கு சொந்தமானதாக இருந்தாலும், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிஎன்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கொழுக்குமலை ஒரு காணோட்டம்:

இயற்கையை நேசிக்கும் பலபேருக்கு பிடிக்கும் சுற்றுலாத்தலமான கொழுக்குமலை சுற்றுலாவை பற்றி  ஒரு சிறிய கண்ணோட்டமே இது.தேயிலை தோட்டங்களுக்கு அதிபதியாக விளங்கும் கொழுக்குமலை, உலகின் மிக உயரமான  தேயிலை விளையும் இடமாக உள்ளது.

உலகத்திலேயே கடல்மட்டத்திலிருந்து8100 அடி உயரத்தில் தேயிலை விளையக்கூடிய இடம் கொழுக்குமலை.தமிழக எல்லையில் உள்ள  தேனிமாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான இந்த கொழுக்குமலை கோயம்பத்தூரிலிருந்து சுமார் 195 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமுடி வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள  பிரம்மாண்டமான இயற்கைச்சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.

கொழுக்குமலைக்கு செல்லும்பொழுது வரும் தேயிலை மணம் சுற்றுலாப்பயணிகளை மேலும்ஈர்க்கிறது. வெயில் அதிகம்படாத குளிர்ச்சியான பகுதியாக பார்க்கப்படுகிறது.

இங்குள்ள பசுமை நிறைந்ததேயிலை தோட்டங்களை பார்த்து ரசிக்க நேரம் போதாது என்று தான் சொல்லவேண்டும். சுற்றுலாப்பயணிகளை இங்குள்ள தேயிலை தோட்டங்களும், தேனீரும் அதிகம் ஈர்க்கும் ஒன்றாகஉள்ளது.

கொழுக்குமலை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது மலையின் மேல் தோன்றும் அழகானசூரியன் உதிக்கும் காட்சியும்  மற்றும் சூரியன் மறையும் காட்சியும் தான் .

அதோடு அங்குள்ள சிங்கம்போன்ற உருவமுடைய பாறையின் மீது நின்றுகொண்டு அங்குள்ள எழில்கொஞ்சும் மலையின்அழகையும்,மேகமூட்டங்களை கையில் தொடும் தூரத்தில்  நாமிருப்பதும் சொல்ல வார்த்தைகளேஇல்லாமல் திகைத்து நிற்கும் அளவிற்கு இருக்கும்.

இந்த கொழுக்குமலையில் தேயிலை எஸ்டேட்டை பார்த்து ரசித்து விட்டு அங்குள்ள மலைப்பகுதியில்ஒரு நாள் இரவு டென்ட்டில் தங்கிவிட்டு அடுத்தநாள் கொழுகுமலையில் உள்ள சூரிய உதயம் மற்றும்சூரியஅஸ்தமனத்தை பார்க்கமுடியும்.

வழித்தடம் :

கொழுக்குமலை தமிழ்நாட்டின்  சூப்பரான சுற்றுலாதளமாகும். தமிழ்நாட்டு எல்லையில் இருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து கொழுகுமலைக்கு செல்லமுடியாது. கேரளாவின் எல்லையில் இருந்துதான்  தான்   கொழுகுமலைக்கு செல்லமுடியும். கொழுகுமலைக்கு செல்ல  பலவழிகள் உண்டு.

*தேனி,  போடிநாயக்கனூர் வழியாக கேரளா எல்லைப்பகுதியில் நுழைந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள சூரிய நெல்லி என்ற கிராமத்திற்கு சென்று அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்குமலைக்கு செல்லமுடியும்.

*அல்லது கோயம்பத்தூரிலிருந்து உடுமலை வழியாக மூணாறு சென்று பின்பு அங்கிருந்து சூரியநெல்லியை நாம் அடையமுடியும். சூரியநெல்லியில் உள்ள சோதனை சாவடியில் பணம் செலுத்தினால்  தான் அங்குள்ள ஜீப்மூலமாக நாம் கொழுக்குமலையை சுற்றிப்பார்க்க முடியும்.

சரித்திரம் படைத்த காசி விஸ்வநாதர் கோவில்

*கொழுக்குமலைக்கு செல்ல மூணாறு வந்து அங்கிருந்து சூரியநெல்லியை அடையவேண்டும் . இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தான் கொழுக்குமலை உள்ளது.

