இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி:

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி

இயல்பாகவே நமக்கு சிலவற்றை  பற்றி ஆழமாக  அறிந்து கொள்வதில்  ஆர்வம் அதிகம். அதிலும் மற்றவர்களுடைய ரகசியங்களை தெரிந்துகொள்வதில் சொல்லவே வேண்டாம்.

அதிக வேகத்துடனும், அதிக ஈடுபாடுடன் வேலைசெய்வோம். ரகசியம் என்பது இடத்தை பொறுத்து மாறுபடும். இடத்திற்க்கு ஏற்றார் போல் நம்முடைய எண்ணங்களும் செயல்பாடுகளும்  மாறும்.

எடுத்துக்காட்டாக ஒரு கோவிலுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம், அப்பொழுது நம்முடைய மனம் தானாகவே ஆன்மிகம் சார்ந்த சிந்தனைகளையும், அதற்கான செயல்முறைகளையும் சார்ந்து  இருக்கும்.

தனிமனித ரகசியம் எனில் அவருடைய பணி, ஊதியம், காதல் என சிலவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம் தென்படும். இதுவே ஒரு பொழுதுப்போக்கு நிறைந்த இடத்திற்க்கு செல்வதாக வைத்துக்கொள்ளலாம்.

பொழுதுபோக்குகளில்  ஓவியம் வரைதல், கைவினை பொருள்கள் தயாரிப்பது, உடற்பயற்சி மேற்கொள்ளுதல், இசையை கேட்பது, நடனம் ஆடுதல், விளையாடுதல், புத்தகங்கள் வாசிப்பது என பல உண்டு.

அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்ப நம்முடைய எண்ணங்களும் செயல்களும் மாறும்.

 அதேபோல் சிலர் பயணம் மேற்கொள்ளும்பொழுது அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அங்குள்ள கலாச்சாரம், கோவில்கள், கடற்கரைகள் என பலவற்றை ரசித்து அவற்றை ஆராயவேண்டும் என நினைப்பதுண்டு.

அகழ்வாராய்ச்சிகளில் பழங்கால பொருள்கள் கண்டெடுக்கும் செய்திகளை கேட்கும்பொழுது நம்மை அறியாமலே ஆழ்மனம் இதன் உண்மை ரகசியங்களை தெரிந்துகொள்ள துடிக்கும்.

இவ்வாறு பல இடங்களில், பல சூழ்நிலைகளில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை பற்றி அலசுவதே பலரின் வேலையாக இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

நானும் இதுபோல சுற்றுலா சென்ற இடங்களில் மறைந்திருக்கும் ரகசியங்களை காணொளி வழியாக மக்களுக்கு எடுத்துரைக்க விரும்பினேன். அதற்காக தற்பொழுது நாம் சுற்றுலா சென்ற இடம் தான் “இலங்கை “.

இலங்கை :

இலங்கையில் மறைக்கப்பட்ட பல புதையல்களை தேடி தேடி ரசிக்க தொடங்கினேன். இலங்கை என்றாலே ஈழம் தமிழர்களும் அங்கு

 நடந்த போர்களும் தான் நினைவிற்க்கு வரும். இலங்கை தமிழர்களுக்கும் நமக்கு எதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாய் போன்ற ஒரு உணர்வை நம்முள் ஏற்படுத்துகிறது.

ஸ்ரீலங்கா ,இலங்கை, சிலோன் என பல பெயர்களை கொண்ட இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம்.

இலங்கையை பொருத்தமட்டில் இயற்கை அழகு ,இலங்கை மக்களின் உள்நாட்டு  கலாச்சாரம்,  பலநூற்றாண்டுகளாக பார்வையாளர்களை ஈர்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், இடிபாடுகளில் சிக்கி சிதைந்த கட்டிடங்கள், அழகிய கடற்கரைகள், ஆர்பரித்துக்கொட்டும் நீர்விழ்ச்சிகள்  என பல கண்கவர்  இடங்களை கொண்டுள்ளது.

இலங்கையில் பல உலக பாரம்பரிய சின்னங்களும், உலகை வியக்க வைக்கும் அதிசய கட்டிட அமைப்பும் உண்டு.

