கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் இலங்கை


>>>>>>>>>>மனிதர்களில் பலவிதம் குதிரைக்கு கடிவாளம் காட்டியதை போல எதையும் கவனிக்காமல் பாதையை மட்டும் பார்த்து செல்லும் சிலர், அங்குள்ளவற்றை பார்த்து ரசித்துவிட்டு செல்பவர்கள் சிலர், அங்குள்ள ஒவ்வொன்றையும் ஏன்?, எதற்கு?, எப்படி?

என தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கும் சிலர். இன்று நம்முடைய தகவலுக்கும், மேலே குறிப்பிட்ட மனிதர்களுக்கும் தொடர்பு உள்ளது.

பொதுவாக கோவில்கள் கட்டுவதென்றால் எங்குவேண்டுமென்றாலும் காட்டப்படுவதில்லை. அதற்கென பல அம்சங்கள் உள்ளன. அவை சரியாக இருந்தால் மட்டுமே நமது முன்னோர்கள் அந்த இடத்தில் கோவில்களை காட்டுவார்கள்.

இன்று நாம் பார்க்கும்  சிறப்புவாய்ந்த சிவபெருமான் திருக்கோவில் இலக்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரர் திருக்கோவில்.

யாழ்ப்பாணம் இரண்டுபக்கம் தண்ணீர் நடுவே போடப்பட்டுள்ள சாலை கண்ணுக்கு விருந்தளிக்கும் சங்குப்பெட்டி பாலம், வழியெங்கிலும் காணப்படும் பனைமரம், பனை பொருட்களால் செய்யப்படும் மதிப்பு கூட்டு பொருட்கள்,

தமிழில் பெயர்ப்பலகை, பாரதியார் சிலை என இவற்றை அடுத்தடுத்து பார்க்கும்போது நாம் வாழ்வியலோடு தொடர்புடையது என்ற எண்ணம் நமக்குள் தோன்றும்.

தமிழர்கள் இருக்கும் இடங்கள் என்பதற்கு மற்றொரு சான்றுதான்  கோவில்கள். யாழ்ப்பாணத்தின் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  இந்த கீரிமலை நகுலேஸ்வரர் கோவில்  கடற்கரையில் உள்ள

ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. வடக்கே உள்ள பஞ்சஈஸ்வரங்களில் முதன்மையானது கீரிமலை நகுலேஸ்வரம்.

இலங்கை சிவன் பூமி என திருமூலர் கூறியுள்ளார் . அதற்கு காரணம் சிவ தொண்டர்களும், இங்குள்ள சிவாலயங்களும்.  மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் , கோவிலின் உள்ள செல்லும் ஆண்கள் மேலங்கியுடன் செல்லக்கூடாது.

கோவிலின் அருகில் கடலை ஒட்டி கட்டப்பட்டுள்ள நவீன நீச்சல் குளத்தை போல் உள்ள நன்னீர் குளம். கடற்கரையில் கட்டப்பட்டிருந்தாலும் இந்த தண்ணீர் உப்பு நீர் அல்ல இது நன்னீர் என்று கூறுகின்றனர் .

இதில் குளித்ததால் பலருக்கு விமோச்சனம் கிடைத்தது என புராண கதைகள் கூறுகின்றன. இது கதை அல்ல நிஜம் என்பதுபோல அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் மெய்ப்பிக்கின்றன.

முனிவர் ஒருவர் கீரி முகம் பெற்று வாழ்ந்துவந்ததாகவும், இந்த நன்னீரில் ஒரு மண்டலம் குளித்து சிவபெருமானை பூஜித்து விமோச்சனம் அடைந்து முகம் மாறியதாக கூறுகின்றனர்.

அதே போன்று  சோழ இளவரசி குதிரை முகம் இருந்ததாகம் நன்னீரில் குளித்ததால் மனிதமுகம் மாறியதாக கூறும் இந்த இடம் இங்கு குளித்தால் நல்லது  நடக்கும் என்ற மக்களின் நம்பிக்கைக்குரிய இடம்.

