உலகில் ரொம்ப அழகான இலங்கை ரயில் பயணம்

இலங்கையின் இந்த ஒரு ரயில் பயணத்தை பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரே இடத்திற்கு இரண்டுமுறை வரும் ரயில் மலையை குடைந்துகொண்டு வெளியே வரும் 30 நிமிட பயணத்தில் நாம் பார்க்கும் 9 வளைவு பாலம், தூய்மையான ரயில் நிலையம். இலங்கையின் எல்ல ரயில் பயணத்தை பற்றிய சிறு தொகுப்பு.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் தெமோதரா. உலகிலேயே மிகவும்வித்தியாசமான மற்றும் இதுவரை யாராலும் வடிவமைக்கமுடியாத ஒரு ரயில் நிலையம்.
இந்த ரயில் நிலையம் மற்ற ஸ்டேஷன்போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டது அதோடு அழகானதும் கூட.
இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த தெமோதரா ரயில் நிலையம் அமைப்பை பார்க்கும் பொழுது பழங்கால கட்டிடம் போலகாட்சியளித்தாலும் சுற்றுலா பயணிகளின் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.
இலங்கையில் உள்ள பிரதானரயில் பாதையில் கடைசி நிலையம்.
இங்குள்ள ரயில் நிலையத்தின் தண்டவாள அமைப்பானது ஒரு பாம்பின் புற்றிலிருந்து வளைந்து நெளிந்து பாம்புவெளிவருவதை போல, ரயில் மலையின் அடிவாரத்தில் உள்ள சுரங்கப்பாதையின் வழியாக வெளிவருவதை நம்மால்பார்க்கமுடியும்.
மேலும் இதற்கு ஒரு வரலாற்று சுவடே உள்ளது. அதாவது ஒரு புகழ்பெற்ற இலங்கை பொறியாளரின்தலைப்பாகை எப்படி கட்டப்பட்டுள்ளதோ அதை போல இந்த ரயில் நிலையத்தை அமைக்க விரும்பியதாகவும் , இதனைஅடிப்படையாக கொண்டுதான் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஒரு மலையின் அடிவாரத்தில் நுழைந்து மலையை சுற்றி மேலே உள்ள ரயில் நிலையத்தை அடையுமாறுஅமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்ல ரயில் நிலையம்:
நம் வாழ்நாளில் பல ரயில் நிலையங்களை கடந்து வந்திருப்போம், ஆனால் ரயில் நிலையம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று உதாரணமாக இருக்கும் இந்த ரயில் நிலையம் இலங்கையின் எல்ல ரயில் நிலையம்.
மிகவும் சுத்தமானதாவும், அழகாகவும் பராமரிக்கப்படும் இந்த ரயில் நிலையத்தின் உள்ள ஒரு புத்த கோவில் உள்ளது.பிரிட்டிஷ் காலத்தில் வீடுபோன்றுகட்டப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தில் பசுமையான புல் தரைவிரிப்பு, செடி, கொடி, பழங்கால பொருட்கள் போன்றவற்றைபார்க்கலாம்.
ரயில் நிலையத்தில் பயணிகள் படிக்க நூலகமும் உண்டு. இதனால் பயணிகளுக்கு நேரம் போவதே தெரிவது இல்லை.
ரயில்நிலையத்தின் கழிவறையை பற்றி சொல்லியே ஆகவேண்டும், கால்கள் கழுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றவாசகத்துடன் மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
இங்கு எழுதப்பட்டிருக்கும் வாசகம் தமிழ், சிங்களம், ஆங்கிலமொழிகளில் எழுதப்பட்டிற்கும்.
வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த இடத்தில் உள்ள கடைகள் அவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. பலவண்ணங்களில் குப்பை கூடைகளை வைத்து குப்பைகளை கீழே போடாமல் தனித்தனியாக குப்பைக்கூடைகளில்சேகரிக்கின்றனர்.
தெமோதரா லூப் :
இந்த தெமோதரா ரயில் நிலையத்தில் இந்த ரயில்வே ஸ்டேஷன் மாதிரியை அழகாக வடிவமைத்து சுற்றுலாப்பயணிகள்பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியை கண்டு ரசித்த பிறகு வியூ பாயிண்ட்டிற்கு சென்று ரசித்தால் மேலும்கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும்.
உலகத்திலேயே ரயில் லூப் பாதை கொண்ட ஒரே ஒரு ரயில் நிலையம் இலங்கையில் உள்ள தெமோதரா ரயில் நிலையம்தான்.வேறு எங்கும் இது போன்ற சூழல் பாதை இல்லை.
தெமோதரா ரயில் நிலையத்திலிருந்து நுழைந்து,பின்னர் இங்குள்ளமலையை சுற்றி ரயில் நிலையத்தின் பாதையில் கட்டப்பட்ட ஒரு சுரங்கப்பாதையில் நுழைகிறது.பின்பு மறுபடியும் ரயில்நிலையத்தை அடையும் சுழற்சிக்கு பெயர் தான் தெமோதரா லூப் என்றழைக்கப்படுகிறது.
இந்த ரயில் பாதையின் வடிவ அமைப்பை பார்க்கும்பொழுது அக்கால பொறியாளர்களின் திறமை,படைப்பு மற்றும் கூர்மையானஅறிவுத்திறன் என உலக நாடுகளையே திரும்பி பார்கவைத்துள்ளனர்.