தமிழகத்திற்கு ஊட்டி, கொடைக்கானல் போல இலங்கையின் ஊட்டி நுவரெலியா, வர்த்தக மையமான கொழும்பு, பசுமை சொர்கமான இலங்கை கண்டி, உலகத்திலே மிக உயரமான இடத்தில் ரயில் பயணம், யாழ்ப்பாண சுற்றுலா, இலங்கையின் ஆதிவாசிகளான வேதா மக்களுடன் ஒருநாள் என என்னுடைய இந்த சிலோன் பயணம் மேலும் இலங்கையை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டியது.

அதே துடிப்புடன் மேலும் இலங்கையின் மற்றொரு பொக்கிஷமான “ரத்தினபுரி” பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் என்னை இழுத்து .

 கொழும்பில் ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்த பிறகு, அடுத்த இலங்கையில் உள்ள முக்கியமான நகரத்தை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டோம்.

நாங்கள் சுற்றுலா சென்ற நேரம் மூன்று நாட்கள் இலங்கையில் விடுமுறை. போகும் வழியெங்கிலும் சாப்பாடு, ஐஸ், ஜூஸ் என சில உணவு பொருள்களை இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தனர்.

நாங்கள் சென்ற காரும் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு சிலர் அருந்துவதற்காக தேங்காய் ஓட்டில் தேனீரும், ஒரு வகையான இனிப்பு பலகாரத்தையும் எங்களுக்கு கொடுத்தனர்.

தேனீர் வழங்கியவரை என்ன விசேஷம் என கேட்டதற்கு இன்று “பெருநாள்” விமர்சியாக இலங்கையில் கொண்டாடப்படும் திருவிழா.

அதாவது புத்தரின் பிறந்தநாள் தான் இலங்கையில் பெருநாளாக கொண்டாடப்படுகிறது என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.  அதனால் தான் வழியில் உள்ள புத்தர்கோவில்கள் தோரணைகளோடு  நன்கு அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாகவும் அழகாகவும் காட்சியளித்தது .

சிறிது தூரத்தை கடந்திருப்போம். செல்லும் வழியில் ஒரு இடத்தில் நம்முடைய கார் நின்றது. துரியன் பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

பல வெளிநாட்டு சுற்றுலாவில் துரியன் பழத்தை பார்த்ததுண்டு ஆனால் சுவைத்ததில்லை. இலங்கையில் இப்பழத்தை சுவைத்து பார்க்க முடிவெடுத்தேன்.

நானும் என்னுடன் சேர்ந்து சில சுற்றுலா நண்பர்களும் இந்த பழத்தை வாங்கி சுவைக்க ஆரம்பித்தோம்.

பழத்தின் வாசனை ஒரு கெட்ட வாடைபோல இருந்தாலும், அதன் தோற்றம்  பலாப்பழம் போல சுளையாக (சதையுடன் )காணப்படும்.

பழத்தின் சைஸ் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறைந்தபட்ச கட்டணமாக ஒரு பழத்திற்கு 500,600 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்டது.

கொழும்பு டூ ரத்தினபுரி :

கொழும்பிலிருந்து பாதைகள் வழியாக சிலோனில்  உள்ள ரத்தினபுரியை அடைந்தோம்.

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து தென்கிழக்கே தரை மார்க்கமாக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் தான் ரத்தினபுரி உள்ளது .

காரிலிருந்து ரத்தினபுரிக்கு செல்ல பயண நேரம்  2 மணி முதல் 3 மணி வரை. சுருக்கமாக சொன்னால் கொழும்பு டூ  அவிசாவளை டூ  ரத்தினபுரி சாலை.

ஒருவேளை பேருந்தில் பயணிக்க விரும்பினால் கொழும்பு மத்திய பேருந்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

பேருந்தை பொறுத்தவரையில் சாதாரண பேருந்து மற்றும் குளிரூட்டும் பேருந்து இரண்டுமே உள்ளது. பேருந்தில் செல்ல குறைந்தபட்சமாக  மூன்று முதல் நான்கு மணி நேரம் தேவைப்படும்.

ரத்தினங்களின் நகரம் (ரத்தினங்களின் தீவு):

இலங்கையில் உள்ள சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ளது  ரத்தினபுரி (இரத்தினபுரா ) நகரம்.  இது ஒரு துடிப்பான நகரம்.

இலங்கை ரத்தினக்கற்கள் வர்த்தகத்தின் பாரம்பரிய மையமாக கருதப்படுகிறது.ரத்தினபுரா என்றாலே ரத்தினக்கற்கள் தான் நம் நினைவிற்க்கு வரும்.