இந்த இடத்தை பொறுத்தவரையில் ஜீப்பில் பயணம் செய்வது தான் சுலபமானது. காரில் பயணம் செய்ய ஏற்ற வழித்தடம் அல்ல.பாதையை பொறுத்தவரையில்  மிகவும் கடினமானதாக இருக்கும்.

சூரியநெல்லி:

வெயில் படாத மலைப் பிரதேசமான கொழுகுமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயிலாக அமைந்துள்ளது சூரியநெல்லி மலைக்கிராமம்.தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் சரி,கேரளாவில் இருந்து வந்தாலும் சரி சூரியநெல்லி வழியாக தான் கொழுக்குமலைக்கு செல்லமுடியும்.நாம் எந்த வாகனத்தில் வந்தாலும் சரி சூரிய நெல்லியிலே நம்முடைய வாகனத்தை நிறுத்தவேண்டிய சூழல் இருக்கும் .ஏனென்றால் கொழுக்குமலைக்கு செல்லும் பாதையானது கரடுமுரடான சாலையாக இருப்பதால் சொந்தவாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

ஜீப் சவாரியும் அதனுடைய நுழைவுக்கட்டணமும்:-

சூரியநெல்லியிலிருந்து நமது பயணம் தொடங்கும். கொழுக்குமலைக்கு செல்ல விரும்புபவர்கள் இங்குள்ள செக் போஸ்டில் நுழைவுக்கட்டணமாக ரூ.2500 செலுத்தி பதிவு செய்துகொள்ளவேண்டும்.

இந்த நுழைவுக்கட்டணத்தை பொறுத்தவரையில் ஒரு ஜீப்பில் குறைந்தபட்சமாக 5 முதல் 6 நபர்கள் பயணிக்கலாம். நான் மட்டுமே இருந்ததால் எனக்கு ஒருத்தருக்கு 2500 ரூபாய் கட்டணம் செலுத்த சொன்னார்கள்.

பக்கத்தில் குடும்பத்தோடு 5 பேர் வந்திருந்தார்கள் அவர்களுக்கும் அதே கட்டணம் தான் வசூலிக்கப்பட்டது. அப்போதுதான் எனக்கு புரிந்தது இந்த கட்டணம் நமக்கில்லை , ஒரு ஜீப்பின் கட்டணமாக இந்த தொகை வசூலிக்கப்படுகிறது என்று.

சிறிது நேரம் காத்திருந்த பிறகு என்னுடன் சில ஆண் நண்பர்களும் வந்தார்கள். பதிவுக்கட்டணத்தை பிரித்துக்கொண்டோம் . மொத்தமாக 2500 கட்டணத்தை வசூல் செய்து நுழைவுசீட்டை பெற்றுக்கொண்டோம்.  வாடகைக்கு ஒரு ஜீப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தோம்.எந்த ஒரு பயம் தயக்கம் இல்லாமல் பயணத்தை தொடங்க ஆரம்பித்தோம்.

தங்கும் விடுதிகள் :

          கொழுகுமலையில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு  Tent Camping  என்று சொல்லக்கூடிய கூடார முகாம்கள்  திருமணம் ஆகாத இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.

உணவு :

        கொழுக்குமலை தமிழ்நாடு கேரளா எல்லையில் இருப்பதால் இங்கு கேரளா உணவுகளும் கிடைக்கும், தமிழ்நாடு உணவுகளும் கிடைக்கும்.  தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஒரு பயணம்:

கொழுகுமலைக்கு  சூரியநெல்லியில் இருந்து  ஜீப் மூலமாக நமது பயணத்தை தொடங்கப்போகிறோம்.  இங்கு இயக்கப்படும் ஜீப்புகள் அரசு உரிமம்பெற்று  இயக்கப்படுகின்றன. பல தனியார் ஜீப்புகளும் இங்கு இயக்கப்படுகின்றன.

இந்த பாதையை பொறுத்தவரையில் அங்குள்ள பசுமை போர்த்திய தேயிலை  தோட்டங்களுக்கு நடுவே   மலையடிவாரத்தில் உள்ள சிறு சிறு கிராமங்கள், தேயிலை தூள் தயாரிக்கும் நிறுவனங்கள், அருவிகள், கோவில்கள்  என அனைத்தையும் ரசித்தபடி  நமது ஜீப் பயணம் இருக்கும்.