1800 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவாலயம் டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின் ஆட்சி செய்த போர்துகீசியர்களால் இடிக்கப்பட்டுள்ளது  . இடிக்கப்பட்ட சிலைகள்  கிணற்றில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆறுமுக நாவலர் முயற்சியால் கோவில் மீண்டும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாசி மாதம் 15 நாட்கள் சிவராத்திரி வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது.

கண்டக தீர்த்தம்:

நன்னீர் தீர்த்தத்திற்கு கண்டக தீர்த்தம் அல்லது கண்டகி தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

மோட்ச தீபம்:

அமாவாசை நாட்களில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் இங்கு அதிகளவில் மக்கள் செய்வைதை பார்க்க முடியும். அதற்கென தனியாக மடம் ஒன்று உள்ளது. இங்கு பித்ருக்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்து மோட்ச தீபம் ஏற்றுகின்றனர்.

நிலாவரை கிணறு:

இந்த சிவன் திருத்தலத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை நிலாவரை கிணறு என கூறுகின்றன. கிணற்றின் ஆழம் யாரும் அறியாததால், இதனுடைய ஆழத்தை நிலாவரை இருக்கும் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த கிணற்றுக்கு நிலாவரை கிணறு என பெயர் வந்ததாக கூறுகின்றனர். அதே போல் இதில் சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கிணற்றில் போடப்படும் ஒரு பொருள் நன்னீர் குளத்தில் எடுக்க முடியும் என்கின்றனர்.

ஒவ்வொரு கோவிலும் பல புராணக்கதைகளை கொண்டுள்ளது என்பது இலங்கையின் இந்த ஆன்மீக திருத்தலத்திலிருந்து நமக்கு புரிகின்றது. நினைத்தாலே முக்திகிடைக்கும் சிவபெருமானுடைய இந்த திருத்தலமும்,

குளத்தில் குளித்தாலே நல்லது நடக்கும் என்ற நன்னீர் குளமும், ஆழம் தெரியாத நிலாவரை கிணறு, கிணற்றில் இருக்கும் சுரங்க பாதை என பல சுவாரசிய தகவல்களை கொண்ட இந்த திருத்தலம் நாம் அறிந்தது ஒரு சிறுபகுதிமட்டுமே இன்னும் பல தகவல்கள் உள்ளது.

யாழ் பொதுநூலகம்:

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த நூலகம் யாழ் பொது சன  நூலகம் என்று அழைக்கப்படுகிறது.  யாழ் நூலகம் தெற்குஆசியாவின் மிகப்பெரிய நூலகம், இந்த நூலகத்தில் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களும்,

1800 களில் எழுதப்பட்ட  வரலாற்று சிறப்பு மிக்க ஓலை சுவடிகளும், நாளிதழிகளின்  சேமிப்புகளும் இருந்துள்ளது. 1933 ஆம் ஆண்டு செல்லப்பா என்பவரால் ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் படிப்படியான வளர்ச்சியால் 1959 ஆண்டு அப்போதைய முதல்வர் அல்பிரட் துரையப்பாவினால் திறந்துவைக்கப்பட்டது .

இலங்கை இனப்பிரச்சனையின் ஆரம்பமாக சிங்களர்களால் 1981 ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி இந்த நூலகம் எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்டது நூலகம் மட்டுமல்ல அங்கிருந்த தமிழ் மக்களின் வரலாறும் சேர்த்துதான்.

இலங்கை தமிழர்களுக்கு ஒரு பெரும் துயரம் இந்த நூலக எரிப்பு. நூலகம் எரிந்ததை பார்த்து உயிர் விட்டவர்களும்  உண்டு என்கிறது நூலக எரிப்பு சரித்திரத்தில்.

எறிந்த நூலகத்தை புதுப்பிக்கவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிதிகளும் திரட்டப்பட்டது.

 எரிக்கப்பட்டநூலகத்தின் முன்பகுதியை நினைவு சின்னமாகக்கப்பட்டது. 1984 ல்  ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட நூலகம் நவீனத்துவ

த்துடன் கணினி வசதிகளுடன் உள்ளது. சுற்றுலா செல்பவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்த இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முக்கியமான ஒன்று.

