அழகும் ஆபத்தும் நிறைந்த லே–லடாக் சுற்றுலா

வாழ்க்கை வட்டத்தை தாண்டி நான் கண்ட உலகம்
உலகில் பலரும் தங்களுக்கென ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கி அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அதுபோலவே இருந்தேன். தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கை — வேலை, வீடு, அதே மனிதர்கள், அதே சூழல்.
இது தவறு என்று சொல்ல முடியாது. உண்மையில், இந்த வாழ்க்கை நமக்கு ஒரு வகையான அமைதியையும் பாதுகாப்பையும் தருகிறது.
🚶♂️ ஒரு சிறிய மாற்றம்
ஆனால் ஒரு நாள், அந்த வட்டத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
“புதுசாக ஏதாவது பார்க்கணும்… புதிய அனுபவங்கள் பெறணும்…” என்ற ஆசை அதிகரித்தது.
அந்த ஒரு சிறிய முடிவே, என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
✨ வெளி உலகத்தின் அதிசயங்கள்
வெளியே வந்து புதிய இடங்களை பார்க்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு உணர்வு வந்தது.
நம்மை சுற்றி எவ்வளவு அழகான இடங்களும், புதிய அனுபவங்களும் இருக்கின்றன!
ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய கற்றலை கொடுத்தது.
ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய பார்வையை அளித்தது.
ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய கதையை சொல்லுகிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இடமும் ஒரு புதிய உணர்வை நமக்குக் கொடுக்கிறது.
நான் பயணம் செய்யத் தொடங்கிய பிறகு, நான் சென்ற ஒவ்வொரு இடமும் என்னுள் ஒரு மாற்றத்தை உருவாக்கத் தொடங்கியது. அது ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும், அது என் எண்ணங்களையும் பார்வையையும் மெதுவாக மாற்றியது.
🤔 என்னை நான் கேட்ட கேள்வி
இயற்கையின் அழகையும் கண்கொள்ளாக் காட்சிகளையும் பார்த்தபோது, என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது:
“இத்தனை நாளாக இதையெல்லாம் பார்க்காமல் எப்படி வாழ்ந்தேன்?”
அந்த ஒரு கேள்வியே எனக்குள் ஒரு புதிய ஆசையை உருவாக்கியது — இன்னும் அதிகமாக உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம்.
🌊 பார்க்க வேண்டிய இடங்கள்
நான் பயணம் செய்யத் தொடங்கிய பிறகு தான் ஒரு உண்மை புரிந்தது —
இந்த உலகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் முடிவே இல்லாமல் இருக்கின்றன.
-
புதிய மனிதர்கள் 🤝
-
அழகான கடல்கள் 🌊
-
இயற்கை நிறைந்த இடங்கள் 🌿
-
அமைதியான பள்ளத்தாக்குகள் 🏞️
ஒவ்வொரு இடமும் ஒரு புதிய அனுபவத்தையும் நினைவையும் கொடுக்கிறது.
🤔 ஒரு கேள்வி
ஒரு கட்டத்தில் எனக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது:
“இத்தனை இடங்களை எப்படி பார்த்து முடிப்பது?”
✈️ பதில் – சுற்றுலா
அதற்கான பதில் மிகவும் எளிது —
சுற்றுலா தான் அந்த வழி.
🌍 ஒரு பயணத்தின் உண்மை
பயணம் என்பது நம்மை புதிய இடங்களுக்கு மட்டும் கொண்டு செல்லாது.
அது நம்மை புதிய அனுபவங்களுக்கும், புதிய எண்ணங்களுக்கும், சில சமயம் புதிய வாழ்க்கைக்கும் கொண்டு செல்கிறது.
இந்த உண்மையை நான் பயணம் செய்யத் தொடங்கிய பிறகுதான் முழுமையாக உணர்ந்தேன்.
🎁 சுற்றுலா – ஒரு வரப்பிரசாதம்
என் பார்வையில் சுற்றுலா என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
அது பெரிய செலவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…
நம்ம வசதிக்கும், நம்ம விருப்பத்திற்கும் ஏற்ப எளிமையாக கூட பயணம் செய்யலாம்.