இந்த இடத்தில்  பயணம் செய்வது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பள்ளம் மேடுமாக உள்ள அந்தப்பாதையில்  வளைந்து நெளித்து செல்லும் நமது பயணம் ஒரு இலவச மசாஜ் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.கரடு முரடான அந்த பாதையில் மழைக்காலத்தில் செல்வது மிக கடினம்.

அட்டைப்பூச்சிகளின் ஆதிக்கம் :-

நாம் தேயிலை தோட்டங்கள் வழியாக நடந்து செல்லும்பொழுது அங்குள்ள தோட்டங்களின் மீது நமது கைகள் மெதுவாக தொட தூண்டும். இது பொதுவாக இயற்கையை விரும்புபவர்களுக்கு பிடித்தமான ஒன்று.

செடி கொடிகளை தொட்டு ரசிப்பது. பல இடங்களில் என்னையும் அட்டைப்பூச்சிகள் கடித்துக்கொண்டது. அட்டைப்பூச்சிகளை பொறுத்தவரையில் எப்பொழுது நம்மை கடிக்க ஆரம்பித்தது என்பதே தெரியாது.

முடிந்தவரை  இந்த இடத்தில்  சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் கைகள் மற்றும் கால்களுக்கு பூச்சிகள் உள்ளே நுழையாதபடி கை உறைகள் மற்றும் காலணிகள்  அணிவது நல்லது.

டீ எஸ்டேட் :

    இங்கு உள்ள டீ எஸ்டேட்டில் டீ தூள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டும் அல்லாது அங்கு தயாரிக்கப்படும்  பல வகை டீ தூள் விற்பனைக்கு வகைப்பட்டிருக்கும் .

தேவையான டீ தூளை அங்கிருந்து நாம் வாங்கிவர முடியும்.  இங்கு நமக்கு ஒரு சூடான, சுவையான டீ யை ருசித்துப்பார்க்க கொடுப்பார்கள். அந்த டீ க்கு  கட்டணம் வசூலிக்கப்படும்.

தேயிலை தோட்டங்களுக்கு நடுவே குடிக்கப்படும் இந்த டீ ஒரு புதுவித  அனுபவமாக இருக்கும்.இங்கு தயாரிக்கப்படும் தேனீருக்கு தனி சுவையும்,மணமும் உண்டு.

Camp Fire:

    கொழுகுமலையில்  தங்கும் விடுதியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தீ மூட்டி அதை சுற்றி அனைவரும் அமர்ந்து ஆடல் பாடல் என அந்த தருணத்தை மறக்கமுடியாத மகிழ்ச்சியான  தருணமாக மாற்றிக்கொள்ள முடியும் .

குளிர்ச்சி தன்மையை உடைய நமது உடலை , மிதமான சூட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

ட்ரெக்கிங் :

சூரியநெல்லியிலிருந்து மலையேறும் இடத்தை அடைய குறைந்தபட்சமாக இரண்டு மணி நேரம்  தேவைப்படும். சூரியநெல்லியிலிருந்து கொழுகுமலையின் அடிவாரம் வரை மட்டுமே ஜீப் செயல்படும் .

அதற்கு மேலே செல்ல ட்ரெக்கிங் தான் செல்லவேண்டும்.கிட்டத்தட்ட கொழுக்குமலை அடிவாரத்திலிருந்து மலையின் உச்சியை அடைய   1200 அடி உயரத்திற்கு நம்மை ட்ரெக்கிங் அழைத்து செல்வார்கள்.

சிங்கபாறையும்- புகைப்படங்களும் :-

கொழுக்குமலையின் அடிவாரத்தில் நம்மை இறக்கி விடுவார்கள்.இங்கு சிங்கத்தின்  தலை போன்ற உருவம் கொண்ட  பாறை சுற்றுலாப்பயணிகளிடையே  மிகவும் பிரபலமானது.

இது ஒரு பாறை தான் ஆனால் பார்ப்பதற்கு சிங்கத்துடைய உருவத்தை போன்று அழகாக காட்சிதரும்.

இங்கு சிறிது நேரம் சுற்றுலாப்பயணிகள் ஓய்வெடுத்தபிறகு, விதவிதமான புகைப்படங்களை சிங்கப்பாறையிடம் நின்று எடுத்துக்கொள்ளலாம்.நானும் இங்கு நின்றபடி செல்ப்பி எடுத்துக்கொண்டேன் , பிறகு அப்படியே அங்கிருந்து  கிளம்ப ஆரம்பித்துவிட்டோம்.

