இந்திய பெருங்கடலின் முத்து இலங்கை சுற்றுலா:-

இந்திய பெருங்கடலின் முத்து இலங்கை சுற்றுலா
இந்திய பெருங்கடலின் முத்து இலங்கை சுற்றுலா

இலங்கை என்பது கண்ணீர்த்துளி வடிவத்தில் காணப்படும்  சிறிய அழகிய தீவு. கிட்டத்தட்ட அறுபத்தைந்தாயிரம் சதுர கிலோமீட்டர் அளவை கொண்டது.

பனிமூடிய மலைப்பகுதிகள் , சூரியனை முத்தமிடும் கடற்கரைகள்,பழங்கால கோவில்கள், நவீன நகரங்கள், வளமான கலாச்சாரம், தமிழர்களின் பாரம்பரியம் , ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என இங்கு நம்பமுடியாத அளவிற்க்கு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்.

இதனால் தான் இலங்கையை இந்திய பெருங்கடலின் முத்து  என்றும் அழைக்கப்படுகிறது.

இலங்கையின் மற்றொரு சிறப்பு விருந்தோம்பல் , சுற்றுலாவிற்கு வருகை தரும் மக்களிடத்தில் அன்புடனும்,அக்கறையுடன் அனுசரிக்கும் விதம் நம்மை மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவர்கள் மக்களிடத்தில் அணுகும் விதம் வரும் சுற்றுலாப்பயணிகளை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

இலங்கையும் அதன் பெயர்களும் :

இலங்கையை பொறுத்தவரையில் ஈழம், சிலோன், ஸ்ரீலங்கா என பல பெயர்கள் உண்டு. அதேபோல ஸ்ரீலங்கா ஒரு குட்டி தீவு என்றழைக்கப்படுகிறது .

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று தான் இலங்கை. இலங்கையை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம், தம்புல்லா, சிகிரியா,தி ரிகோணமலை,கொழும்பு, எல்ல, கண்டி, நுவரெலியா, ஆடம்ஸ் சிகரம், ராமர் பாலம் மற்றும் பல கண்கவர் சுற்றுலா தளங்கள் உள்ளன.

ஸ்ரீரிலங்காவில் உள்ள நம்முடைய சொந்தங்கள் பேசும் மொழிகளில் முக்கியமானது சிங்களம் மற்றும் நம் தாய்மொழியான தமிழ் மொழி.

நம்முடைய தமிழ் உறவுகள்  இருக்கும் நாடான இலங்கை தேசத்திற்கு சுற்றுலா சென்று   இலங்கையின் இயற்கை அழகையும், கலாச்சாரத்தையும், புராணத்தை எடுத்துக்கூறும் கோவில்களையும், மனதை மயக்கும் கடற்கரையையும், புத்த மதத்தை பறைசாற்றும் புத்தகோவில்களையும்,  தேசிய பூங்காக்களையும் என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு சொர்க்கபூமி  இலங்கையை சுற்றிப்பார்க்கலாம் வாங்க.

இலங்கை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு நடத்த போர்களும், பொருளாதார நெருக்கடியும் தான் .

இது இலங்கையின் ஒரு பக்கமாக இருந்தாலும் அதனுடைய மறுபக்கம் கடல், காடு, மலை, அருவி, ஆறு , தேயிலை தோட்டங்கள், வரலாற்று சிறப்புமிக்க கோவில் என   கடவுளின் சொர்க்கபூமி இலங்கை என்று சொல்லும் அளவுக்கு அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு நாடு இலங்கை.

இலங்கைக்கு சுற்றுலா செல்ல சிறந்த மாதமாக டிசம்பர் முதல் ஏப்ரல் வரை காலநிலை ஏதுவாக இருக்கும். ஒரு மணி நேர விமான பயணத்தில் நாம் இலங்கையை வந்தடையமுடியும்.

இலங்கையின் பணமதிப்பு :

பணத்தின் மதிப்பானது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். 2022 இல் இந்தியன் 1 ரூபாய்க்கு இலங்கையில் 3 ரூபாய் 49 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பணமதிப்பானது மாறிக்கொண்டே இருக்கும்.

தற்போது அதாவது 2023 இல் இந்தியாவின் 1 ரூபாய் கொடுத்தால் இலங்கையின் பணமதிப்பில் 3 ரூபாய்  74 பைசா கொடுப்பார்கள்.

இந்திய பணமதிப்பில் 30000 ரூபாய்  இருந்தால் இலங்கை பணமதிப்பில் 100000 ரூபாய் இந்த பணமானது இலங்கையை சுற்றிப்பார்க்க போதுமானதாக இருக்கும்.

 இலங்கை:  விமானச்சீட்டு முன்பதிவு, விசா

இலங்கை சுற்றுலா செல்ல முடிவு செய்தவுடன் நாம் முதலில் செய்யவேண்டியது விமான பயணசீட்டை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இலங்கை சென்றுவர  மொத்தமாக 15000, 20000 என விமான சேவை நிறுவனத்தை பொறுத்தது மாறுபடும்.

இலங்கைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்த நாம் முதலில் குறைந்தபட்ச பட்ஜெட் போட்டுவைத்துக்கொள்ள வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களிலிருந்து இலங்கைக்கு நேரடியாக விமான சேவை உள்ளது.

