லே லடாக் சுற்றுலா Leh Ladakh

நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதி எப்படி பணத்தை சம்பாதிப்பது என்றும்,ஒரு பகுதி எப்படி பணத்தை சேமிப்பதுஎன்றும் மற்றொரு பகுதி பணத்தை எப்படி செல்வழிக்கப்போகிறோம் என ஒரு சுழற்சி முறையில் தான் நாட்கள் நகர்ந்து கொண்டு போகிறது.
இதை தாண்டி மனிதனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருவது சுற்றுலா தான்.
வெளியுலகில்உள்ள மரம்,செடி,கொடி,வண்ணப்பூக்கள்,விலங்குகள், இயற்கையின் அழகு,மலைகள்,ஆறுகள்,ஏரிகள்,கடல்கள்,அமைதியான வனப்பகுதியில் நடந்து செல்வது,சுற்றிலும் நம்மை ஈர்க்கும் பல கலாச்சாரநிகழ்வுகள்,விதவிதமான உணவுகள்,வானில் பறப்பதை போன்ற உணர்வு பொங்கும் விளையாட்டுகள்,மாறுபட்ட திக்திக்தருணங்கள் என இவ்வுலகில் நாம் ரசிக்க பல படைப்புகளும் ,அதிசயங்களும் உள்ளன.
பயணத்தைபொறுத்தவரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. உலகம் மிகவும்அழகானது, அந்த அழகை முடிந்தளவு அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இன்றளவிலும் சுற்றுலா என்பது பலருடையவாழ்க்கையில் கனவாக தான் உள்ளது.இந்த கனவை என்று நிஜமாக்குவது என பலரும் மனதில் கனவுக்கோட்டைகளைகாட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
என்னுடைய வாழ்க்கையிலும் சுற்றுலா என்பது பல வருடங்களுக்கு முன்பு வரை கனவாகவே இருந்தது,இன்று நிஜமாகமாறியது.ஒவ்வொரு இடத்திற்கும் சுற்றுலா செல்லும்பொழுது என்னையே நான் மறந்து விடுகிறேன்.
நான் காணும்பொருளாகவே நான் உருமாறி அனைத்தையும் மறந்துவிடுகிறேன். நான் சென்ற சுற்றுலாக்களில் என்னை மிகவும்கவர்ந்த சுற்றுலாவாக “லே – லடாக் “சுற்றுலா உள்ளது.
அங்கு சுற்றிப்பார்க்கும் இடங்களும்,பசுமை நிறைந்தஇடங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
ஆனால் மரங்களே இல்லாத மலைக்குன்றுகளும்,ஆபத்தானபாதைகளும்,மூச்சடைக்கக்கூடிய சில இடங்களும் நம்மை வேறு உலகிற்கே அழைத்துச்செல்கிறது என்றுதான்சொல்லவேண்டும்.
அப்படி ஒரு விதியசமான சுற்றுலா பயணம் தான் இந்த “லே – லடாக் சுற்றுலா பயணம் ” .இந்தபயணம் என்னை மட்டுமல்ல,என்னை போன்று பலரையும் மெய்மறக்கவும்,மெய்சிலிர்க்கவும் வைத்த ஒருசுற்றுலாவாகத்தான் நாம் உணரவேண்டும்.
மணாலி-சர்ச்சு :-
மணாலியிலிருந்து சர்ச்சு செல்லும் வழியில் பனிமலைகள் அதிகம் உள்ள இடம் ஸ்லாங் வேலி(Solang Valley). இங்குபுகழ்பெற்ற பனியில் விளையாடக்கூடிய சாகச விளையாட்டுகளான பனிச்சறுக்கு ,ஸ்னோ போர்டிங் , பாராகிளைடிங்,ஸ்னோ ட்ரெக்,ஸ்னோ பைக்கிங்,கேம்பிங் ,கோண்டோலா சவாரி என பல விளையாட்டுகள் உள்ளது.
அதிலும் பனிச்சறுக்கு சரிவுகள் மற்றும் ரோப்வே சவாரிகளுக்கு பெயர் பெற்றது சோலாங் பள்ளத்தாக்கு. குறிப்பாககோடையில்குதிரை சவாரி, சோர்பிங், ஹைகிங் போன்ற விளையாட்டுகள் மனதை மிகவும் லேசாக்குகிறது.