நாம் அதிகாலை 5 மணியிலிருந்தே நடக்க ஆரம்பிப்பது நல்லது. ஏன் மலையேற்றத்தை 6 மணிக்கு நடக்க  ஆரம்பிக்ககூடாத என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றலாம் .

ஒரு சாதாரண மலையேற்றமாக மட்டும் இல்லாமல் ஒரு புதிய நிகழ்வை நாம் காணப்போகிறோம் என்ற ஆவல் நமக்குள் தொற்றிக்கொள்ளும்.

மலையேற்ற பயணத்தில் அழகிய காடுகள்,பசுமையான மரங்கள்,கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை நிற உடையை அணிந்ததுபோன்ற இயற்கையின் அழகு,பல நீர்விழ்ச்சிகள்,அருவிகள் என மிகவும் பிரமாண்டமான காட்சியை வழக்குகிறது .எப்படியோ ஒரு வழியாக  6 மணி அளவில் கொழுக்குமலையின் மலைஉச்சியை அடைந்து விட்டோம் .

சூரியஉதயமும் -சூரியன் மறைவும் :

மலை உச்சியின் ஒரு புறம் தமிழ்நாடு மறுபுறம் கேரளா, இரண்டு எல்லைகளையும் இணைக்கும் புள்ளியாக கொழுக்குமலை உள்ளது. இருபுறமும் பார்ப்பதற்கே அவ்வளவு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

மலையின் உச்சியில்  பனிப் படர்ந்த மலைகள், வனப்பகுதிகள், கைகளை தொட்டுக்கொண்டு செல்லும் மேகமூட்டங்கள் என அந்த காட்சி நம்மை வெகுவாக கவர்ந்திழுக்கும்.

சூரியன் மெல்ல மெல்ல செங்கதிர்களால்  ஒளிர ஆரம்பித்தது.அந்த  ரம்மியமான சூழலில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது .

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஏன் இந்த சுற்றுலாவை நாம் சென்றோம் என ஒரு கட்டத்தில் நினைக்க வைக்கும் . ஆனால் இந்த சூரியன் உதிக்கும் வண்ணமிக்க வர்ணஜாலம் பொங்கும் அழகை காணத்தான் நம்மை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது எனபிறகு தான் தெரியும்.

சூரிய உதயத்தின் அழகை  பார்ப்பதற்கே  பல சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.இதை மேகமலையின் சிறப்பு என்று கூட சொல்லலாம்.

இந்த இடத்தை பொறுத்தவரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் வரலாம். இங்கு வீசும் காற்று மிகவும் குளிர்ச்சியாகவே வீசுகிறது. காலையில் மட்டுமல்ல நாள் முழுக்க குளிர்ந்த காலநிலையை இங்கு நிலவுகிறது.

சூரிய உதயத்தை பார்ப்பதற்கு எப்படி கூட்டம் திரண்டு வருகிறதோ அது போல சூரியன் மறையும் தருணத்தை பார்க்கவும் ஏராளமான கூட்டம் வருகிறது.

சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்படும் இந்த கொழுக்குமலைக்கு “குளு குளு மலை ” என்ற மற்றொரு பட்ட பெயரையும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வைத்துள்ளனர்.

இந்த கொழுக்குமலையில் சூரியன் உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் பார்க்கும் அழகை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. இந்த சுற்றுலாவை பொறுத்தவரையில் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

எந்த ஒரு நிகழ்வையும் ரசிக்க நமக்கு முதலில் பொறுமை வேண்டும். பொறுமையை இழந்து, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு கேரளாவின் கொழுக்குமலை மலை சுற்றுலா ஒரு அமைதியை கொடுக்கும்.

பொதுவாக பச்சை நிறம் என்றால் கண்களுக்கு குளிர்ச்சி என்பார்கள் ,  மலை முழுவதும் தேயிலை தோட்டமும் அதன் பச்சைநிறம் கண்களுக்கு குளிர்ச்சியுடன் கூடிய விருந்தாக இருக்கும்.

மலை சுற்றுலாத்தளம் என்பதால் குளிர்ச்சித்தன்மை நம்முடன் பயணிக்கும். வார இறுதிநாட்களுக்கு கொழுக்குமலை  ஒரு சிறப்பான  சுற்றுலாத்தளமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top