🧭 சுற்றுலாவின் பல வகைகள்
நான் slowly travel பண்ண ஆரம்பிச்சப்போ தான் புரிந்தது… சுற்றுலாவுக்கும் பல வகைகள் இருக்கிறது:
-
இயற்கையை ரசிக்கும் சுற்றுலா 🌿
-
புதிய கலாச்சாரங்களை அறியும் சுற்றுலா 🌏
-
honeymoon trips ❤️
-
நண்பர்களுடன் செல்லும் fun trips 😄
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவம்.
🧠 மன அழுத்தத்துக்கு மருந்து
ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் இருந்தால், மனசு நிறைய சிந்தனைகளால் heavy ஆகிடும்.
அப்படிப் பட்ட நேரத்தில் நான் கண்டுபிடித்த ஒரு simple solution…
சுற்றுலா.
புதிய இடங்களுக்கு போனாலே மனசு light ஆகிடும்.
ஒரு புதிய energy கிடைக்கும்.
🌄 என் கனவு பயணம்
நெடுநாட்களாக என் மனதில் இருந்த ஒரு ஆசை…
ஒரு நாள் கண்டிப்பாக போகணும் என்று நினைத்த இடம்…
லே – லடாக்.
அந்த பெயரை கேட்கும் போதே ஒரு excitement… ஒரு thrill.
🏔️ லே–லடாக்: ஒரு கனவு பயணம்
லே–லடாக் பற்றி சொல்ல ஆரம்பித்தால், அதன் அழகை வார்த்தைகளில் முழுமையாக சொல்ல முடியாது.
அழகான பள்ளத்தாக்குகள், உயரமான மலைகள், சலசலப்பாக ஓடும் ஆறுகள், கரடுமுரடான சாலைகள் — இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்குகின்றன.
குறிப்பாக, லே பகுதியில் பைக்கில் பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஆபத்தான பள்ளத்தாக்குகளை ஒட்டிய சாலைகளில் செல்லும் அந்த பயணம், சாகசத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் தருகிறது.
🌄 இயற்கையின் ஓவியம் போல காட்சிகள்
லே–லடாக் பயணத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகள் ஓவியம் போல காட்சியளிக்கும்.
அந்த மலைகளின் அருகில் ஓடும் அழகான ஆறுகள், அந்த இடத்தின் இயற்கை அழகை இன்னும் உயர்த்துகின்றன.
இந்த காட்சிகளை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாது — அதை நேரில் அனுபவிக்க வேண்டும்.
❄️ குளிரும் காற்றின் தனித்துவமும்
லடாக்கின் முக்கிய தனிச்சிறப்பு அதன் காலநிலை.
இங்கு பசுமையான மரங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், காற்று மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆனால், அதே நேரத்தில் உயரமான மலைப்பகுதிகளில் வீசும் காற்று சில நேரங்களில் மூச்சு விடுவதற்கே சிரமமாக இருக்கும்.
இந்த அனுபவமே லடாக்கை மற்ற இடங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
🏜️ நூப்ரா பள்ளத்தாக்கு – இன்றைய பயணம்
இன்று நாம் சுற்றுலா மேற்கொள்ளப் போகும் இடம், லடாக்கில் உள்ள அழகான நூப்ரா பள்ளத்தாக்கு (Nubra Valley).
இது லடாக்கின் மிகவும் பிரபலமான மற்றும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்று.
மலைகள், மணல்வெளிகள், ஆறுகள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து ஒரு தனித்துவமான இயற்கை சூழலை உருவாக்குகின்றன.
🏔️ கர்துங்க்லா வழியாக ஒரு அற்புத பயணம்
லே நகரில் இருந்து உலகப் புகழ்பெற்ற கர்துங்க்லா பாஸ் (Khardung La Pass) வழியாக நாம் நூப்ரா பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்கிறோம்.
இந்த பாதை உலகின் உயரமான சாலைப்பாதைகளில் ஒன்றாகும்.
இந்த வழியாக செல்லும் பயணம் சாகசமும் அழகும் கலந்த ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
🏜️ “குளிர்ந்த பாலைவனம்” என்ற தனிச்சிறப்பு
நூப்ரா பள்ளத்தாக்கை பொதுவாக “குளிர்ந்த பாலைவனம்” என்று அழைக்கிறார்கள்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் பத்தாயிரம் அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், அதன் தனித்துவமான இயற்கை அமைப்பால் அனைவரையும் கவர்கிறது.