இன்றளவிலும் இவர்களுடைய இக்கட்டிட அமைப்பையாராலும் ஈடுசெய்ய முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த இரயில் நிலையம் பாரம்பரியமான கட்டிடக்கலை,அமைதியான சூழ்நிலை,இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்வசீகரமான தோற்றத்தை கொண்ட சுற்றுலா தலம்.
இங்கு வருகைபுரியும் சுற்றுலாபயணிகள் ரயில்நிலையத்தில் உள்ள வீயூபாயிண்ட்டிற்கு சென்று ரயில் சுரங்கப்பாதை வழியாக வெளிவரும் காட்சியை காண ஏராளமானோர் குவிகின்றனர்.
அதோடுதெமோதரா டூ எல்ல வரை பயணிக்கும் போது வரும் மற்றொரு அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் “Nine Arches Bridge “யை பார்க்கவும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி என்ன அந்த பாலத்தில்உள்ளது என்பதை பற்றியும் இதில் காண்போம்.
பயண சீட்டு:
ஒருவழியாக தெமோதரா இரயில் நிலையத்தை வந்தடைந்தோம்.அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் வாகனத்தைநிறுத்திவிட்டு டிக்கெட் கவுண்டரை நோக்கி புறப்பட்டோம்.
எங்களுக்கு முன்பாகவே பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்காத்திருந்தனர்.இந்த சுற்றுலாவில் வெளிநாட்டு டூரிஸ்ட் தான் கூட்டம் கூட்டமாக அதிகமாக இருந்தனர்.
இங்கு தெமோதராடூ எல்ல வரை செல்வதற்க்கு ரயில் கட்டணமாக ஒருவருக்கு இலங்கை பண மதிப்பில் ரூ.50 வசூலிக்கப்பட்டது.அதேபோலஇங்கு ஒரு நாளைக்கு குறைந்த அளவில் மட்டுமே ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது.
ஆதலால் ஆன்லைன் முன்பதிவு வெகு விரைவில் நிரம்பி விடுகிறது.ஆப் லைன் சேவை பயன்படுத்தப்படுவதால் சில நேரங்களில்அளவிற்க்கு அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
சில நேரங்களில் ரயில் பெட்டியில் நீண்ட தூரம் நின்று கொண்டேபயணிக்கும் சூழ்நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுகிறது.இதை மட்டுமே சுற்றுலா பயணிகள் சற்று கவனமாகபார்த்துக்கொள்ளவும்.
நாங்கள் செல்லும்பொழுது ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.சற்று நேரத்தில் ரயிலும்வந்தது.அடித்து பிடித்து ரயில் பெட்டியில் ஏறிவிட்டோம்.
உள்ளே சென்றால் சிறு நொறுக்கு தீனி கடைகள் ரயில் பெட்டியின்உள்ளே இருந்தது.படியில் நின்றுகொண்டு இயற்கையின் அழகை ரசித்தபடி அமைதியான ரயில் பயணத்தை அனுபவிக்கவிரும்பினோம்.
எங்களுக்கு முன்னாள் பெண் சுற்றுலா ஆர்வலர்கள் அனைத்து படிகளிலும் நின்றபடியும்,படியில் அமர்ந்தபடியும்சில புகைப்படங்களையும்,வீடியோக்களையும் எடுத்து மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
இந்த பயணத்தில் இயற்கையின் ஆச்சரியங்களை ரசிக்க விரும்பினால் விலையுர்ந்த ரயில் பெட்டிகளை தவிர்த்துவிட்டு,சாதாரண பெட்டியை தேர்ந்தெடுங்கள்.
காரணம் விலையுயர்ந்த பெட்டியில் குளிர்சாதன பொருட்கள் இருப்பதால்ஜன்னல்கள் திறக்க அனுமதி கிடையாது.ஜன்னல்கள் வழியாக வரும் இயற்கை அழகு, அதில் வீசும் குளிர்ந்த காற்று எனஎதையுமே நம்மால் ரசிக்க முடியாமல் போகும். உலகில் ரொம்ப அழகான இலங்கை ரயில் பயணம்
அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்காவில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அதிசயங்களில் ஒன்று இந்த “ஒன்பதுவளைவு பாலம்”. அப்படி என்ன இந்த பாலத்திற்கு அவ்வளவு சிறப்பு என்று நம்மில் பலர் நினைக்கலாம்.
நானும் இந்த பாலத்தைபார்ப்பதற்க்கு முன்பு அப்படி தான் நினைத்து கொண்டிருந்தேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலமானதுகடல்மட்டத்திலிருந்து 3100 அடி உயரத்தில் 91 மீட்டர் நீளம் உள்ள வளைந்து மற்றும் செங்குத்தாகவும்,சாய்ந்தும்காணப்படுகிறது.
இதன் மற்றொரு சிறப்பு சில பல போர்கள் காரணமாக இப்பாலத்தை கட்டும்பொழுது இரும்பு,எஃகு போன்றபொருள்கள் கிடைக்காமல் போனது.
உலோகங்கள் இல்லாமல் எப்படி பள்ளத்தாக்கிலிருந்து இப்பாலத்தை உருவாக்குவதுஎன பல குழப்பங்கள் ஏற்பட்டது.ஆனால் இன்று உலகில் உள்ள கட்டிட வல்லுநர்களே வியக்கும் இந்த பாலத்தை ஒரு சிறியஇரும்பு துண்டு கூட பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளது.
“உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள்” என்று ரெஜிஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் நம் கருத்துக்களைஎழுதலாம். எல்ல ரயில் நிலையத்திலிருந்து கொழும்புவிற்கு பயணம் செய்ய முடியும்.