இன்னும்சொல்லப்போனால் இதனை “ஸ்லாங் வேலி” என்பதற்கு பதிலாக “ஸ்னோ வேலி “என்றும் அழைக்கலாம். சுற்றுலாபயணிகளை அதிகமாக ஈர்க்கும் விதமாக உள்ளது.
உலகின் மிக நீளமான ஒற்றை உருண்டைவடிவ நெடுஞ்சாலைசுரங்கப்பாதை அடல் சுரங்கப்பாதை(Atal Tunnel Rohtang Pass), செக் போஸ்ட், இந்தியாஅளவில் மூன்றாவது மிகஉயரமான ஏரியாகவும் , உலகளவில் 21 வது ஏரி என்றபெருமைக்குரிய சூரஜ் தால்( Suraj Tal Lake) அல்லது தீபக்தால்(Deepak Tal) என கண்கவர் இடங்களை சுற்றிப்பார்த்து ரசித்து விட்டு, சர்ச்சுவில் ஒரு நாள் இரவு டென்ட்டில் இரவுதங்கிவிட்டு,அடுத்தநாள் காலை மற்ற இடங்களை சுற்றிப்பார்க்க கிளம்புவோம் .
பல கிலோமீட்டர் தூரம் வரைக்கும்வீடுகளோ, மரங்களோ இல்லை. ஆனால் சுற்றிலும் மலைகள் பனி நிறைந்து காணப்படுகிறது.
மரங்கள் இல்லைஎன்றாலும் சுற்றிலும் மலைகள் பனிகளால் நிரம்பியதால் இந்த இடத்தில் குளிர்காற்று அதிகமாக வீசுகிறது.வெயில்நேரத்திலே குளிர் தாங்கமுடியவில்லை.இரவு நேரத்தில் சொல்லவா வேண்டும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும்நடுநடுங்க வைத்தது.
சர்ச்சு – லே லடாக் – சுருக்கம்:-
சர்ச்சுவில் இரவு உணவு மற்றும் காலை உணவை இந்த டென்ட் தங்கும் விடுதியில் முடித்துவிட்டு அங்கிருந்து நாம்அடுத்த இடத்திற்க்கு கிளம்பி விட்டோம்.சர்ச்சுவிலிருந்து லே லடாக் செல்ல கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இன்று பயணம் செய்யப்போகிறோம்.
இதற்கிடையில் சில முக்கியமான சுற்றுலா தளங்களையும் நாம்பார்க்கப்போகிறோம்.
ஏற்கனவே மணாலி – சர்ச்சு வரையில் பயணம் செய்ததே நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது. இந்த பிரமிப்பிலிருந்தே மீளமுடியவில்லை.
அடுத்தடுத்து நாம் சுற்றிப்பார்க்கும் இடம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இன்னும்அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இன்று நாம் செல்லும் வழியில் சில முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்க போகிறோம்.
1.கட்டா லூப்ஸ்(GataLoops)
2.நகீ லா பாஸ்(NakeelaPass)
3.டாங்லாங் லா பாஸ்(Tanglang La Pass)
இந்த மூன்று சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்துவிட்ட பிறகு லே சென்றடைவோம்.சில கிலோமீட்டர் தூரங்களைகடந்திருப்போம்.அங்கு ஒரு சோதனை சாவடி இருந்தது.
பல சரக்குவாகனங்கள் நீண்ட வரிசையில்நிற்கப்பட்டிருந்தது.இந்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும்பொழுதுதான் புரிந்தது.
நாம் தற்பொழுது கடந்து செல்லும் பாதை சிக்கலான பாதை என்பதால் ஒன்றன் பின் ஒன்றாகஒவ்வொரு வாகனத்தையும் அந்த வழியில் அனுப்பிவைக்கின்றனர் அங்குள்ள அதிகாரிகள்.
அதனை தொடர்ந்து நாம்செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது அதோடு அழகானதும் கூட.இருபக்கமும் மரங்களே இல்லாத தங்க நிறத்தைபோர்த்தியது போன்ற மலைகள்,இந்த இரு மலைகளுக்கு நடுவே மிகப்பெரிய ஆறு,
ஆற்றிற்கு அருகில் மிக சிறிய பாதைஎன செல்லும் வழி கண்களுக்கு அழகும்,பயணத்தை மிகவும் ஆபத்தானதாகவும் உணரவைக்கிறது.