பாலைவனத்தை நினைத்தால் வெப்பம் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் இங்கு குளிரும் பாலைவனமும் ஒன்றாக சேர்ந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன.
🌄 மனதை கவரும் பயண பாதைகள்
நூப்ரா பள்ளத்தாக்கை அடையும் முன் நாம் கடக்கப் போகும்:
-
உயரமான மலைப் பாதைகள்
-
ஆழமான பள்ளத்தாக்குகள்
-
கண்கவர் இயற்கை காட்சிகள்
இவை அனைத்தையும் நினைத்தாலே மனதில் ஒரு விதமான உற்சாகம் உருவாகிறது.
✨ எதிர்பார்ப்பே ஒரு மகிழ்ச்சி
அந்த இடத்தை நேரில் பார்க்கும் முன்பே,
“இந்த பயணம் எப்படி இருக்கும்?” என்ற எதிர்பார்ப்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
பயணம் தொடங்கும் அந்த நொடியிலிருந்து, ஒவ்வொரு கணமும் ஒரு புதிய அனுபவமாக மாறுகிறது.
🏍️ சாகசம் நிறைந்த ஒரு பயணம்
இந்த நூப்ரா பள்ளத்தாக்கை நாம் பைக்கில் சென்று சுற்றிப் பார்க்கப் போகிறோம்.
சுற்றுலா என்றாலே மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதிலும், இருசக்கர வாகனத்தில் அந்த அழகான இடங்களை கடந்து செல்லும் அனுபவம் இன்னும் சிறப்பானது.
🎶 பயணத்தின் உணர்வு
அந்த பாதையில் செல்லும் போது, மனதில் ஒரு கதாநாயகன் போன்ற உணர்வு இயல்பாகவே உருவாகும்.
நமக்கு பிடித்த பாடலை மெதுவாக மனதில் பாடிக்கொண்டே, சுற்றியுள்ள அழகான காட்சிகளை ரசித்து செல்லும் அந்த அனுபவம் உண்மையிலேயே மறக்க முடியாதது.
🚶♂️ பயணத்தின் தனித்துவம்
சுற்றுலா பயணத்தில் நடைபயணமும், பைக் பயணமும் இரண்டிற்கும் தனித்துவமான மகிழ்ச்சி உள்ளது.
இவை இரண்டும் நம்மை ஒரு மாய உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறதுபோல ஒரு உணர்வை தருகின்றன.
⏱️ பயண நேரமும் தூரமும்
இன்றைய நம்முடைய பயணம் சுமார் 160 கிலோமீட்டர் தூரம் கொண்டது.
இந்த பயணத்தை முடிக்க குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் வரை ஆகும்.
அந்த நேரம் முழுவதும் இயற்கையோடு சேர்ந்து பயணம் செய்வது, மனதில் ஒரு தனித்துவமான பரவசத்தை உருவாக்கும்.
லேவை எப்படி அடைவது :
லே-லடாக்கை பொறுத்தவரையில் விமானம் மற்றும் சாலை வழியாக செல்ல முடியும்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் லே நகரத்தை அடைய பொதுவாக குறைந்தபட்சம் சுமார் 6 மணி நேரம் வரை ஆகும் (இடைநிறுத்த விமானங்களுடன்).
இதே ரயில் மூலம் நேரடியாக லே நகரத்திற்கு செல்ல முடியாது. காரணம், லே-லடாக்கில் தற்போது ரயில் நிலையம் இல்லை. எனவே ரயிலில் செல்ல விரும்புவோர் முதலில் டெல்லி, கல்கத்தா அல்லது மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து விமானம் அல்லது சாலை வழியாக லேவை அடையலாம்.
அதேபோல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் ஸ்ரீநகர் மற்றும் மணாலி போன்ற நகரங்களிலிருந்து லே-லடாக்கிற்கு சாலை வழியாக பயணம் செய்யவும் வசதி உள்ளது. இந்த சாலைப் பயணமும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் அழகான அனுபவமாக இருக்கும்.
அழகும் ஆபத்தும் நிறைந்த பயணம் :
லே நகரத்திலிருந்து கொஞ்சம் தூரம் பயணம் செய்திருப்போம். அப்போது ஒரு சிறிய கடையின் முன்பு நமது வாகனம் நின்றது.
அங்கு நின்றதற்கான காரணம் — ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவது.