யாழ்ப்பாணம் கோட்டை :

இலங்கையின் ஒவ்வொரு சுற்றுலாத்தலமும் நம்மை வியப்பிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது என்றாலும் அடுத்ததடுத்த சுற்றுலாத்தலங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் கூட்டுகிறது.

பல வரலாறுகளை கொண்ட ஒவ்வொரு சுற்றுலாத்தலமும் வரும் தலைமுறையினருக்கு ஒரு பொக்கிஷம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்கவிருப்பது யாழ்ப்பாண கோட்டை.

போத்துக்கீசியர்களால் கட்டப்பட்ட யாழ்பானக்கோட்டை   400 வருட பழமையான கோட்டை, 1658 இல் ஒல்லாந்தர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகள் பயன்படுத்திய ஒல்லாந்தர் இக்கோட்டையில் பல மாற்றங்களை செய்து பயன்படுத்தினர்.

 யாழ்பானக்கோட்டை நான்கு பக்கமும் சமஅளவில் சதுரவடிவில் கடலை ஒட்டி கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையை சுற்றிலும் அகழிகள் உள்ளது. இந்த கோட்டையானது நட்சத்திர வடிவில் உள்ளது.

இதனை நட்சத்திர கோட்டை என்றும் கூறுகின்றனர். நுழைவு கட்டணத்தை செலுத்தி உள்ளே நுழைந்தால் 62 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோட்டையில் கிறிஸ்த்துவ ஆலயம் உள்ளதை பார்க்க முடியும்.

நான்கு பக்கமும் அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர். கோட்டையின் உள்பகுதியில் சிறைச்சாலை, ஆளுநர் மாளிகை, கிறிஸ்துவ ஆலயம், படைவீரர்களின் இருப்பிடமும்,

நிர்வாக மையம் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த யாழ்ப்பாண கோட்டை 1980 க்கு பின் உள்நாட்டு  போரின் போது ராணுவத்தளமாக இருந்துள்ளது. இலங்கையின் 9 தாவது சிறந்த சுற்றுலாதளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் இலங்கை

கடவுளின் விளையாட்டுகள் பல, ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் நமக்கு ஒரு உண்மை புலப்படும். இன்று நாம் பார்க்கப்படும் விளையாட்டு மாங்கனி பற்றியது.

மாங்கனி என்றவுடன் உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும் நம் எதை பற்றி பேச போகிறோம் எந்த கடவுளின் விளையாட்டை பற்றி பார்க்கப்போகிறோம் என்று.

மாங்கனி திருவிழா:

கடவுள் பார்வதி பரமசிவன்  மகன்களான விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் போட்டி ஒன்றை பெற்றோர்கள் வைக்கின்றனர். அதில் யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே

என்னிடம் உள்ள ஞானப்பழம் கிடைக்கும் என கூற, முருகப்பெருமான் உலகத்தை சுற்றிவர தொடங்கிவிட்டார். விநாயகர் தெளிவாக யோசித்து தந்தையிடம் சென்று அம்மையப்பன் தான் உலகம், உலகமே அம்மையப்பன் என்று புத்திசாலித்தனமாக ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார்.

முருகப்பெருமான் உலகத்தை சுற்றிவிட்டு வந்து ஞானப்பழத்தை கேட்கவே விநாயகர் பெற்றுக்கொண்டதை அறிந்து பெரும் கோவம் கொண்டு ஆண்டி உடையில் கோவித்துக்கொண்டு மலையின் மீது ஏறினர்.

இந்த திருவிழாவானது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்னும் இடத்தில் இன்றும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவிலின் வரலாறு:

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோவில்களில் முக்கியமானது நல்லூர் கந்தசாமி கோவில். தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை யாழ்ப்பாண ராச்சியத்தை ஆண்ட ஆரியசக்ரவர்திகள்  வம்சத்தின் முதலாவது  அரசனான கூழங்கைச் சக்ரவர்த்தியின் அமைச்சர்களில் ஒருவரான புவனேகவாகு என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டதென்று  வைபவமாலை என்னும் நூல் கூறுகிறது.