இங்குள்ளமலைத்தொடர்களை பார்க்கும்பொழுது ஓவியம் வரைந்ததை போன்று அவ்வளவு அழகாக இருந்தது.இது நிஜமா இல்லநிழலா என்று நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தது இந்த இடம்.
மேகமும் கொஞ்சம் இருள் சூழ்ந்ததுபோல இருந்தது.மேலும் அந்த இடத்தை அழகாக்கியது.புல் பூண்டு கூட முளைக்காதமலைத்தொடர்கள்,பள்ளத்தாக்குகள்,கருத்த மேகம்,பனிபடர்ந்த குன்றுகள் என அனைத்தையும் ரசித்துக்கொண்டுபைக்கில் ரோடு ட்ரிப் போவது சொல்ல வார்த்தைகளே இல்லை.
1.காடா லூப்ஸ்(GataLoops) – 21 கொண்டைஊசி வளைவுகளும் :-
இது மணாலி -லே நெடுஞ்சாலையில் சர்ச்சுவிலிருந்து 25கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காடா லூப்ஸ்என்பது அதனையுடைய பெயருக்கு ஏற்றதுபோல வளைந்து வளைந்து செல்லும் பாதையை குறிக்கிறது.
இந்தபாதையானது கடல்மட்டத்திலிருந்து சுமார் 17000 அடி உயரத்தில்,21 ஹேர்பின் வளைவுகளை கொண்டபாதை.ஒவ்வொரு வளைவுகளும் மிக கூர்மையான வளைவுகளை கொண்டது.
இந்த சாலையை கடப்பது ஒவ்வொருபயணிகளுக்கும் சவாலாக இருக்கும். அதே சமயம் மிகஉயரத்தில் பைக் செல்லும் சாலையாக இந்த இடம்உள்ளது.
ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளிலும் பைக்கில் ரைடு போவது புதுவித அனுபவத்தைநமக்களிக்கிறது.சுற்றிலும் உள்ள அழகை அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
எப்பொழுது பார்வையிடலாம்?
இந்த இடத்தை பொறுத்தவரையில் ஜூன்,ஜூலை,ஆகஸ்டு,செப்டம்பர் மாதங்களில் சவாரி செய்வதற்க்கு ஏற்றதாகஇருக்கும்.
2.நகீ லா பாஸ்(NakeelaPass):-
மணாலி – லே நெடுஞ்சாலையில் செல்லும்பொழுது அடுத்ததாக நாம் சென்ற இடம் நகீ லா பாஸ். கடல்மட்டத்திலிருந்து 15547 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் மனம் கவரும்இடமாக உள்ளது.
அதே சமயம் பனிபொழிவின் காரணமாக கடுங்குளிர் இங்கு நிலவும்.மிக உயரமான மலைப்பாதையைகொண்டுள்ளது.இது மணாலி – லே செல்லும் பொழுது கடக்கும் மூன்றாவது கனவாய்.
நாம் எப்படி கோவிலுக்குசென்றால் வீடு புதிதாக கட்டணும் என நினைத்து கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கிறோமோ ,அதுபோலஇங்கு கற்களை கொண்டு அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு எந்த காரணத்திற்காக அடுக்கிவைக்கப்படுகிறது என்று தெரியவில்லை.கொஞ்சநேரம் அந்த பனிபொழிவில் நனைந்து விட்டு சிலபுகைப்படங்களும்,வீடியோக்களும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த இடம் கிளம்பிவிட்டோம்.மற்றபடி இந்தஇடத்தில் சுற்றிப்பார்க்க எதுவும் இல்லை.
இந்த மலைப்பாதைகளை கடந்து கீழே சமமான பகுதிக்கு நமது வாகனம் இறங்கி சென்றது.அங்கு பல கூடாரங்கள்அமைக்கப்பட்டிருந்தது.
பல சுற்றுலாப்பயணிகளும்,அவர்கள் பயன்படுத்திய கார்,பைக்,இன்னும் சில வாகனங்களும்அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.நமது வாகனத்தையும் அங்கு நிறுத்திவிட்டு,கீழே இறங்கி கூடாரத்தை நோக்கி நடக்கஆரம்பித்தோம்.