“சுற்றுலா செல்லும்போது எதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்?” என்று பலருக்கும் ஆச்சரியம் தோன்றலாம். ஆனால் லே-லடாக் சுற்றுலாவை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
பொதுவாக இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு உயரத்தில் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டால், பயணத்தின் போது ஏற்படக்கூடிய அந்த சிரமத்தை குறைக்க உதவும்.
இங்கு பல வகைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கெட் சிலிண்டர், சிறிய உருண்டை வடிவிலான சிலிண்டர், பெரிய அளவிலான சிலிண்டர் என பல வகைகள் உள்ளன. நமக்கு தேவையானதை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
லே செல்லும் போது எனக்கு சிறிது மூச்சு பிரச்சனை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக ஒரு சிறிய வடிவிலான ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.
அதற்குப் பிறகு நாம் சுற்றிப் பார்க்கச் சென்ற முக்கியமான இடம் நூப்ரா பள்ளத்தாக்கு (Nubra Valley).
இந்த பயணத்தை நான் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்தேன். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி, டெல்லியிலிருந்து மணாலி, பின்னர் மணாலியிலிருந்து லே-லடாக் என பயணத்தை மேற்கொண்டேன்.
நான் இந்த பயணத்தை ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் செய்தேன். ஆனால் ஜூன் மாதமாக இருந்தாலும் அப்போது அங்கு அதிகமான பனிப்பொழிவு இருந்தது. ஜூன் மாதத்திலேயே இவ்வளவு பனி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
லே – கர்த்துங் லா – நூப்ரா பள்ளத்தாக்கு :
இன்று நாம் லே நகரிலிருந்து கிளம்பி, உலகப் புகழ்பெற்ற கர்த்துங் லா சாலை வழியாக தான் நூப்ரா பள்ளத்தாக்கு செல்லப் போகிறோம். இருசக்கர வாகனமும் காரும் மாறி மாறி பயன்படுத்தி, கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.
இந்த கர்த்துங் லா வழியாக செல்ல வேண்டுமானால் இன்னர் லைன் அனுமதி (Inner Line Permit) மற்றும் பைக் வாடகை எடுத்திருந்தால் அதன் ரெண்டல் ரசீது அவசியமாக இருக்க வேண்டும்.
இந்த அனுமதியை பதிவு செய்யப்பட்ட பயண முகவர்கள் (travel agents) மூலமாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
லேவிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்ல சில சாலை வழிகள் இருந்தாலும், அதிகமாக பயன்படுத்தப்படுவது கர்த்துங் லா சாலை வழி தான்.
இந்த வழியில் செல்லும்போது அங்குள்ள செக் போஸ்டில் இன்னர் லைன் அனுமதி ரசீதை காண்பிக்க வேண்டும். அதன் பிறகே அங்கிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு நோக்கி செல்ல அனுமதி வழங்கப்படும்.
அந்த செக் போஸ்டில் அனுமதி ரசீதை காட்டிய பிறகு, மீண்டும் எங்களுடைய சுவாரஸ்யமான பயணம் தொடங்கியது.
வழி முழுவதும் உயரமான மலைகளும் ஆழமான பள்ளத்தாக்குகளும் ஓவியம் வரைந்தது போல அழகாக காட்சியளித்தன.
அந்த இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. நாம் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே சிறிய சிறிய கிராமங்களையும் காண முடிந்தது.
இவ்வாறான அழகான இடங்களை பைக்கில் பயணம் செய்து ரசிப்பது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத அனுபவம். அதை சொல்ல வார்த்தைகளும் இல்லை, முழுமையாக வர்ணிக்கவும் முடியாது.
மேலும் நமது வாகனம் உயரமான மலைகளின் மீது வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் பயணம் செய்யும்போது மனதில் ஒரு புதுவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்து செல்லும் போல இருக்கும்.
நாம் லே நகரிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கை அடையும் வரை வழியிலேயே சில முக்கியமான சுற்றுலா தளங்களையும் ரசிக்க முடியும். அவற்றில் முக்கியமானவை:
-
Leh View Point
-
Khardung La Pass
-
Diskit Monastery
-
Nubra Valley
இந்த இடங்கள் அனைத்தும் லே-லடாக் சுற்றுலாவில் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.