அவ்வளவு புகழ்வாய்ந்தது இலங்கையில் உள்ள ரத்தினக்கற்கள். இதன் காரணமாக தான் இரத்தினபுரி  “இரத்தின சுரங்கம் ” “இரத்தினங்களின் நகரம்” என்று  அழைக்கப்படுகிறது  .

உலகின் மிகசிறந்த இரத்தின கற்களை உற்பத்தி செய்யும் இடமாக நமது இலங்கை உள்ளது. கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளாக இலங்கையில்  உள்ள ரத்தினாபுரா  இரத்தின கற்கள் வெட்டப்படும் தொழிலுக்கு பிரபலமானது.

உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களில்  ரத்தினக்கற்கள் பார்வைக்காக வைப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் இலங்கையில் உள்ள ரத்தினபுரியின் ரத்தினக்கற்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இரத்தினபுரியில் விலைமதிப்பற்ற  மற்றும் விலக்குறைந்த கற்களும் காணப்படுகிறது. இதில் சபையர்கள் என்பது ஒரு வகை உயர்ரக கற்கள் மற்றும் விலைமதிப்பற்றது.

இவ்வறியவகை  கல்லின்  ஒப்பிடமுடியாத அழகு பற்றி சொல்லிட வார்த்தைகளே இருக்காது. இவற்றின் கொள்ளைகொள்ளும் அழகு தான் வெளிநாட்டு வியாபாரிகளை அதிகளவில் ஈர்க்கிறது .

சபையார் என்பது நீலநிற கற்(நீலக்கல்)களை கொண்டது. அதேபோல   மாணிக்கங்கள் , கார்னெட்டுகள், நிலவுக்கற்கள், செவந்திகள், பூனைக்கண்கள், அலெக்ஸாண்ட்ராய்ட்டுகள், சீர்கான்கள் போன்றவை சற்று  விலைகுறைந்த இரத்தினவகையை சார்ந்தது.

இலங்கையின் முக்கிய தொழில்

“இரத்தினக்கல் அகழாய்வு” ஒன்று என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிகம் படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரத்தினசுரங்கங்களுக்கு சென்று இரத்தின கற்கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது, பின்பு இரத்தின கற்கள் எப்படி மெருகேற்றப்படுகிறது போன்ற அனைத்தையும் இங்கு நேரடியாக பார்க்கமுடியும்.

நாங்களும் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட போது ரத்தினங்களின் நகரமான ரத்தினபுரிக்கு சென்றோம்.

அங்கு சுற்றுலா வழிக்காட்டி ஒருவரின் துணையோடு, அவருக்கு தெரிந்த ஒருவரின் நிலத்தில் ரத்தினக்கல் வெட்டியெடுக்கும் முறையை பார்க்க கிளம்பிவிட்டோம்.

ரத்தினபுரியை சுற்றிலும்  பார்க்கும் இடமெல்லாம் சுரங்கங்கள் ஆங்காங்கே  தோண்டிய வண்ணமாக இருந்தது. சுரங்கங்கள் மூலமாக ரத்தினக்கற்கள்  எடுக்கப்படும் முறையை வெளிநாட்டினர் பார்ப்பதற்கு அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பல சிரமங்களை தாண்டித்தான் நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

பல எதிர்பார்ப்புகளோடு சுரங்கம் தோண்டும் இடத்தை அடைந்தோம். சுரங்கத்தின் அருகில் செல்ல செல்ல ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

இலங்கையில் தற்பொழுது பாரம்பரிய முறை மற்றும் நவீன முறை என இருமுறைகளில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது.

பாரம்பரிய முறை என்பது மனிதர்களை கொண்டு மண்வெட்டிகள், கூடைகள், சல்லடைகள் போன்றவற்றை பயன்படுத்தி  தோண்டப்படும் சுரங்கம்  முறை. நவீன முறை என்பது கனரக வாகனங்களான ஜேசிபி போன்றவற்றை பயன்படுத்தி பெரியளவில் தோண்டப்படும் சுரங்கம்.

நாம் இதில் பழங்கால சுரங்கமுறையான பாரம்பரிய முறையை பயன்படுத்தி எவ்வாறு ரத்தினக்கற்கள் வெட்டியெடுக்கப்படுகிறது என்பதை தான் நேரடியாக பார்க்கப்போகிறோம்.