இலங்கைக்கு ஸ்ரீலங்கன் விமானம், ஸ்பைஸி ஜெட் விமானம், இண்டி கோ, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் இயக்கப்படுகின்றன ,  விமான பயணத்தின் தொகையை அதனுடை Website சென்று  சரிபார்க்கவேண்டும், இலங்கைக்கு சென்று வர குறைந்தது 5000 முதல் 10000 வரை தேவைப்படும்.

சரிபார்த்தபின்  பயணசீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நாம் கவனிக்க வேண்டியது அயல்நாட்டு பயணசீட்டு என்று சொல்லக்கூடிய விசா,ETA என்று சொல்லக்கூடிய (எலக்ட்ரானிக் டிரவல்   ஆதரைசேசன்) போன்றவற்றை முன்கூட்டியே பதிவுசெய்து வாங்கிய பிறகே இலங்கைக்கு நம் பயணத்தை தொடங்க வேண்டும்.

கொழும்பு விமான நிலையத்திலிருந்து கிளம்பி முன்னேசுவரம் அல்லது முன்னேச்சரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோவிலுக்கு சென்றோம்.

பின்பு தம்புல என்னுமிடத்தில் தங்கி மறுநாள் சங்குப்பிட்டிப் பாலம் வழியாக யாழ்ப்பாணம் வந்தேன் .யாழ்ப்பாணத்தில் சில பிரபலமான சுற்றுலாத்தலங்களை சென்று ரசித்தேன் .அதோடு அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஒரு நாள் தங்கினேன்.

அடுத்ததாக முல்லைத்தீவு வழியாக போர் நடந்த இடத்தை அடைந்தேன் .பின்பு திரிகோணமலை மற்றும் கண்டியில் உள்ள சில சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வழிபட்டேன் .

பின்புவனவிலங்கு சரணாலயத்தில் ஜீப் சஃபாரி , சிகிரியா வழியாக கண்டி வந்து இலங்கை தமிழர்களின் பாரம்பரிய நடனம்,ஒரு சில வீயூ பாயிண்ட்,ரத்தினக்கற்களை எப்படி ஆபரணங்களாக செய்கின்றனர் என பார்த்தேன் .

இலங்கையில் உள்ளமூலிகை பூங்காவிற்கு சென்று அங்குள்ளவற்றை ஆராய்ந்தேன் .அடுத்ததாக கொழும்பு சிட்டி டூர் என இதுதான் நம்முடைய இலங்கை சுற்றுலா பிளான் .

ஆனால் மேலும் இலங்கையில் உள்ள பல இடங்களை பற்றி தெரிந்துகொள்ள முடிவெடுத்தேன்.மேலும் ஐந்து நாட்கள் இலங்கையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க முனைத்தேன் .

முதலில் சென்ற இடம் ரத்தினபுரியில் ரத்தினக்கற்கள் எப்படி சுரங்கத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பதை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு ஏற்பட்டது.

பின்பு அப்புத்தளை வழியாக செல்லும்பொழுது பல நிர்விச்சிகள்,அதிசம் பங்களா,சீதா அம்மா கோவில் ,ஒன்பது வளைவு பாலம்,ராவண எல்லா நீர்விழ்ச்சி, என அப்புத்தளையில் தங்கி அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்தேன்.

பின்பு ஸ்ரீலங்காவில் உள்ள தம்பான என்னும் இடத்தில் உள்ள ஆதிவாசிகள் வசிக்கும் இடத்திற்க்கு சென்று பழங்குடியின மக்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக சென்றேன் .

இலங்கை ஆதிவாசிகள் :

உலகம் பல தொழில்நுட்பங்களில் என்னதான் சாதனைகளை படைத்தாலும்,இன்றளவிலும் சில இடங்களில் உள்ள மக்களுடைய பழக்கவழக்கங்கள் மாறுபடவில்லை.

பழங்கால முன்னோர்களுடைய வழிமுறைகளை இன்றளவிலும் கடைபிடிப்பவர்கள் உண்டு.அவர்கள் தான் ஆதிவாசிகள்,காட்டுவாசிகள்,காட்டுமக்கள்,பழங்குடியின மக்கள்,வேடர்கள் என பல பெயர்களை கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு வேதா என்று பெயர்.ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் சமூகத்தினர் பொதுவாக வேடர்கள் என்றழைப்படுகின்றனர்.

வேதா என்பது சம்ஸ்கிருத வார்த்தையில்வேட்டை என்று பொருள். இலங்கையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வேதா என பெயர் வைத்து அழைத்தனர்.

ஆதிவாசிகள் முதலில் அடர்ந்த காடுகளில் உள்ள குகைகளில் உணவு பொருள்களை தேடி வேட்டையாடுபவர்களாகவும் பெரும்பாலானோர் வாழ்ந்திருக்கின்றனர்.

இவர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு வகைகள்,தேன்,பழங்கள்,கொட்டைகள் என பலவற்றை சேகரிப்பவர்களாகவும்
இருந்துள்ளனர்.

அதேபோல மாமிசத்திற்காக சில விலங்குகளை வேட்டையாடி,வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை தீயிலிட்டு சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்காக முயல்,ஆமை,காட்டுப்பன்றி போன்றவற்றின் இறைச்சியை உணவுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

 இலங்கையில் உள்ள சிறப்பு மிக்க சுற்றுலா இடங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top