அருகில் சென்று பார்த்தால் தான் தெரிகிறது அது நம்ம ஊரு பெட்டிக்கடை மற்றும் உட்புறத்தில்உணவகமும் உள்ளது என்று.இங்கு பல கடைகள் இருந்தது, இந்த பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில்கள், ஜூஸ்வகைகள்,சாக்லேட்கள், பிஸ்கெட்கள் என பல வகையான தின்பண்டங்களும் இருந்தது.
இங்கு மதிய உணவுகிடைக்கும். உணவை பொறுத்தவரையில் மேகி,நூடுல்ஸ்,பிரட் ஆம்பிலேட் என பல வகைகள் இருந்தது.நமக்கு எந்தஉணவு வேண்டும் அதை சாப்பிடலாம்.
இந்த பனிபொழிவும்,கடும் குளிரும் இருந்ததால் நான் அந்த இடத்தில் சூடா ஒருதேனீரை அருந்தினேன்.பின்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபிறகு அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம்.
அங்கிருந்த கிளம்பி கொஞ்சம் தூரம் பயணித்திருப்போம்.அழகான பனிக்குன்றுகள்,தூய்மையானகாற்று,அடுக்கடுக்காக மலைகள் என கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியதாக இந்த தருணம் இருந்தது.
உணவு விடுதி
பின்புகரடுமுரடான ஒற்றை வழி பாதைகள்,ஒருபுறம் எப்பொழுதுவேண்டுமானாலும் சரியக்கூடிய மலைகள்,இதனை ஒட்டிசிறு பாதை,பாதையின் விளிம்பில் பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் என இந்த பயணம் ஒரு த்ரில்லிங்கானஅனுபவத்தை நமக்கு தருகின்றது.
இந்த மாதிரி ஒரு இடத்தில நாம் பைக்கில் ட்ராவல் செய்வது ப்பா வேறமாதிரிஇருக்கும்.சொல்லும்பொழுதே சொல்லமுடியாத அளவுக்கு சந்தோஷத்தையும், புதுவித அனுபத்தையும் இந்த பயணம்நமக்களிக்கிறது.
இங்குள்ள மலைகள் சற்று வித்தியாசமாக மண்ணை குவியல் குவியலாக சேர்த்து போலவும், சிலமலைகள் சற்று விதியசமான தோற்றத்தையும் கொண்டிருந்தது. ஆனால் மிக உயரமான மலைப்பாதைகளைகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல கிலோமீட்டர்களை கடந்திருப்போம் ,லேசாக பசிக்க ஆரம்பித்துவிட்டது.அதனால் அங்கு உணவுவிடுதிகள் உள்ளஇடத்தை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டோம்.
ஒரு உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தோம்.மேகி,பிரட் ஆம்லெட்,பிரைட் ரைஸ் வெஜ்,பிளாக் டீ,வெள்ளை சத்தம் மற்றும் தால் இருந்தது.நமக்கு எது விருப்பமோ அதை நாம்சாப்பிடலாம்.
முடிந்தளவுக்கு இந்த இடத்தை பொறுத்தவரையில் சற்று குறைவாக சாப்பிடுவது நல்லது.அங்கிருந்துசாப்பிட்டு முடித்தபிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
இப்பொழுது நம்முடைய வாகனம் சற்று உயரமான மலைப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அப்படியேதிரும்பி ஓரத்தில் வந்த பாதையை ஊற்று நோக்கினால், இரு பெரிய மலைத்தொடர்களுக்கு நடுவிலும், அருகில் ஒருபெரிய ஆறும் பாய்ந்தோடுகிறது.
பார்க்கவே அவ்வளவு பிரமாண்டமாகவும்,பிரமிப்பாகவும் இருந்தது அந்த காட்சி.இந்தஇடத்திலா இவ்வளவு நேரம் நாம் பயணம் செய்தோம் என நினைக்கும் அளவிற்க்கு இருந்தது.மலையின் உச்சியைஅடைந்த பிறகு சமமான பாதை கண்ணுக்கு தெரிந்தது.
இந்த சமமான இடத்தை பொறுத்தவரையில்கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் காலியான பகுதியும்,இதனை ஒட்டி சுற்றிலும் சிறுசிறு மலைகளும் ஓவியம்வரைந்தது போல இருந்தது.பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.
இவ்வளவு நாள் இந்த இடத்தை பார்க்காமல்தவறவிட்டோமே என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தது.