விலைமதிப்பில்லாத ரத்தினக்கற்களை பிரித்தெடுக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள்

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி

1.குழி சுரங்கம் (திறந்த குழி  சுரங்கம் )- Pit Mining or Open Pit Mining

2.ஆற்றங்கரை சுரங்கம் (வண்டல் சுரங்கம் ) – Riverbed Mining or Alluvial Mining

3.சுரங்கப்பாதை – Tunneling

4.நிதி தூர்வாருதல் – River Dredging

5.மேலோட்டமான சுரங்கம் – Surface Mining or Shallow Mining

6.பாரம்பரிய சுரங்கம் (கைவினை சுரங்கம்) – Traditional Mining or Artisanal Mining

ஆழமாக குழிகள்

இதில் நாம் நேரில் சென்று பார்த்த முறை பாரம்பரிய சுரங்க முறை.  எளிய கருவிகளை பயன்படுத்தி செய்யப்படும் சிறிய அளவிலான முறை.

மண்வெட்டிகள்,குடைகள் மற்றும் சல்லடைகள் போன்றவற்றை பயன்படுத்தி தனிப்பட்ட சுரங்க தொழிலாளர்களால் தோண்டப்படும் குழிபோன்ற சுரங்கம்.

திறந்த வெளியில் தோண்டப்படும் சுரங்கமானது குறைந்தது 10 மீட்டர் முதல் 20 மீட்டர்கள் வரை ஆழமாக குழிகள் தோண்டப்படுகின்றன. இது பல அடுக்குகளாக தோண்டப்படும்.

ஒவ்வொவேறு அடுக்குகளும் தனித்து தெரியும் அளவிற்க்கு மரக்குச்சிகளை தடுப்புபோல வைத்திருப்பார்கள். இந்த மரக்குச்சிகளுக்கு நடுவே உள்ள இடங்களை அங்குள்ள சில இலைகள் ,தழைகள் கொண்டு இடைவெளிகளை நிரப்பியிருப்பார்கள்.

குழியின் ஆழம் உள்ளே செல்ல செல்ல மூச்சுவிடுவதில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். நானும் அந்த குழியில் இறங்கி அவர்கள் எப்படி சுரங்கத்தை அமைக்கிறார்கள் மற்றும்  ரத்தினக்கற்களை பிரித்தெடுக்கிறார்கள் என்பதை சற்று நேரம் வேடிக்கை பார்த்தேன்.

அடுக்கடுக்காக காட்சியளிக்கும் இந்த குழியிலிருந்து மண் அங்கு வேலை செய்யும் ஆட்கள் மூலமாக சிறு சிறு கூடைகளில்  வெளியேற்றப்படுகிறது.

ஆழம் போக போக தண்ணீர் லேசாக விட்டு மண்ணை சற்று லேசாக்கிய பின்பு தான் குழி தோண்டப்படுகிறது. அதோடு வெளியேற்றப்படும் மண் நீரைக்கொண்டு வெகுநேரமாக அலசபடுகிறது .

பின்பு ஒரு அந்த கூடையில்  சிறு மற்றும் பெரிய வடிவில் கற்கள் கடைசியாக படியும். படிந்துள்ள கற்களை தனியாக கொட்டி பிரித்தெடுக்கபடுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கும்பொழுது தான் ரத்தினக்கற்கள் ரகங்கள் வாரியாக வரிசைப்படுத்தப்படுகிறது. ரகத்தை பொறுத்து விலைகள் மாறும்.

இதுபோன்ற சுரங்ககளிலிருந்து சபையர்கள், மாணிக்கங்கள், கார்னெட்டுகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் இதிலிருந்து கிடைக்கிறது.

சில நேரங்களில் சுரங்கம் அதிக ஆழமாக தோண்டும்போது மண்சரிவு ஏற்பட்டு உயிர்போகும் அபாயங்களும்  இதில் ஏற்படும். அதேபோல குழுக்களாக வேலை செய்யும் இவர்களுக்கு குறிப்பிட்ட சம்பளம் கிடையாது. அகழ்ந்து எடுக்கப்படும் இரத்தின கற்களை விற்பனை செய்து

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இவர்கள் ஒவ்வொருவரும் சரிபாதியாக பகிர்ந்துகொள்கின்றனர். இவ்வாறு கிடைக்கும் பணத்தைக்கொண்டுதான் இவர்களுடைய குடும்பம் இருப்பதாக அங்குள்ள தொழிலார்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற தொழில்களில் சில நேரங்களில் அளவற்ற வருமானமும் சில நேரங்களில் மிக குறைந்த வருமானமும் எங்களுக்கு கிடைக்கும் என அங்குள்ள தொழிலாளர்கள் கூறினார்கள்.