Leh View Point :
முதலில் நாம் சென்ற இடம் மலையின் உச்சியில் அமைந்துள்ள Leh View Point. இங்கு நம்முடைய வாகனங்களை கீழே நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடைபயணம் செய்ய வேண்டும்.
அங்கு செவ்வக வடிவிலான இரும்பால் செய்யப்பட்ட “Leh View Point” என்று எழுதப்பட்ட ஒரு அழகான செல்பி பாயிண்ட் இருக்கும். அந்த இடத்தில் நின்று கொண்டே கீழே விரிந்திருக்கும் லே கிராமத்தின் முழு அழகையும் நம்மால் ரசிக்க முடியும்.
அதோடு நமக்கு பிடித்த விதத்தில் வண்ணமயமான புகைப்படங்களையும் எடுத்துக்கொள்ளலாம். இங்கு நின்று லே நகரத்தை பார்ப்பது உண்மையிலேயே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அங்குள்ள உயரமான மலைகள், இடையே அமைந்துள்ள சிறிய கிராமங்கள், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள்—இவை அனைத்தும் சேர்ந்து ஒரு அற்புதமான காட்சியை உருவாக்குகின்றன.
இங்கு நம்மைப் போலவே பல சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சிறிது நேரம் அந்த அழகை ரசித்த பிறகு, அடுத்த சுற்றுலா தளத்தை நோக்கி மீண்டும் எங்களுடைய பயணம் தொடங்கியது.
2.கர்த்துங் லா பாஸ்(Khardung La pass):-
நாம் மேலே மேலே செல்லச் செல்ல பனிப்பொழிவு ஆரம்பிக்கத் தொடங்கியது. அதே சமயம் குளிர்ச்சியான காற்று மெதுவாக உடலைத் தீண்ட ஆரம்பித்தது. அந்த குளிரான சூழலில் பயணம் செய்வது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.
மலைகளின் நிறம் சில இடங்களில் மணலைப் போன்ற பழுப்பு நிறமாகவும், சில இடங்களில் முழுவதும் வெள்ளை நிற பனிக்கட்டிகளால் மூடப்பட்டதாகவும் காட்சியளித்தது.
மலைகளின் இந்த நிற மாற்றங்கள் இயற்கையின் அற்புதத்தை உணர்த்தும் வகையில் மிகவும் அழகாக இருந்தன.
இருசக்கர வாகனத்தில் இந்த மலைப் பாதைகளில் பயணம் செய்யும்போது அந்த காட்சிகளை ரசிப்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மனதில் பதிந்து விடுகிறது.
சில இடங்களில் பனியின் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தன. அந்த பகுதிகளில் பயணம் செய்வது ஒரு ஆப்-ரோடு சஃபாரி சென்றது போன்ற சுவாரஸ்யமான உணர்வை அளித்தது.
ஆனால் சில இடங்களில் நல்ல தார் சாலைகள் இருந்ததால் பயணம் சற்று எளிதாகவும் இருந்தது. உயரமான மலைத்தொடர்களின் கரையோரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் பயணம் மேற்கொள்வது உண்மையிலேயே ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.
2. Khardung La Pass :
ஒரு வழியாக நாம் கர்த்துங் லா பாஸை சென்றடைந்தோம். இந்த இடத்தில் சில சிறிய கடைகளும் உணவகங்களும் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,982 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் உலகிலேயே மிகவும் உயரமான மலைப்பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மலையின் உச்சியில் ராணுவ தளமும் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் நிற்கின்றனர். அந்த வீரர்களை பார்க்கும்போது அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் நம்மை பெருமைப்படச் செய்கிறது. 🇮🇳
சுற்றிலும் பனிச்சிகரங்களால் சூழப்பட்ட அந்த உயரமான இடத்தில் நின்று கொண்டு அங்குள்ள இயற்கை அழகை ரசிப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
அதேபோல் அங்கு உயரமாக பறக்கும் நமது தேசியக்கொடியின் அழகை பார்த்தால் சொல்ல வார்த்தைகளே இருக்காது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள “Khardung La Pass” என்ற பெயர் பலகையின் அருகில் நின்று கொண்டு பலரும் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதை காண முடியும். நாமும் அந்த அழகான தருணங்களை புகைப்படங்களாக நினைவாக பதிவு செய்து கொண்டோம்.