இந்த இடத்தை பொறுத்தவரையில் சுற்றிப்பார்க்க உகந்த நேரம்,மே கடைசி அல்லது ஜூன் மாதம் தொடங்கியதுஇங்கு சுற்றுலா செல்ல சரியான நேரம்.
ஜூன்,ஜூலை,ஆகஸ்டு,செப்டம்பர் என அடுத்து நான்கு மாதம் மட்டுமே மணாலி- லே பாதை திறந்து விடப்படும்.மற்ற மாதங்களில் மழைப்பொழிவு,கடும்பனி,மலைகளில் ஏற்படும் சரிவு போன்ற காரணங்களால் பாதைகள் அடைக்கப்படும். அதோடு மற்ற மாதங்களில் நாம் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
3.டாங்லாங் லா பாஸ்(Tanglang La Pass):-
அடுத்த இடத்தை நோக்கி நம்முடைய பயணம் நகர ஆரம்பித்தது.போக போக வழி முழுவதும் பனிமழை பொழியஆரம்பித்து விட்டது.
சாதாரணமாக மழையில் நாம் நனைவதற்கும்,வெண்ணிற பனிமலையில் நாம் நனைவதற்கும்எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.
நினைக்கும் பொழுதே நமக்கு பிடித்த பாடல் ஒன்று மனதோரம்நினைவுக்கு வர,அப்படியே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது நம்மை சுற்றிலும் நடப்பது கனவா நிஜமாஎன நினைக்கவைத்தது.
இதை கடந்து கொஞ்சதூரம் சென்றிருப்போம் நமக்கு அருகில் என்ன இருக்கிறது என்று தெரியாத அளவில்மேகமூட்டம்,பனிமழை நம்மை பின்தொடர்ந்து.
நம்மை சுற்றி யாருமே இல்லாதது போன்ற உணர்வு என்னுள் ஏதேதோநினைக்கவைத்தது.இப்படி வாழ்வது கூட ஒரு சுகமாக தான் இருந்தது.ரோடு, மலைக்குன்றுகள்,ஆறுகள்,பள்ளத்தாக்குஎன அனைத்தையும் வெண்பனி ஆக்கிரமித்துள்ளது.
அந்த அழகை காண்பது,நம்மை பல வருடங்கள் பின்னுக்கேதள்ளுகிறது.குழந்தைகளை போல அந்த வெண்பனி மழையில் ஆடி பாடி விளையாட ஆசையைதூண்டியது.என்னுடைய வாழ்நாளில் மணாலி – லே சுற்றுலா பயணம் வேறு உலகிற்கே அழைத்து சென்றது என்று தான்சொல்லவேண்டும்.
நாம் அடுத்ததாக செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது. அழகான லடாக் பயணத்தில் அடுத்ததாக நாம் வந்துள்ளஇடம், உலகின் இரண்டாவது உயரமான பாஸ் – டாங்லாங் லா.
உலகிலேயே மிக உயரமான மலைப்பாதைகளில் ஒன்றான டாங்லாங் லா பாஸ் தான். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 17480 அடி உயரத்தில் உள்ளது.
தூரத்தில், பனிமூடிய சிகரங்களையும் , அவற்றின் மேல் மேகங்கள் அமர்ந்திருப்பதைக்பக்கம் இருந்து நாம் பார்க்கமுடியும்.
இந்தஇடத்திலும் வண்ண வண்ண புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்துக்கொண்டு நம்முடைய ஞாபகங்களை பதிவுசெய்யலாம்.இந்த இடத்தை பொறுத்தவரையில் மனதை மிகவும் லேசாக்குகிறது.
நகரத்தில் கேட்கும் இரைச்சல்கள்சுத்தமாக இல்லை அதோடு தூய்மையான ஒரு காற்றை சுவாசிப்பதுபோன்ற உணர்வை நம்முடைய ஆழ்மனதில்ஏற்படுத்துகிறது.
இங்கு பனி நிறைந்த இடங்களை மட்டுமே காணமுடியும்.மரம்,செடி,கொடி என எதையும் இங்குகாணமுடியாது.
சாகசப்பிரியர்களும் சரி,தனிமையை விரும்புபவர்களும் சரி வாழ்நாளில் ஒரு முறையாவது பயணிக்கவேண்டிய இடமாகஉள்ளது இந்த மணாலி – லே சுற்றுலா.