வண்ண கற்கள்

கிடைத்த கற்களை நகை செய்யும் இடத்தில் கொடுத்து கற்கள் தங்களுக்கு தேவையான வடிவத்தில் செதுக்கப்படுகிறது. பின்பு செதுக்கப்பட்ட ரத்தினக்கற்கள் ஆபரணங்களாக செய்யப்படுகிறது.

ஆபரணங்களை பொறுத்தவரையில் வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள், கம்மல், கழுத்து செயின், நெக்ல்ஸ் என விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது.

பிறகு நானும் என்னுடன் வந்த நண்பர்களும்  சிறிது நேரம் அங்கு எப்படி பிரித்தெடுக்கிறார்கள் என்பதை மேலோட்டமாக தெரிந்துகொண்டோம்.

ஒரு சிறு ஊற்று இயற்கையாகவே அங்குள்ள நிலத்தில் பாய்ந்தோடுகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்தி சமையல் செய்வதற்க்கு, குடிப்பதற்க்கு என அத்திவசியா தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

அங்குள்ள எளிமையான சமையலறை மேலும் நம்மை கவர்கிறது.

சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களே சமைத்து சாப்பிடும் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.

நாங்கள் பார்க்கும்பொழுது ஒரு நபர் மதிய உணவை தயார்செய்து கொண்டிருந்தார். சிவப்பு அரிசியை கொண்டு வடிக்கப்பட்ட  சாதம், பலாகாயை கொண்டு சாம்பார், கோஸ் பொரியல் என மதிய உணவு தயாராகிக்கொண்டிருந்தது.

உணவு உண்ட பின்பு வேலை செய்யும் களைப்பு தெரியாமல் இருக்க சிறிது நேரம் ஓய்வெடுக்கின்றனர். அதன்பின் மறுபடியும் அவர்களுடைய வேலை தொடங்குகிறது.

இந்த சுரங்கத்தில் தமிழ் பேசத்தெரிந்த தொழிலாளர் ஒருவர் நம்முடன் பேசமுனைந்தார். அவருடன் பேசியதும் என் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது.

ரத்தினக்கற்கள் வெட்டியெடுக்கும் முறைபற்றி கொஞ்சம் விளக்கமாக கூற ஆரம்பித்தார். தமிழ் கொஞ்சம் சிங்களம் கொஞ்சம்  கலந்த கலவையாக அழகாக பேசினார்.

அப்போதுதான் தான் தெரிந்தது  மரப்பலகையை கொண்டு பல அடுக்குகளாக நூறடிக்கு அதிகமான ஆழம் சுரங்கத்தை கைகளை பயன்படுத்தி தோண்டமுடியும் என்று.

நாம் பார்க்கும் இந்த முறைதான் ரத்தினபுரியின் பாரம்பரிய முறை . இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ரத்தினபுரி

 இலங்கைக்கு சென்று அங்குள்ள ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்தபிறகு,ரத்தினபுரியில் மிகவும் பிரபலமான ரத்தினக்கற்கள் தோண்டியெடுக்கும் முறையை நேரில் சென்று பார்ப்பதற்க்கு அங்குள்ள இலங்கை நண்பர் ஒருவரும், என்னுடைய நெருங்கிய  தோழர் அப்பாஸ் ஐயா அவர்களுக்கும், அங்குள்ள தொழிலார்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம்.

பின்பு அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு சுற்றுலா இடத்தை காண கிளம்பிவிட்டோம். இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாக இருந்தது.

இலங்கையில் உள்ள ரத்தினபுரிக்கு சென்று ரத்தினக்கற்கள் எப்படி நிலத்தடியில்  தோண்டி எடுக்கப்படுகிறது,அதை எப்படி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது,

அதன் பின்பு கிடைத்த இரத்தின கற்கள் எப்படி பளபளப்பாக மாற்றப்படுகிறது என பல தகவல்களை இந்த கட்டுரை வழியாக என்னுடைய அறிவுத்திறனுக்கு எட்டியது போல பகிர்ந்துள்ளேன்.

மீண்டும் அடுத்த கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்.நன்றி.வணக்கம். இலங்கை கண்டி சுற்றுலா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top