அப்போது பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்ததால் குளிர் காற்று மிகவும் அதிகமாக வீசத் தொடங்கியது. அந்த கடும் குளிரை எங்களால் தாங்க முடியாததால், சிறிது நேரம் மட்டுமே அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பத் தொடங்கிவிட்டோம்.
அவ்வளவு நேரம் அங்கு இருந்ததற்கே உடல் நடுங்கத் தொடங்கியது. அந்த சூழலில் வருடம் முழுவதும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் எப்படி அங்கே வாழ்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் நினைத்து பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது.
அங்கிருந்து கிளம்பி பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தோம். ஒரு இடத்தில் சிறுசிறு வீடுகள் பல இருந்தது. வாகனத்தை நிறுத்தி அந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அருகில் சென்ற பிறகுதான் அது வீடுகள் அல்ல, கடைகள் என்று தெரிந்தது.
நேரம் பார்த்தால் மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. நேரம் போனதே தெரியவில்லை. “சரி, இங்கேயே சாப்பிடலாம்” என்று முடிவு செய்தோம். அந்த இடத்தில் டீ, காபி, வெஜ் பிரைட் ரைஸ், எக் பிரைட் ரைஸ், மேகி போன்ற பல வகையான உணவுகள் கிடைத்தது. நமக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம்.
பைக் ரைடர்கள்
இது போன்ற உயரமான மலைப்பகுதிகளில் பயணம் செய்யும் போது, வழக்கமாக சாப்பிடும் அளவுக்குக் காட்டிலும் சற்று குறைவாகவே உணவு உட்கொள்வது நல்லது. அதே சமயம் உணவின் அளவை குறைத்து அதிகளவு தண்ணீர் குடிப்பதும் உடல்நலத்திற்கு நல்லது.
அதேபோல், இந்த இடம் இந்திய அளவில் அதிகமான பைக் ரைடர்கள் வரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. நம்முடைய தமிழ்நாட்டிலிருந்தும் பல பைக் ரைடர்கள் வந்திருந்தனர். அவர்களை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அங்கிருந்து அடுத்த சுற்றுலா இடத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நாம் செல்லும் பாதையின் ஒரு புறம் சரிந்து கிடக்கும் மலைத்தொடர்கள்; மறுபுறம் அகலமாக நீள்ந்து செல்லும் ஒரு அழகான ஆறு. அந்த ஆற்றை ஒட்டி மறுபுறம் மேலும் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. இயற்கையின் அழகு இங்கு எங்கும் கொட்டிக் கிடக்கிறது.
மலைத்தொடர்களின் வண்ணங்கள் கண்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கின்றன. சில இடங்களில் பார்த்தால், “இது உண்மையில் மலைத்தொடர்களா? இல்லை யாரோ ஓவியம் வரைந்து வைத்திருக்கிறார்களா?” என்று தோன்றும் அளவிற்கு அவை அற்புதமான தோற்றத்தை கொண்டிருக்கின்றன.
3.டிஸ்கித் மான்ஸ்ட்ரி(Diskit Monastery):-
அழகும் ஆபத்தும் நிறைந்த அந்த பாதையை கடந்து நாம் சென்றடைந்த சுற்றுலா தளம் Diskit Monastery. அதாவது Nubra Valley பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்தர் கோவில்.
இந்த கோவில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலை பார்வையிட மலையின் அடிவாரத்தில் நமது வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தால், அங்குள்ள மலைத்தொடர்கள் பல வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.
சில மலைகள் மணல் நிறத்தில் இருந்தன. சில பனிபடர்ந்த மலைகள் வெண்மை கலந்த நிறத்தில் பிரகாசித்தன. மேலும் சில மலைகள் லேசான கருமை நிறத்திலும் அழகாக காட்சியளித்தன. இயற்கை இங்கு தன் நிறங்களால் ஓவியம் வரைந்தது போல தோன்றியது.
மலையின் அடிவாரத்திலிருந்தே இந்த இடம் இவ்வளவு அழகாக தெரிந்தால், மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த காட்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருக்கும்.
இந்த இடத்தில் கோவிலுக்கு செல்ல தார் சாலைகளும், கரடுமுரடான சிறிய பாதைகளும் உள்ளன. நமக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்து மெதுவாக மலையின் மீது ஏறிச் செல்லலாம்.