இந்த இடத்தை பொறுத்தவரையில் புத்த பிரார்த்தனை கொடிகளான வண்ணவண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
இந்த சுற்றுலா பொறுத்தவரையில் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு சிறப்புடையதாக இருக்கிறது. சில இடங்களில்கடும் வெயில்,சில இடங்களில் புல்பூண்டு கூட இல்லாத மலைக்குன்றுகள்,கடும் பனி பொருத்தப்பட்டுள்ள பாதைகள், பள்ளத்தாக்குகள்,ஆறுகள்,நிறு சிறு ஓடைகள் என நம்மை மூச்சடைக்க வைக்கிறது.
இப்பொழுது நாம் லே-வை நெருங்கிவிட்டோம்.இங்கிருந்து இன்னும் 20 கிலோமீட்டர் தொலைவில் தான் லேஉள்ளது.நெடும் பயணத்தை தாண்டி, நாம் பல நாட்களாக காத்துக்கொண்டிருந்த அந்த அற்புதமான லேபோகப்போறோம்.
லே அருகில் செல்ல செல்ல செல்லும் பாதைகள் எல்லாம் வீடுகள்,அழகான மரங்கள் எனபசுமையான தளத்தை சென்றடைந்தோம்.
தங்கும் விடுதிகள் :-
ஒரு வழியாக மணாலியிலிருந்து கிளம்பி இரண்டு நாட்கள் பயணத்திற்கு பிறகு லே -லடாக் வந்துவிட்டோம்.இங்குள்ளஒரு விடுதியில் இன்று தங்கிவிட்டு அடுத்த இடங்களை சுற்றிப்பார்க்க போகிறோம்.
நாம் தங்கியிருந்த விடுதியைபொறுத்தவரையில் அறைகள் இரண்டு நபர்கள் தாராளமாக தாங்கக்கூடியதாக இருந்தது.
இந்த விடுதியின் முதலாளிநம்முடைய தமிழ்நாட்டை சேர்ந்தவர்என்பது நமக்கு மேலும் பலத்தை சேர்ப்பதைப்போல இருந்தது.இந்த விடுதியில்அடுத்த நாள் சுற்றிப்பார்க்க
உணவு :-
உணவை பொறுத்தவரையில் இரவு உணவு மற்றும் காலை உணவு இரண்டு வேளையும் சாப்பாடு தமிழ்நாட்டில்சமைப்பதை போன்ற மணத்தையும்,ருசியையும் கொண்டிருந்தது.
உலகில் ரொம்ப அழகான இலங்கை ரயில் பயணம்
லே சுற்றிப்பாது எப்படி ?
லே-வில் ரோடு ட்ரிப் போக நாம் தங்கியிருக்கும் விடுதியில் தேவையான பைக்குள், கார் வாடகைக்கு கிடைக்கும். நமக்கு எந்த வகையான பைக் வேண்டுமோ அதை நாம் விடுதியில் உள்ள மேலதிகாரிகளிடம் கூறினாலே போதும்,
அவர்கள் நமக்கு பிடித்த பைக்கை பதிவு செய்து தருவார்கள். அந்த சுற்றுலாவிற்கு தேவையான பெட்ரோல் முதல்கொண்டு அவர்களே ஏற்பாடு செய்துதருவார்கள்.
செல்லும்வழியில் ஒரு வேளை நாம் செல்லும் வாகனம் பழுதாகினால்அதற்கு தேவையான உபகரணங்களையும் முன்னெச்சரிக்கையாக நம்மிடமே கொடுத்தனுப்புவார்கள் .
வாகனங்களைவாடகைக்கு எடுத்துக்கொள்ள நம்மிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்க இன்னர் லைன்பர்மிட் (Inner Line Permit) என்னும் படிவத்தை மட்டும் நாம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
இவை இரண்டுமட்டுமே அங்கு நாம் சுற்றுலா மேற்கொள்ள தேவையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.நமக்கு பிடித்த பைக்கைஎடுத்துக்கொண்டு கண்கவர் இடங்களை சுற்றிப்பார்ப்போம் .
இதுபோன்ற இடங்களில் சுற்றுலா பயணம்மேற்கொள்ளுவது வேற லெவல் சுற்றுலாவாக இருக்கும்.