கோவிலை பற்றி பலரும் பலவாறு கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது உள்ள இந்த நல்லூர் கந்தசாமி கோவில் மூன்றாவதாக கட்டப்பட்டது என்கிறார்கள்.

இதற்கு முன் 2 இடங்களில் இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் அவைகள் இடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் இலங்கை

அழகு என்ற சொல்லுக்கு பொருள் “முருகன் “

காக்க  காக்க  கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்கத் தாக்க  தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட !

இன்றுமே குழந்தையாக பாவிக்கப்பட்டு வழிபாடும் முருகப்பெருமான்

கார்த்திகேயா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். வேலவன் என்றும் மயிலை வாகனமாக கொண்டதால் மயிலோன் என்றும் அழைக்கப்படும் முருகப்பெருமான் மக்கள் அனைவரையும் கனகவேல் காக்கட்டும்.

வேல்போன்ற வேலவனின் கண்கள் எப்போதும்  பார்த்துக்கொள்ளட்டும். நம்மைத் தாக்குகிற, முடங்கச்  செய்கின்ற தடைகளையெல்லாம் தாக்கட்டும். நம்மைப்  பார்க்க, பார்க்க, நம் பாவமெல்லாம் பொடிபடட்டும், தூள் தூளாகட்டும்!

சஷ்டியில் முருகக்கடவுளுக்கு எலுமிச்சை சாதம் நைவைத்தியம் செய்து செவ்வரளி மாலை  சார்த்தி வேண்டுவோம். வேண்டிய வரங்களைத்  தந்திடுவான் சக்திகுமரன்.

அழகு தெய்வமான முருகப்பெருமானுக்கு இந்தியாவில் மட்டுமல்ல மலேசியா பத்துமலை முருகர்கோவில், இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் என வெளிநாடுகளிலும் முருகப்பெருமானுக்கு ஆலயங்கள் உள்ளது.

கி.பி 1450 ஆண்டு கனகசூரியசிங்கையரியன்  வட இலங்கையை ஆட்சிசெய்தார் அப்போது தென் இலங்கையை ஆறாம் பராக்கிரமபாகு ஆட்சி செய்தார்.

தென் இலங்கையை ஆட்சிசெய்த ஆறாம் பராக்கிரமபாகு  தனது வளர்ப்பு மகனான சப்புமல் குமாரய பெரும் படையுடன் அனுப்பி வடஇலங்கையை கைப்பற்றிக்கொண்டார். இந்த படையெடுப்பின் போது தலைநகராக இருந்த நல்லூரின் கந்தசாமி கோவில் உட்பட பல கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

முருகப்பெருமான்

கி.பி 1450 முதல் 1467  யாழ்ப்பாண ராஜ்யத்தை ஸ்ரீ சங்க போதி புவனேகபாகு என்ற பெயரில் ஆட்சி செய்த  சப்புமல்குமார் மீண்டும் யாழ்ப்பாணத்தை புனரமைத்தார் அப்போது இடிக்கப்பட்ட நல்லூர் கந்தசாமி கோவிலை அரண்மனை

மற்றும் அரச மாளிகைகள் உள்ள கிருஸ்துவ தேவாலயம் உள்ள இடத்தில் இரண்டாவது முறையாக ஆகமவிதிப்படி சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்ப நல்லூர் கந்தசாமி கோவில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கோவில்.

கி.பி 1591 ஆண்டு மூன்றவது முறையாக யாழ்ப்பாணத்துக்கு  போத்துக்கீசியர்கள் படையெடுத்து  வந்தனர். பறங்கியர் படைக்கும் தமிழர் படைக்கும் போர் நடந்தது. பறங்கியர் படையினரால் கந்தசாமி கோவில் மீண்டும் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அந்த இடத்தில் கிறிஸ்த்தவ தேவாலயம் கட்டப்பட்டது.

இடிக்கப்பட்ட இந்த நல்லூர் கோவில் கற்களை மக்கள் வீடுகளில் வைத்து வழிபட்டனர். அத்துடன் அங்கு கிடைத்த வேல் , சிலைகள் போன்றவற்றை வைத்தும் மக்கள் வீட்டில் வழிபட்டனர்.