நுழைவு கட்டணம் :
இந்த இடத்தில் நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இங்கு Maitreya Buddha Statue என்று அழைக்கப்படும் மிக உயரமான புத்தர் சிலை உள்ளது. இந்த சிலை தங்கம் நிறத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.
அந்த சிலையை பார்க்கும் பொழுதே நமக்குள் ஒரு அமைதி தானாகவே உருவாகும். அப்படி ஒரு காந்த தன்மை கொண்டது இந்த புத்தர் சிலை.
இங்குள்ள மக்கள் இந்த புத்தர் சிலையை மூன்று விதமான அர்த்தங்களில் வணங்குகிறார்கள்.
முதலாவது, உலக அமைதியை உருவாக்கும் கடவுளாக.
இரண்டாவது, மக்களை பாதுகாக்கும் நல்ல பாதுகாவலனாக.
மூன்றாவது, India மற்றும் Pakistan ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய போர்களை தடுக்கச் செய்யும் சமாதான கடவுளாகவும் இந்த புத்தர் சிலையை அவர்கள் பார்க்கின்றனர்.
இந்த மிகப் பெரிய உருவம் கொண்ட புத்தர் சிலையின் அடிவாரத்தில் சில அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் தியானம் செய்யும் இடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல சிறிய புத்தர் சிலைகளும் அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
முதலில் அடிவாரத்தில் உள்ள அறைகளுக்குச் சென்று அங்குள்ள புத்தர் சிலைகளை வணங்கி, பின்னர் மேலே சென்று அந்த பெரிய புத்தர் சிலையை வணங்கலாம்.
மேலே சென்று அங்குள்ள புத்தர் சிலையை தரிசித்த பிறகு, அங்கிருந்து கீழே பார்க்கும் போது ஒரு அழகான view point நம்மை கவர்ந்திழுக்கும்.
ஒரு புறம் Diskit கிராமம் பரந்து விரிந்து மிகவும் அழகாக தெரியும். மறுபுறம் உயர்ந்து நிற்கும் மலைத்தொடர்கள் அந்த காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கும்.
அங்கிருந்து பார்க்கும் அந்த இயற்கைக் காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அமைந்திருக்கும்.
இந்த புத்தர் கோவிலைச் சுற்றியும் பல மணிகள் (Prayer Wheels) அமைக்கப்பட்டுள்ளன. அந்த மணிகளை ஒன்றன் பின் ஒன்றாக சுழற்றி விடும் போது ஒரு தனித்துவமான ஒலி எழும். அந்த ஒலி அங்குள்ள அமைதியான சூழலுடன் கலந்துவிடும் போது மனதில் ஒரு விதமான ஆனந்தமும் அமைதியும் உருவாகும்.
4.நுப்ரா பள்ளத்தாக்கு(Nubra Valley) :-
புத்தர் கோவிலை பார்த்து ரசித்த பிறகு, அடுத்ததாக நாம் சென்ற இடம் Nubra Valley. நுப்ரா பள்ளத்தாக்கு என்றாலே அனைவருடைய நினைவில் முதலில் வருவது அங்குள்ள மணல் திட்டுகள் தான்.
நுப்ராவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தளம் Hunder Sand Dunes. இந்த இடத்தை பார்க்கும் போது, அது ஒரு ஆங்கில திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இடம் போலவே அற்புதமாக தோன்றும்.
எங்கும் பரந்து விரிந்த மணல் திட்டுகள், அதைச் சுற்றி உயர்ந்து நிற்கும் மலைத்தொடர்கள் — இந்த இரண்டும் சேர்ந்து அந்த இடத்திற்கு ஒரு தனித்துவமான அழகை கொடுக்கின்றன.
அதே சமயம் இந்த மணல் திட்டுகளின் அருகில் ஒரு சிறிய ஓடை மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும். பாலைவனத்தைப் போன்ற இடத்தில் நீர் ஓடுவது போல தோன்றும் இந்த காட்சி, பார்க்கும் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கிறது.
இந்த இடத்தைப் பொறுத்தவரையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல வண்ணங்களில் மலைத்தொடர்கள் அழகாக காட்சியளிக்கின்றன.
அந்த இயற்கைக் காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அற்புதமாக இருக்கும். அதேபோல் இங்கு சில சாகச விளையாட்டுகளையும் அனுபவிக்க முடியும்.