கி.பி 1734 -இல்  கிருஸ்துவ தேவாலயம் முன்பு வேல் ஒன்று வைத்து  கிருஷ்ணய்யர் சுப்பையர் என்பவரால் கந்த மடாலயம் அமைக்கப்பட்டு வேல் ஒன்று வைத்து வணங்கப்பட்டது.இங்கு கந்தபுராணமும் படிக்கப்பட்டுவந்தது. இது மூன்றாவது முறை அமைக்கப்பட்ட கோவில் ஆகும்.

பறங்கியரால் அழிக்கப்பட்ட கோவில்  மீண்டும்  அமைக்க ஒல்லாந்தர் காலத்தில்  அர்ச்சக சந்ததியினரான கிருஷ்ணய்யர் சுப்பையர் விண்பித்தார்.

ஒல்லாந்தர் பழைய கோவில் இருந்த இடத்திலேயே மீண்டும் கோவில் அமைக்க அனுமதி வழங்கினர்.1749 ஆண்டு கிருஷ்ணய்யர் சுப்பையர் என்ற அர்ச்சகரும், தொன்யுவான் மாப்பாணர் ஆகிய இருவரின் முயற்சியால் நான்காவது முறையாக கோவில் கட்டப்பட்டது.

மடாலயம் போல் இருந்த இந்த கோவிலை அகமவிதிப்படியும், சிற்ப சாஸ்திர கிரிகைக்கும் மாற்றியமைக்க வித்திட்டவர் ஸ்ரீல ஸ்ரீ ஆரம்பநாவலர் ஆவர். இவரின் நினைவாக ஆலயத்தின் முகப்பில் நாவலர் மணிமண்டம் தென்கிழக்கு திசையில் கட்டப்பட்டுள்ளது.

பல கோவில்களுக்கு முன்னோடியாக விளங்கும் நல்லூர் கந்தசாமி கோவில்  நேரம் தவறாது அனைத்து பூஜைகளும் சரியாக சரியான நேரத்தில் நடைபெறும்.

அரச குடும்பங்களை சார்ந்தவராக இருந்தாலும், உயர் பதவியினராக இருந்தாலும் யாருக்காகவும் பூஜையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. கந்தனை அலங்கார கந்தன் என்று அழைக்கின்றனர்.

ஆடி மாதத்தில் அமாவாசையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பித்து 25 நாட்கள் சிறப்பாக பிரமோற்சவம் நடைபெறும். கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் இலங்கை

நல்லூர் கோவிலின் சிறப்பு:

ஆண்கள் மேல் அங்கி ஏதும்யின்றியே ஆலயத்திற்குள் செல்லவேண்டும். கோவிலின் அர்ச்சனை சீட்டு இன்றுவரை 1 ரூபாய் மட்டுமே.

இந்த கோவிலின் முக்கிய சிறப்பாக மற்ற முருகப்பெருமான் கோவிலில் முருகர் சிலை இருக்கும்,

இங்கு நல்லூர் கந்தசாமி கோவிலில் முருகப்பெருமானுடைய வேல் கருவறையில் வைக்கப்பட்டிருக்கும். வருடா வருடம் கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 2011 இல் தெற்கில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இது கிளிகோபுரம் என கூறப்படுகிறது .2012 இல் வடக்கில் குபேர கோபுரம் கட்டப்பட்டது .  இங்கு பஜனைகள் நடைபெறுவது வழக்கம்.

திருவிழா காலங்களில் மாலையில் ஆன்மீக சொற்பொழிவு, நாட்டிய நடனம், இசை கச்சேரிகள் நடைபெறுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வரலாறுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருமுறை கோவில் இடிக்கப்படும் போதும் அதிமானது.

கோவிலுக்கு பின் இருக்கும் வரலாறு இந்த கோவிலை நிலைநாட்ட அவர்கள் பட்டகஷ்டங்களை பசுமரத்தாணிபோல் நெஞ்சில் பதித்தது. இந்த கட்டுரை வழியாக முருகப்பெருமானுடை அருளும், ஆசியும் நமக்கு கிடைக்கும்.

கந்தனுக்கு அரோகரா …

வேற்றவேல் முருகனுக்கு அரோகரா …

இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top