முக்கியமாக, Rajasthan பாலைவனத்தில் ஒட்டக சவாரி அழைத்து செல்லப்படுவது போலவே, இங்கும் ஒட்டக சவாரி மிகவும் பிரபலமானது. குறிப்பாக Hunder Sand Dunes பகுதியில் இந்த அனுபவம் அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
பாலைவனத்தில் ஒட்டக சவாரி
ஆனால் இங்குள்ள ஒட்டக சவாரிக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதாவது இங்குள்ள ஒட்டகங்களுக்கு இரண்டு கூம்புகள் இருக்கும். இந்த வகை ஒட்டகங்கள் Bactrian camel என்று அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு கூம்பு கொண்ட ஒட்டகத்தின் மீது ஏறி பாலைவனத்தில் சவாரி செல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரு புறம் கீழே விழுந்துவிடுவோமோ என்ற சிறிய பயம் இருந்தாலும், மறுபுறம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக சவாரி செய்து கொண்டிருந்தனர். அது உண்மையில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
இந்த ஒட்டக சவாரிக்கான நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு சுமார் 350 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. Nubra Valleyபகுதியில் இந்த ஒட்டக சவாரியை அனுபவிக்க பல சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதை காண முடியும்.
இந்த இடத்தில் மாலை நேரத்தில் ஒட்டக சவாரி சென்றோம். அந்த நேரத்தில் சூரியன் மறையும் காட்சியும், அங்குள்ள மணல் திட்டுகளும், சுற்றிலும் காட்சியளிக்கும் அழகிய மலைத்தொடர்களும் சேர்ந்து ஒரு அற்புதமான சூழலை உருவாக்கின.
அந்த காட்சியை ரசிக்கும் அனுபவம் உண்மையிலேயே “வேற லெவல்” என்று சொல்லலாம். இந்த அழகான அனுபவத்தை நாம் Hunder Sand Dunes பகுதியில் அனுபவித்தோம்.
ஒட்டக சவாரியைப் பொறுத்தவரையில், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒட்டகத்தில் அழைத்து சென்று, அங்கு சிறிது நேரம் நிறுத்தி புகைப்படங்கள் எடுக்க வாய்ப்பு அளிக்கிறார்கள். அந்த தருணத்தில் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசித்தபடி அழகான நினைவுகளை புகைப்படமாக பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல் இங்கு வில் அம்பு விடும் விளையாட்டும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமாக இதில் கலந்து கொள்கிறார்கள். ஒருவர் அம்பு விடும் போது அவரை உற்சாகப்படுத்த சுற்றிலும் ஒரு கூட்டமே இருக்கும். அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நானும் இந்த அம்பு விடும் விளையாட்டில் கலந்து கொண்டேன். அதில் வெற்றி பெற்ற அந்த நொடி, குழந்தை போல மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டு அந்த தருணத்தை முழுமையாக என்ஜாய் செய்தேன்.
மறக்க முடியாத பயணத்தில்
அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த பிறகு, Nubra Valley பகுதியில் உள்ள தங்கும் விடுதியை நோக்கி பயணித்தோம். இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக பல தங்கும் விடுதிகள் உள்ளன. அதனால் நமக்கு ஏற்ற வசதியும் பட்ஜெட்டும் உள்ள விடுதியை தேர்வு செய்து தங்கிக்கொள்ளலாம்.
நானும் என்னுடைய பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு விடுதியை தேர்வு செய்து அந்த இரவு அங்கே தங்கினேன். அந்த விடுதியில் இரவு உணவும், மறுநாள் காலை உணவும் வழங்கப்பட்டது.
காலை உணவாக பூரி, உருளைக்கிழங்கு மசாலா, பிரெட் மற்றும் ஜாம் வழங்கப்பட்டது. லே பயணத்தில் நான் சாப்பிட்ட உணவுகளில், இந்த இடத்தில் கிடைத்த உணவின் சுவை மிகவும் அருமையாக இருந்தது. பல நாட்களுக்கு பிறகு வயிறு நிறைய சாப்பிட்ட ஒரு திருப்தியான உணர்வும் கிடைத்தது.
என்னுடைய சுற்றுலா பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாக இந்த Nubra Valley சுற்றுலா அமைந்தது.









